Meenam Rasi: இன்னும் ஆறே மாதம்தான்! மீனம் ராசியை வச்சு செய்யப்போகும் சனி பகவான்! ஜென்மசனி பாதிப்பு எப்படி இருக்கும்?
கும்பம் ராசியை ஒப்பிடும் போது மீனம் ராசிக்கு ஜென்ம சனியின் தாக்கம் சற்று குறைவாக இருக்கும். சனி பகவானின் மூலத்திரிகோண வீடாக கும்பம் உள்ளதால் அதன் தாக்கம் அதிகம் ஆக உள்ளது. ஆனால் குரு பகவானின் வீடான மீனம் ராசிக்கு இந்த தாக்கம் சற்று குறைவாகவே இருக்கும்.
காலபுருஷ தத்துவத்திற்கு 12ஆம் ராசியான மீனம் ராசிக்கு கடந்த 2020ஆம் ஆண்டிலேயே ஏழரை சனியின் முதல் பகுதியான விரைய சனி தொடங்கிவிட்டது. பொருளாதாரம், மன அழுத்தம், உடல்நல பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகளை சந்தித்து இருப்பீர்கள். வரும் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் தேதி முதல் ஜென்ம சனியின் தாக்கத்திற்குள் மீனம் ராசிக்கார்கள் செல்லப்போகிறீர்கள்.
புதிய முடிவுகளில் கவனம் அவசியம்
ஜென்மசனி காலத்தில் உங்களின் வேலை, பொருளாதாரம் உள்ளிட்ட வருமானம் வரக்கூடிய இடங்களில் முதற்கட்ட பாதிப்புகள் இருக்கும். இந்த நேரத்தில் தேவை இல்லாத செலவுகள், கடன்களை வாங்குவதை மீனம் ராசிக்காரர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். பணியில் இருக்கும் மீனம் ராசிக்காரர்கள் ஜென்சனி முடியும் வரை புதிய தொழில் தொடங்கும் முடிவுகளை முடிந்தவரை தள்ளிப்போடுவது நல்லது. வேலைத் தேடும் மீனம் ராசிக்காரர்கள், அல்லது வேலைகளை மாற்றத் திட்டமிடும் மீனம் ராசிக்காரர்கள் 6 மாதத்திற்குள் சரியான வேலையை தேர்வு செய்து அதில் அமர்ந்து கொள்வது முக்கியம்.
சோம்பல் தரும் சனி பகவானின் தாக்கம்
இந்த காலகட்டத்தில் உடல்நலனின் அதிக அக்கரை காட்டுவது அவசியம். சனி பகவானின் தாக்கத்தால் சோம்பேறித்தனம் அதிகமாக இருக்கும். தாமதமாக எழுதல், தாமதமாக காரியத்தை செய்தல் உள்ளிட்ட விஷயங்களில் மிக கவனமாக இருக்க வேண்டும்.
உங்கள் நேரத்தை எடுத்துக் கொள்ளும் வீண் செயல்பாடுகளை தவிர்த்து உடற்பயிற்சியில் கவனம் செலுத்துவது நல்லது. இல்லை எனில் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
அதிகம் பாதிப்பு யாருக்கு?
வளர்பிறை சந்திர திசை நடப்பவர்களுக்கு பெரிய சிக்கல்கள் இருக்காது என்றாலும் ஓரளவு மன அழுத்தம் இருக்கும். செவ்வாய் திசை நடப்பவர்கள் வீடு, வாகனம் ஆகியவற்றை வாங்கும் நிலை உண்டாகும். உங்கள் ஜாதகத்தில் குரு பகவான் செவ்வாயை பார்த்தால் கூடுதல் பலமாக இருக்கும். குரு திசையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றங்கள் இருக்கும். இருப்பினும் உடல் மற்றும் தொழில் விவகாரங்களில் சிறிய பிரச்னைகள் ஏற்படலாம்.
இந்த காலகட்டத்தில் சூரியன் மற்றும் சனி திசை நடப்பவர்களுக்கு சனி பகவான் தரும் பாதிப்புகள் அதிகம் ஆக இருக்கும். சூரிய திசையில் இருப்பவர்கள் சிவவழிபாடு செய்வது நன்மைகளை தரும். சுக்கிர திசை, புதன் திசையில் இருப்பவர்களுக்கு மிதமான தாக்கம் இருக்கும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும். ஆன்மீகம் தொடர்பான பல தகவல்களை தெரிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்து இருங்கள்!