’மேஷம் முதல் மீனம் வரை!’ உங்கள் ஜாதகத்தில் அதிர்ஷ்டம் தரும் 12ஆம் இடம் சொல்லும் ரகசியங்கள்!
By Kathiravan V Sep 01, 2024
Hindustan Times Tamil
ஜோதிடத்தில் 12 ஆம் இடம் என்பது அயன சயன போகம் மற்றும் மோட்சம் ஆகியவற்றை குறிப்பதாக உள்ளது. இந்த பிறவி இதோடு போதும், இறைவனின் பாதம் பாதத்தில் சென்று சரண் அடைவதை பற்றி இந்த இடம் சொல்கிறது. ஒருவருக்கு சுகபோகம், கட்டில் சுகம், நல்ல தூக்கம், பயணங்கள் உள்ளிட்டவற்றால் ஏற்படும் பலன்கள் குறித்து 12ஆம் இடம்பேசுகின்றது. 12ஆம் இடம் வலுத்தவர்களுக்கு சுற்றிக்கொண்டே இருந்தால்தான் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.
தந்தையின் சொத்துக்கள், நீங்கள் தொடங்கும் தொழில், உங்கள் குழந்தைகளின் ஆயுள் ஸ்தானம், உங்க மனைவி வழியில் வரும் இரண்டாவது சொத்துக்கள், உங்கள் வருமானத்தில் கிடைக்கும் லாபம், உங்கள் இளைய சகோதரன் அல்லது இளைய சகோதரி செய்யக் கூடிய தொழில், வீடு கட்டும் யோகம் ஆகியவற்றை குறிக்கின்றது. உங்கள் ஜாதகத்தில் 12ஆம் இடத்திற்கு உரிய அதிபதி ஆட்சியோ அல்லது உச்சமோ பெற்று இருந்தால் விமல யோகம் உண்டாகும்.
உணவு, ஆடைகள், வாகனங்கள், வீடு உள்ளிட்ட பொருளாதார வளர்ச்சியை குறிக்கும். கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்த ஒருவரது ஜாதகத்தில் 12 ஆம் இடம் வலுப்பெற்று இருப்பது அவசியம். வெளிநாட்டிற்கு சென்று வாழ ஒருவரது ஜாதகத்தில் 12ஆம் இடம் வலுப்பெற்று இருப்பது அவசியம் ஆகும். 12ஆம் இடம் வலுப்பெற்றவர்களுக்கு இடம்பெயர்வு அடைவதன் மூலம் புகழ், வளர்ச்சி கிடைக்கும்.
ஒருவரது ஜாதகத்தில் 8ஆம் இடமும், 12ஆம் இடமும் திடீர் அதிர்ஷ்டத்தை குறிக்கின்றது. ஒருவர் அழியாத புகழுடன் வாழ 12ஆம் இடம் வலுப்பெற்று இருப்பது அவசியம். ஒருவரது ஜாதகத்தில் 12ஆம் இடம் கெட்டு போய் இருந்தால் பணம், குழந்தை, வீடு, சொத்து, தொழில், கௌரவம் உள்ளிட்ட எல்லாவற்றையும் இழந்து மீண்டும் கிடைக்கும் நிலை உண்டாகும்.
ஒருவருக்கு 12ஆம் இடம் பலம் பெற்றால் நல்ல நிம்மதியான தூக்கம் வரும். 12 இடம் கெட்டுப்போனால் நிம்மதியான தூக்கம் வராது. வெளிநாடு சென்று படிக்கவும், அங்கேயே செட்டில் ஆகவும், வெளிநாட்டில் சொத்துக்கள் வாங்கவும் 12ஆம் இடம் வலுத்து இருப்பது அவசியம். ஒருவருக்கு 12 ஆம் இடம் கெட்டுப்போய் இருந்தால், சான்றிதழ், வங்கி, நிலம் சார்ந்த விஷயங்களில் தடைகளும், பிரச்னைகளும் இருக்கும்.
12ஆம் இடம் கெட்டுப்போனவர்களுக்கு இடது கை பழக்கம் இருக்கும். யுத்தம் செய்து ஜெயிக்க வேண்டும் எனில் ஜாதகத்தில் 12ஆம் இடம் வலுப்பெற்று இருப்பது மிக அவசியம் ஆகும்.
தினமும் 10 ஆயிரம் அடிகளுக்கு மேல் நடப்பதால் உடல் ஆரோக்கியத்துக்கு கிடைக்கும் நன்மைகள் என்னெவல்லாம் என்பதை பார்க்கலாம்