Kumbam Rasipalangal: கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்! அடுத்த 6 மாதங்களில் செய்ய வேண்டியது என்ன?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Kumbam Rasipalangal: கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்! அடுத்த 6 மாதங்களில் செய்ய வேண்டியது என்ன?

Kumbam Rasipalangal: கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்! அடுத்த 6 மாதங்களில் செய்ய வேண்டியது என்ன?

Kathiravan V HT Tamil
Published Aug 31, 2024 09:51 PM IST

வரும் 2025ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி அடுத்த சனிப்பெயர்ச்சி நடைபெறுகின்றது. உங்கள் ராசிக்கு 2ஆம் இடத்திற்கு சனி பகவான் செல்கிறார். தற்போது கும்பம் ராசியில் உள்ள சனி பகவான் மீனம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.

Kumbam Rasipalangal: கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்! அடுத்த 6 மாதங்களில் செய்ய வேண்டியது என்ன?
Kumbam Rasipalangal: கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்! அடுத்த 6 மாதங்களில் செய்ய வேண்டியது என்ன?

இது போன்ற போட்டோக்கள்

கடும் சங்கடங்களை சந்தித்த கும்பம்

கடந்த மூன்று ஆண்டு காலம் கும்பம் ராசிக்கு சற்று கடினம் நிறைந்த காலமாக இருக்கும். 2020ஆம் ஆண்டு முதல் அதிகபட்ச சிக்கல்கள், பிரச்னைகளை கும்பம் ராசிக்காரர்கள் சந்தித்து வருகின்றனர். உறவுகள்,நட்புகள், பணம், பொருளாதாரம் ஆகிய விவகாரங்களில் கடும் மன வருத்தங்களை கும்பம் ராசிக்காரர்கள் சந்தித்து இருப்பீர்கள். 

சனி பகவானின் பெயர்ச்சி 

வரும் 2025ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி அடுத்த சனிப்பெயர்ச்சி நடைபெறுகின்றது. உங்கள் ராசிக்கு 2ஆம் இடத்திற்கு சனி பகவான் செல்கிறார். தற்போது கும்பம் ராசியில் உள்ள சனி பகவான் மீனம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். உங்களின் 2ஆம் இடமான குருவின் வீட்டுக்கு வரும் சனி பகவான் முழுமையான சுபத்துவத்தை அடைவார். இடைப்பட்ட 6 மாதங்கள் சற்று கடுமையாகவே இருக்கும்.  

சனியின் மூலத்திரிகோண வீடான கும்பம்

சனி பகவானின் மூலத்திரிகோண வீடாக கும்பம் உள்ளது. பாவகிரகான சனி பகவான் தன்னுடைய வீட்டுக்கு வந்தாலும் தீயபலன்களையே செய்வார்.  அடுத்த 6 மாத காலத்தில் இயல்பாகவே உங்களுக்குள் சில மன மாற்றங்கள் நிகழும். பிடிக்காத வேலையில் இருப்பவர்கள், பிடிக்காத உறவுகளில் இருப்பவர்களுக்கு மனதில் அடுத்து என்ன என்பதற்கான நம்பிக்கை கிடைக்கும். நீண்ட நாட்களாக தொய்வில் இருந்த சிக்கல்கள் தீரும். கடன், நோய், எதிரியின் பாதிப்புகளில் இருந்த கும்பம் ராசிக்காரர்கள் விடுபடுவார்கள். சனி பகவான் விலகும் போது இந்த மூன்றும் விலகும் நிலை உண்டாகும். 

கும்ப ராசிக்கு கிடைக்கும் பலன்கள் 

ஜென்மசனி கொடுத்து வந்த தீய பலன்கள் படிப்படியாக குறையும் என்பதால் அடுத்து எழுந்து ஓடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நல்ல தசைகள் நடக்கும் கும்பம் ராசிக்காரர்களுக்கு இது நல்ல காலமாக அமையும். புதிய தொழில் தொடங்குதல், புதிய வேலையில் சேருதல், வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ளுதல், புதிய படிப்புகளில் சேருதல் உள்ளிட்ட வளர்ச்சி பாதைகளுக்கான முயற்சிகள் கைக்கொடுப்பதாக இருக்கும். 

நீண்ட நாட்களாக நோய் உள்ளிட்ட பாதிப்புகளில் இருந்த கும்பம் ராசிக்காரர்களுக்கு புதிய மருந்துகள் கைக்கொடுக்கும். இயற்கை உணவுகளை எடுத்துக் கொள்வது பலன் தரும் அம்சமாக இருக்கும். இந்தகாலட்டத்தில் முழு கவனத்துடன் திட்டமிட்டு உங்கள் வாழ்கை சார்ந்த இலக்குகளை வலுப்படுத்துவதற்கான சிந்தனைகள் இருப்பது அவசியம். 

பரிகாரங்கள்

தான தர்மங்கள் செய்தல், குலதெய்வ வழிபாடு ஆகியவற்றை மேற்கொள்ளுதல் ஜென்மசனியின் தாக்கத்தால் வரும் பிரச்னைகளை குறைப்பதாக அமையும். 

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள் தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும். ஆன்மீகம் தொடர்பான பல தகவல்களை தெரிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்து இருங்கள்!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Whats_app_banner