விஜயதசமி பூஜைக்கான நல்ல நேரம்.. புரட்டாசி சனிக்கிழமை.. இன்று அக்டோபர் 12.. வழிபாட்டின் பலன்கள் இதோ!
சனிக்கிழமையில் சனிபகவான், பெருமாள், ஆஞ்சநேயர் போன்ற கடவுள்களுக்கு மிகவும் விஷேசமான நாள். இந்த நாளில் இந்த தெய்வங்களை வழிபடுவது வாழ்வில் அனைத்து நன்மைகளையும் கொண்டு வரும் என்பது மக்களின் நம்பிக்கை. விரிவான விபரங்களை இங்கு பார்க்கலாம். இன்று விஜயதசமி திருநாள்
இன்று 2024 அக்டோபர் மாதம் 12 ம் தேதி சனிக்கிழமை. இன்று காலை மாலை நல்ல நேரம், எமகண்டம், எப்போது என்பதை பார்க்கலாம். இன்று எந்த கடவுளை வணங்குவது உங்களுக்கு நன்மை பயக்கும். சனிக்கிழமை வழிபாட்டுக்கு உகந்த தெய்வங்கள் எவை. தெய்வங்களின் வழிபாட்டு முறைகள் குறித்த சில தகவல்களை இங்கு பார்க்கலாம். சனிக்கிழமையில் சனிபகவான், பெருமாள், ஆஞ்சநேயர் போன்ற கடவுள்களுக்கு மிகவும் விஷேசமான நாள். இந்த நாளில் இந்த தெய்வங்களை வழிபடுவது வாழ்வில் அனைத்து நன்மைகளையும் கொண்டு வரும் என்பது மக்களின் நம்பிக்கை. விரிவான விபரங்களை இங்கு பார்க்கலாம். இன்று விஜயதசமி திருநாள்
இன்றைய பஞ்சாங்கம்
தமிழ் ஆண்டு : குரோதி வருடம்
மாதம் : புரட்டாசி மாதம்
தேதி: 26
கிழமை : சனிக்கிழமை
பிறை : வளர்பிறை
திதி : நவமி காலை 6 மணி 8 நிமிடம் வரை பின் தசமி அக்.13 அதிகாலை 4 மணி 36 நிமிடம் வரை பின்பு ஏகாதசி
நட்சத்திரம் : திருவோணம் அக்.13 தேதி 54 நிமிடம் வரை பின்பு அவிட்டம்
சூரிய உதயம்:
காலை : 6 மணி 02 நிமிடம்
நல்ல நேரம்
காலை : 10மணி 45 நிமிடம் முதல் 11 மணி 45 நிமிடம் வரை
மாலை : 4 மணி 45 நிமிடம் முதல் 5 மணி 45 நிமிடம் வரை
நல்ல காரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டிய நேரம்
ராகுகாலம் : காலை 9 மணி முதல் காலை 10 மணி 30 நிமிடம்
குளிகை : காலை 6 மணி முதல் 7 மணி 30 நிமிடம் வரை
எமகண்டம் : பிற்பகல் 1 மணி 30 நிமிடம் முதல் முதல் 3 மணி வரை
சந்திராஷ்டம நட்சத்திரம் : மிருகசீருஷம், திருவாதிரை
விஜயதசமி வழிபாடு
விஜயதசமி நாளில் படிப்பு... கலை மற்றும் தொழில் தொடர்பான புதிய முயற்சிகளை தொடங்க நல்ல நாள் ஆகும். அதன் அடிப்படையிலேயே குழந்தைகளுக்கு வித்தைகளை கற்றுக் கொடுக்கும் வகையில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. 12-10-2024 அன்று விஜயதசமி நாள் அன்று காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையும், பின்னர் காலை 10.35 மணி முதல் 1.20 வரையும் வித்யாரம்பம் மற்றும் பூஜைகளை செய்ய உகந்த நாள். மாலையில் 6 மணிக்கு மேலும் பூஜை செய்து கொள்ளலாம்.
சனிக்கிழமை வழிபாடு
இன்று சனிக்கிழமை. சனிக்கிழமையில் பொதுவாக சனிபகவான், பெருமாள், ஆஞ்சநேயர் போன்ற கடவுள்களுக்கு மிகவும் விஷேசமான நாள். இந்த நாளில் இந்த தெய்வங்களை வழிபடுவது வாழ்வில் அனைத்து நன்மைகளையும் கொண்டு வரும் என்பது மக்களின் நம்பிக்கை.
பொதுவாக சனிக் கிழமையில் சனி பகவானின் அருளை பெற வீட்டில் சமைக்கும் சாதத்தில் தயிர் கலந்து அதில் கருப்பு எள்ளை சேர்க்க வேண்டும். இந்த உருண்டைகளை காக்கைக்கு வைக்க வேண்டும். இதனால் சனி தோஷத்தை நீக்கி வாழ்வில் அமைதி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ஆஞ்சநேயருக்கு உகந்த நாள்
சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கும் மிகவும் உகந்த நாள் ஆகும். இந்த நாளில் வெண்ணெய் சாற்றி ஆஞ்சநேயரை மனதார வழிபடுவது உங்கள் கஷ்டங்களை நீக்கும். சனிக்கிழமையில் அனுமன் சாலிசாவை படிப்பது மிகவும் விஷேசம்.
புரட்டாசி சனி
சனிக்கிழமையில் பெருமாளை வழிபாடு செய்வதால் நம் பிரச்சனைகள் தீரும் என்பது நம்பிக்கை. பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி வழிபடுபதால் வாழ்வில் பிரச்சனைகள் தீரும். துளசியில் மகாலட்சுமி தேவி வாசம் செய்கிறார் என்பது நம்பிக்கை. இன்று குறிப்பாக புரட்டாசி சனி என்பது பெருமாளுக்கு மிகவும் உகந்த நாள்.இந்நிலையில் இன்று பெருமாளுக்கு தளிகை போட்டு வழிபாடு செய்வதால் நம் வாழ்வில் செல்வம் பெரும். சங்கடங்கள் தீரும் என்பது நம்பிக்கை.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
ஆன்மீகம் தொடர்பான பல தகவல்களை தெரிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்து இருங்கள்!
டாபிக்ஸ்