தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rajayoga In Gemini: மிதுன ராசியில் ஏற்படும் சுக்ர ஆதித்ய ராஜயோகம்.. துன்பத்தை உரித்தெடுக்கப்போகும் ராசிகள்

Rajayoga in Gemini: மிதுன ராசியில் ஏற்படும் சுக்ர ஆதித்ய ராஜயோகம்.. துன்பத்தை உரித்தெடுக்கப்போகும் ராசிகள்

Marimuthu M HT Tamil
Jun 21, 2024 08:39 PM IST

Rajayoga in Gemini: மிதுன ராசியில் கடந்த ஜூன் 15ஆம் தேதி முதல் சுக்ர ஆதித்ய ராஜயோகம் ஏற்பட்டுள்ளது. இதனால், மூன்று ராசிகள் அபரிமிதமான வளர்ச்சியை அடையப்போகின்றனர். அந்த ராசிகள் குறித்துப்பார்ப்போம்.

Rajayoga in Gemini: மிதுன ராசியில் ஏற்படும் சுக்ர ஆதித்ய ராஜயோகம்.. துன்பத்தை உரித்தெடுக்கப்போகும் ராசிகள்
Rajayoga in Gemini: மிதுன ராசியில் ஏற்படும் சுக்ர ஆதித்ய ராஜயோகம்.. துன்பத்தை உரித்தெடுக்கப்போகும் ராசிகள்

இதனால் சுக்கிர பகவானும், சூரிய பகவானும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்கின்றன. இதனால், மிதுன ராசியில் சூரிய பகவானும் சுக்கிர பகவானும் சேர்ந்து ‘சுக்ராதித்ய ராஜயோகம்’ உண்டாகிறது.

ஆகையால், சில ராசியினர் அபரிமிதமான வாய்ப்புகளைப் பெறவுள்ளனர். குறிப்பாக, சுக்கிரன் மற்றும் சூரியன் இருவரும் சேர்ந்தால் வரவு செலவுகளை சரிசெய்வார்கள். பிரச்னைகள் நீங்கி வெற்றி அடைவார்கள். சுக்ராதித்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம்பெறப்போகும் ராசிகள் குறித்துக் காண்போம்.

கன்னி:

கன்னி ராசியினருக்கு, சுக்ராதித்ய ராஜயோகம் உண்டாகியுள்ளது. இதன் காரணமாக, நீண்ட நாட்களாக முற்றுப்பெறாமல் இழுத்தடித்துக்கொண்டு இருந்த பணிகள் நிறைவடையும். வெகுநாட்களாக உங்களைச் சுற்றி இருந்த கெட்டப்பெயர் நீங்கும். வம்பு வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். கன்னி ராசியினருக்கு முன்பு இருந்ததை விட வருவாய் அதிகரிக்கும். தொழில் செய்ய மிகவும் சிரமப்பட்டு வந்த கன்னி ராசியினருக்கு புதிய வாடிக்கையாளர்கள் அமைவர். இதனால் தொழிலில் வளர்ச்சி உண்டாகும். உடலில் இருந்த பிணி தீரும். கெட்டபெயர் நீங்கி நல்ல பெயர் கிடைக்கும். 

கும்பம்: 

கும்ப ராசியின் 5ஆம் இல்லத்தில் ‘சுக்ர ஆதித்ய ராஜயோகம்’ ஏற்பட்டிருப்பது, இந்த ராசியினருக்கு மகிழ்ச்சியைத் தரும். சரியான வேலைவாய்ப்பு இன்றித் தவித்து வந்த கும்ப ராசியினருக்கு, ஊதிய உயர்வுடன் கூடிய வேலைவாய்ப்புக் கிடைக்கும். கும்ப ராசியினருக்கு வணிக ரீதியிலாக கிடைக்க வேண்டிய உதவிகள் நண்பர்கள் மூலமாகவோ, உறவினர்கள் மூலமாகவோ, மூன்றாம் நபர் மூலமாகவோ கிடைக்கும். பொருளாதாரத்தில் இருந்த பின் தங்கிய நிலை மாறி, சற்று நல்ல முறையில் பொருள் ஈட்டி, அதைச் சேமிக்கவும் கற்றுக்கொள்வீர்கள். உடல்நலனில் அக்கறை செலுத்துங்கள். பொறுமை தேவை. 

சிம்மம்: 

சிம்ம ராசியின் 11ஆம் இல்லத்தில் ‘ சுக்ர ஆதித்ய ராஜயோகம்’ ஏற்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் சிம்ம ராசியினருக்கு பணியிடத்தில் எதிரிகள் தொல்லை நீங்கும். சிலர் புரோமோஷன் பெறலாம். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். வம்பு வழக்குகள் நீங்கும். சிம்ம ராசியினருக்கு சமூகத்தில் இருந்த அவப்பெயர் நீங்கி மரியாதை கூடும். தொழில் செய்யும் சிம்ம ராசியினருக்கு இந்த காலத்தில் நல்ல வாய்ப்புகள் உண்டாகும். இதனால் லாபம் பெறுவது உறுதி. வெளிமாநிலம், வெளிநாடு சென்றுவரும் வாய்ப்பு கிடைக்கும். 

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்