தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  தீபாராதனை பிரசாதம் நன்மைகளைத் தரும்!

தீபாராதனை பிரசாதம் நன்மைகளைத் தரும்!

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 30, 2022 10:03 PM IST

நாகர்கோவில் கிருஷ்ணன் கோயிலின் சிறப்பு அம்சங்கள் குறித்து இங்கே காணலாம்.

கிருஷ்ணன் கோயில்
கிருஷ்ணன் கோயில்

இந்த கோயிலில் உள்ள நவநீத கிருஷ்ணர் தனது இரு கைகளிலும் வெண்ணெய்யை ஏந்தி நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மன்னரும் கிருஷ்ணனின் மீது கொண்ட பக்தியால் இங்கேயே தங்கி வழிபட்டதாகத் தல வரலாறு கூறுகிறது.

மற்ற கோயில்களைப் போல அல்லாது கிருஷ்ணர் ஜெயந்தியைத் தவிர்த்து மற்ற அனைத்து நாட்களிலும் இரவு எட்டு மணிக்கு நடை அடைக்கப்பட்டு விடும். அப்படி நடை அடைக்கும் முன்னர் கிருஷ்ணரை வெல்லத்தொட்டிலில் படுக்க வைத்து பக்தர்கள் தாலாட்டு பாடி தூங்க வைப்பது தான் இன்றும் நடக்கும் நடைமுறை.

இந்தக்கட்சியைக் கண்டு தீபாராதனை பிரசாதத்தை அருந்துபவர் நினைத்த காரியம் நடக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. கோயிலின் உட்பிரகாரத்தில் கருடாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர்.

கோயிலின் உள்ளே அமைந்துள்ள புனித கிணற்றின் அருகே சிவலிங்கமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சன்னிதானத்தின் காவல் தெய்வங்களாக இரண்டு பக்கமும் துவாரகை பாலகர்கள் கைகளில் சங்கும் சக்கரமும் வைத்துள்ளனர். இவர்களிடம் அனுமதி பெற்றுத் தான் உள்ளே சென்று கிருஷ்ணரையும் தரிசிக்க முடியுமாம் இதுதான் கோயிலின் மரபு.

இந்த கோயிலைப் பொறுத்தவரைக் கொடிமரத்திலேயே நவகிரகங்களுக்கும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் கொடிமரத்தைச் சுற்றி வீற்று இருக்கின்றார்கள். கோயிலின் உள்ளே உள்ள சாஸ்தாவின் முன்பு விளக்கின் தீபங்களை ஏற்றி 41 நாட்கள் வழிபட்டால் நினைத்த காரியங்கள் நடக்கும். நோய்கள் தீரும், திருமணம் நடக்காத பெண்களுக்குத் திருமண வாக்கியம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கோயிலின் உள்ளே வீற்றிருக்கும் பூதத்தான் இரவு நேரங்களில் பாதுகைகளை அணிந்து கோயில் சுற்று வட்டார பகுதி மக்களைப் பாதுகாக்கின்றார் என மக்கள் நம்புகின்றனர்.

WhatsApp channel