Monday Temple: குதிரை முகம் கொண்ட மகள்.. வேண்டிக்கொண்ட மன்னன்.. அருள் புரிந்த கைலாசநாதர்
Monday Temple: அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான். திருநெல்வேலி மாவட்டம் முறப்பநாடு அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் கைலாசநாதர் எனவும் தாயார் சிவகாமி தேவி என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்ட வருகின்றனர்.
Monday Temple: இந்தியா முழுவதும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்ட வருகின்றன. தற்போது மட்டுமல்ல ஆதிகாலம் தொடங்கி இன்று வரை சிவபெருமானுக்கு பக்தர்கள் குறைந்தபாடு கிடையாது. குறிப்பாக தமிழ்நாட்டில் சிவபெருமானுக்கு மிகப்பெரிய கோயில்கள் கட்டி வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்துள்ளன.
உலகம் முழுவதும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டள்ளன இன்றுவரை காலத்தால் அழிக்க முடியாத சரித்திர குறியீடாக அந்த கோயில்கள் திகழ்ந்து வருகின்றன. பல எல்லைகளைக் கடந்து வெளியே சென்ற மன்னர்கள் தங்களது பக்தியை வெளிப்படுத்துவதற்காகவும் தங்களது வெற்றி சின்னமாகவும் குலதெய்வமாக விளங்கிய சிவபெருமானை அந்த இடத்தில் வழிபட்டு கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் திரும்பும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இன்று வரை பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் அந்த கோயில்கள் கம்பீரமாக நின்று வருகின்றன.
அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான். திருநெல்வேலி மாவட்டம் முறப்பநாடு அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் கைலாசநாதர் எனவும் தாயார் சிவகாமி தேவி என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்ட வருகின்றனர்.
தல சிறப்பு
இந்த திருக்கோயில் நவகைலாயங்களில் ஐந்தாவது திருக்கோயிலாக விளங்கி வருகின்றது. குரு பகவானின் தளமாக இந்த கோயில் விளங்கி வருகின்றது. குறிப்பாக இந்த கோயிலில் சிறப்பு என்னவென்றால் நந்தி பெருமான் குதிரை முகத்தோடு காட்சி கொடுத்து வருகிறார். பைரவர் சன்னதியில் இரண்டு பைரவர்கள் காணப்படுகின்றனர்.
அதுவே இந்த கோயிலின் மிகப்பெரிய சிறப்பாகும் இது சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டி இருப்பவர்கள் இந்த திருக்கோயிலில் வழிபட்டால் அனைத்தும் நிவர்த்தி அடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
குதிரை முக நந்தி
குதிரை முகம் கொண்ட நந்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக விளங்கி வருகிறது. உரோமச மகரிஷிக்கு சிவபெருமான் குருபகவானாக காட்சிக் கொடுத்தார். அதனால இது குருபகவானின் தலமாக திகழ்ந்து வருகிறது. தனது முற்பிறவி பாவத்தை ஏற்றுக் கொண்டதன் காரணமாக நந்தி குதிரை முகத்தோடு காட்சி கொடுத்து வருகிறார்.
தல புராணம்
ஒரு காலத்தில் இங்கு இருந்த சோழ மன்னன் ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது அந்த குழந்தைக்கு குதிரை முகம் இருந்துள்ளது. ஆச்சரியத்தில் இருந்த மன்னனுக்கு கவலை சூழ்ந்தது. இந்தக் குதிரை முகம் மாற வேண்டும் என்பதற்காக சிவபெருமானை நோக்கி அந்த மன்னன் பிரார்த்தனை செய்தார்.
உடனே மன்னன் முன்பு தோன்றிய சிவபெருமான் தாமிரபரணி ஆட்சியில் நீராடும் படி கூறியுள்ளார். உடனே சோழ மன்னன் தாமிரபரணி ஆற்றில் நீராடினார். உடனே அவரது மகளின் குதிரை முகம் மனித முகமாக மாறியது. அதன் காரணமாக அந்த இடத்திலேயே சோழ மன்னன் சிவபெருமானுக்கு கோயில் எழுப்பி வழிபாடுகளை நடத்தினார். அதே போல இந்த கோயிலை வல்லாள மகாராஜா கட்டியதாக கூறப்படுகிறது.
நவகைலாய கோயில்களில் இது ஐந்தாவது கோயிலாக திகழ்ந்து வருகின்றது. நவகிரகங்களில் குரு பகவானின் ஸ்தானத்தை பெருமைப்படுத்தும் கோயிலாக இது திகழ்ந்து வருகின்றது. காசியில் கங்கை நதி எப்படி வடக்கு புறத்திலிருந்து தெற்கு புறம் நோக்கி செல்கின்றதோ அதேபோல முறப்பநாட்டிலும் தாமிரபரணி ஆறு வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செல்கிறது இது தெட்சண கங்கை என கூறுகிறார்கள்.