Saturday Temple: சிவப்பு நிறமாக மாறிய குளம்.. தண்ணீருக்கு அடியில் சோமநாதர்.. கோயில் கட்டிய சோழ மன்னன்
Saturday Temple: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் தஞ்சாவூர் மாவட்டம் பெருமகளூர் அருள்மிகு சோமநாதர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் சோமநாத முடையார் தாயார் சுந்தராம்பிகை என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.
Saturday Temple: உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை கொண்டிருக்க கூடியவர் சிவபெருமான். திரும்பும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக இந்தியாவில் சிவபெருமான் ஆதி கடவுளாக திகழ்ந்து வருகின்றார்.
குறிப்பாக தமிழ்நாட்டில் சிவபெருமான் குலதெய்வமாக திகழ்ந்து வருகின்றார். ஆதிகாலம் தொடங்கி இன்று வரை சிவபெருமானுக்கு பக்தர்கள் கூட்டம் குறைந்தபாடு கிடையாது. மனிதர் இனம் தோன்றுவதற்கு முன்பே சிவலிங்கத்தை உயிரினங்கள் வணங்கியதாக புராணங்களில் கூறப்படுகின்றன.
அனைத்து உயிரினங்களுக்கும் அருள் ஆசி வழங்கக்கூடிய கடவுளாக சிவபெருமான் விளங்கி வருகின்றார். சிவபெருமான் மீது ஈடுபாடு கொண்ட மன்னர்கள் மண்ணுக்காக ஒரு பக்கம் போரிட்டு வந்தாலும் தங்களது பக்தியை வெளிப்படுத்துவதற்காக மிகப்பெரிய கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர்.
பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்று வரை காலத்தால் அழிக்க முடியாத சரித்திர குறியீடாக வந்து கோயில்கள் விளங்கி வருகின்றன. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் தஞ்சாவூர் மாவட்டம் பெருமகளூர் அருள்மிகு சோமநாதர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் சோமநாத முடையார் தாயார் சுந்தராம்பிகை என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.
தல சிறப்பு
எங்க வீட்டில இருக்கக்கூடிய சிவலிங்கம் வெள்ளை நிறத்தில் சதுர வடிவ பீடத்தில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமானுக்கு மாதம் தோறும் வரக்கூடிய மூன்றாம் பிறை திருநாளில் அபிஷேகம் செய்து வழிபட்டால் நினைத்த காரியம் அனைத்தும் நிறைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
பெண் குழந்தை வேண்டி பிரார்த்தனை செய்பவர்கள் இந்த கோயிலுக்கு வந்து வழிபட்டால் அவர்களுக்கு பெண் குழந்தை பிறக்கும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது. திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், தொழில் பாக்கியம் உள்ளிட்டவைகள் அனைத்தும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
தாமரை தண்டு போல இருக்கும் லிங்கம்
இந்த கோயிலில் இருக்கக்கூடிய லட்சுமி தீர்த்தம் சிவபெருமானின் தலையில் இருக்கக்கூடிய கங்கையில் இருந்து தோன்றியதாக கூறப்படுகிறது. அந்த லட்சுமி தீர்த்தத்தில் உருவான தாமரைத் தண்டில் இருந்து இந்த லிங்கம் உருவானதாக கூறப்படுகிறது. இந்த உலகில் இருக்கக்கூடிய மக்களுக்காக திரிபுவன சித்தரின் தவத்தால் இங்கு வீற்றிருக்கக்கூடிய சிவபெருமானும் அம்பிகையும் பிரதிஷ்டை செய்யப்பட்டு கோயில் எழுப்பப்பட்டுள்ளது.
இங்கு வீற்றிருக்கக்கூடிய லிங்கமானது கல்லால் ஆகவில்லை தாமரை தண்டினால் உருவாக்கப்பட்டுள்ளது. தாமரைத் தொண்டினால் பாண லிங்கமே வடிக்கப்பட்ட காரணத்தினால் இது மிகவும் அபூர்வலிங்கமாக கருதப்படுகிறது. இதுபோன்ற அபூர்வ லிங்கத்தை எங்கும் காண முடியாது.
தல வரலாறு
பெருமகளூர் கிராமத்தில் இருக்கக்கூடிய ஒரு குளத்தில் சோழ மன்னனின் யானை ஒன்று அந்த குளத்தில் இருந்த செந்தாமரையை பறிக்க முயன்ற போது அந்த குளம் சிவப்பு நிறமாக மாறி உள்ளது. இதுகுறித்து அறிந்த மன்னன் உடனே அந்த குலத்திற்கு வந்துள்ளார் தண்ணீருக்கு அடியில் தேடிப் பார்த்ததில் அங்கு ஒரு சிவலிங்கம் இருப்பதை கண்டறிந்துள்ளார்.
இது கண்டு மனம் வருந்திய சோழ மன்னன் அந்த லிங்கத்தை கட்டிப்பிடித்து அழுதுள்ளார். அந்த லிங்கத்தை மன்னன் கட்டிப்பிடித்து அழுத போது அவர் அணிந்திருந்த ஆபரணங்களின் தடையும் அந்த லிங்கத்தில் பதிந்தது. இன்றும் அந்த லிங்கத்தில் மன்னனின் ஆபரணங்கள் அடையாளங்கள் காணப்படுகின்றன. அதன் பின்னர் சிவலிங்கத்தை அந்த இடத்திலிருந்து எடுத்து அருகில் கட்டி சோழ மன்னன் வழிபாடு செய்துள்ளார். அந்த லிங்கத்திற்கு சோமநாதர் எனவும் பெயரிட்டுள்ளார். இந்த கோயிலை பாண்டியர்கள் திருப்பணி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.