தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Friday : தப்பி தவறிக்கூட வெள்ளிக்கிழமை இதை மட்டும் பண்ணாதீங்க.. அதுவும் பெண்கள் கண்டிப்பா இதை செய்யக்கூடாது!

Friday : தப்பி தவறிக்கூட வெள்ளிக்கிழமை இதை மட்டும் பண்ணாதீங்க.. அதுவும் பெண்கள் கண்டிப்பா இதை செய்யக்கூடாது!

Divya Sekar HT Tamil
Sep 22, 2023 12:00 PM IST

லட்சுமிக்கு உகந்த நாளாக வெள்ளிக்கிழமை உள்ளது. ஆடம்பரத்தை அருளும் சுக்கிரனின் நாளாகவும் வெள்ளிக்கிழமை திகழ்கிறது. இந்த நாளில் என்ன செய்யக்கூடாது என்பது பற்றி இதில் தெரிந்து கொள்வோம்.

செல்வத்தின் தெய்வமாக லட்சுமி தேவி
செல்வத்தின் தெய்வமாக லட்சுமி தேவி

வெள்ளிக்கிழமை மட்டும் அல்ல மற்ற எந்த கிழமைகளிலும் ஈரத்துணி அணிந்துக் கொண்டும், ஈரமான தலையுடனும் பூஜை செய்யக் கூடாது.

இரவு நேரத்தில் வீட்டை கூட்டி குப்பைகளை வெளியில் கொட்டக் கூடாது. அது தீய பயன்களை ஏற்படுத்தும். எமவே இந்த விஷயத்தில் கவனமாக இருங்கள்.

வெள்ளிக்கிழமை நாளில் ஒரு பெண்ணுக்கும் நாம் தீங்கு நினைக்கூடாது.

வெள்ளிக்கிழமை நாளில் வீட்டை கழுவிடவோ அல்லது வீட்டில் உள்ள பொருட்களை தூக்கி எறியவோ கூடாது. இப்படி செய்வதால் லட்சுமி நம் வீட்டை விட்டு சென்று விடுவாராம். எனவே இவற்றை தவிர்ப்பது நல்லது.

வீட்டில் விளக்கு ஏற்றிய பின்பு உப்பு, ஊசி போன்ற சில பொருட்களை பிறருக்கு கொடுக்கக் கூடாது. அப்படி கொடுத்தால் வறுமை ஏற்படுமாம்.

வெள்ளிக்கிழமைகளில் இறைச்சி மற்றும் மது அருந்தக் கூடாது. இப்படி செய்தால் லட்சுமி தேவியின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்.

வெள்ளிக் கிழமையன்று கடனுக்கு சர்க்கரை கொடுக்கக் கூடாது. அப்படி கொடுத்தால் வீட்டில் வறுமையைத் உண்டாகுமாம்.

குத்து விளக்கை புஷ்பத்தினால் அணைக்க வேண்டும். அதை தவிர்த்து தானாகவும், ஊதியும் அணைக்கக் கூடாது.

வெள்ளிக்கிழமை அன்று நகத்தை வெட்டக் கூடாது. இது தீய பலன்களை ஏற்படுத்தும். எனவே இவற்றை தவிர்ப்பது நல்லது.

வெள்ளிக்கிழமை முடி வெட்டவோ அல்லது ஷேவிங் செய்யவோ கூடாது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அனைத்தும் பொதுவான கணிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்