Zodiac Signs: கண்ணீர் விட்டு கதறிய ராசிகள்.. கரம் கொடுத்து தூக்கம் வரும் புதன்.. பணக்கடலில் விழுவது உறுதி-here we will see the zodiac signs that will experience happiness in the family due to transit of mercury - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Zodiac Signs: கண்ணீர் விட்டு கதறிய ராசிகள்.. கரம் கொடுத்து தூக்கம் வரும் புதன்.. பணக்கடலில் விழுவது உறுதி

Zodiac Signs: கண்ணீர் விட்டு கதறிய ராசிகள்.. கரம் கொடுத்து தூக்கம் வரும் புதன்.. பணக்கடலில் விழுவது உறுதி

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 14, 2024 06:23 PM IST

Mercury: வருகின்ற ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். புதன் பகவானின் நட்சத்திர இடமாற்றம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்று குறித்து இங்கு காணலாம்.

Zodiac Signs: கண்ணீர் விட்டு கதறிய ராசிகள்.. கரம் கொடுத்து தூக்கம் வரும் புதன்.. பணக்கடலில் விழுவது உறுதி
Zodiac Signs: கண்ணீர் விட்டு கதறிய ராசிகள்.. கரம் கொடுத்து தூக்கம் வரும் புதன்.. பணக்கடலில் விழுவது உறுதி

புதன் பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் புதன் பகவான் கடந்த ஜூலை 19ஆம் தேதி அன்று மகம் நட்சத்திரத்தில் நுழைந்தார்.

இது கேது பகவானின் சொந்தமான நட்சத்திரம் ஆகும். வருகின்ற ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். புதன் பகவானின் நட்சத்திர இடமாற்றம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்று குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

புதன் பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு தனி அடையாளம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களால் மகிழ்ச்சி அடைவார்கள். 

அதே சமயம் சிலருக்கு சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்காத வாய்ப்பு உள்ளது. நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.

சிம்ம ராசி

புதன் பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்காக இருக்க போகின்றது. குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். பல்வேறு விதங்களான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். 

வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் ரீதியான பயணங்கள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். பல்வேறு வழிகளில் இருந்து பணத்தை சம்பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

தனுசு ராசி

புதன் பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு அற்புதமான படங்களை கொடுக்கும். வேலை தொடர்பான பயணங்கள் அதிகம். உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தரும். நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். 

முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய முதலீடுகளால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கக்கூடும். நிதி ரீதியாக நீங்கள் அதிர்ஷ்டசாலியாக மாறப்போகின்றீர்கள். நிறைய பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9