தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  இந்த ராசிகளை அசைக்க முடியாது.. சுக்கிரன் சுழற்றி விடுகிறார்.. பண யோகத்தில் சிக்கிக்கொண்ட ராசிகள் நீங்களா பாருங்கள்

இந்த ராசிகளை அசைக்க முடியாது.. சுக்கிரன் சுழற்றி விடுகிறார்.. பண யோகத்தில் சிக்கிக்கொண்ட ராசிகள் நீங்களா பாருங்கள்

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 27, 2024 02:52 PM IST

Venus: சுக்கிரனின் இந்த இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பிடம் மேஷ ராசியில் சுக்கிரன் சஞ்சாரம் செய்து வருகின்ற காரணத்தினால் குறிப்பிட்ட சில ராசிகள் எந்தெந்த பலன்களை பெறப்போகின்றனர் என்பது குறித்து இங்கு காணலாம்.

சுக்கிரன்
சுக்கிரன்

ஏற்கனவே மேஷ ராசியில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். தற்போது குருபகவானோடு சுக்கிரன் இணைந்துள்ளார். சுக்கிரனின் இந்த இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பிடம் மேஷ ராசியில் சுக்கிரன் சஞ்சாரம் செய்து வருகின்ற காரணத்தினால் குறிப்பிட்ட சில ராசிகள் எந்தெந்த பலன்களை பெறப்போகின்றனர் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

 

உங்கள் ராசியில் முதல் வீட்டில் சுக்கிரன் புகுந்துள்ளார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான அற்புதமான பலன்கள் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வேலைகள் உங்களுக்கு கிடைக்கும். கூட்டு தொழில் வியாபாரம் உங்களுக்கு சில சிக்கல்களை ஏற்படுத்தும். குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். புது தம்பதிகளுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.

மிதுன ராசி

 

உங்கள் ராசியில் 11 வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். உயர் அலுவலர்களின் ஆதரவுகள் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உறவினர்களால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. காதல் திருமணம் உங்களுக்கு வெற்றிகரமாக அமையும்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசிகள் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் அனைத்து வகையிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். துணிச்சல் அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். எடுக்கும் முடிவுகள் அனைத்தும் உங்களுக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தரும் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே உறவு பலமாகும். குழந்தைகளால் உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் விலகும். பெற்றோர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

துலாம் ராசி

 

உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு புதிய சவால்களை சந்திக்கக்கூடிய சூழ்நிலை அமையும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி காண்பார்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel

டாபிக்ஸ்