மீனத்தில் பறக்கும் பணமழை.. பண சூறாவளியை உருவாக்கிய புதன்.. 3 ராசிகள் அதிர்ஷ்டத்தில் வாழ்க்கை
Mercury: புதன் பகவானின் உதயத்தால் சிறப்பான பலன்களை பெற்று வருகின்றனர். அந்த வகையில் மீன ராசியில் உதயமான புதன் பகவானால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகள் குறித்து இங்கு காண்போம்.
நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக எடுத்துக் கொள்ளும் காலங்களில் அதன் தாக்கமானது 12 ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். நவகிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமைவதாக ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகிறது.
நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் புத்திசாலித்தனம், பேச்சு, வியாபாரம், படிப்பு, நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் நவகிரகங்களில் இளைய கிரகமாக விளங்கி வருகின்றார்.
மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். புதன் பகவான் மிதுன மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இவர் மீன ராசியில் வக்ர நிலையில் பயணம் செய்து வந்தார் புதன் பகவான் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி அன்று மீன ராசியில் உதயமானார். இதனால் சில ராசிகள் ஏற்கனவே கஷ்டப்பட்டு வந்தனர்.
தற்போது புதன் பகவானின் உதயத்தால் சிறப்பான பலன்களை பெற்று வருகின்றனர். அந்த வகையில் மீன ராசியில் உதயமான புதன் பகவானால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகள் குறித்து இங்கு காண்போம்.
மேஷ ராசி
உங்கள் ராசியில் 12-வது வீட்டில் புதன் உதயம் ஆனார். இதனால் உங்களுக்கு முன்னேற்றத்தில் ஏற்பட்ட கடந்த தடைகள் நீங்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இதுவரை ஏற்பட்டு வந்த நஷ்டங்கள் அனைத்தும் குறையும். புதிய முடிவுகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும்.
மிதுன ராசி
உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் புதன் பகவான் உதயமாகி உள்ளார். இதனால் புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வேலை சம்பந்தப்பட்ட பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டு தொழில் முயற்சிகள் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
கன்னி ராசி
உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் புதன் உதயமாகி உள்ள காரணத்தினால் உங்களுக்கு தொழில் ரீதியான சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் நல்ல யோகம் கிடைக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9