தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குரு மே மாதம் அசால்ட்.. அசைக்க முடியாத இடத்தில் அமரும் ராசிகள்.. திருமண வாழ்க்கை மகிழ்ச்சி.. பணக் குளியல் ராசிகள்!

குரு மே மாதம் அசால்ட்.. அசைக்க முடியாத இடத்தில் அமரும் ராசிகள்.. திருமண வாழ்க்கை மகிழ்ச்சி.. பணக் குளியல் ராசிகள்!

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 27, 2024 10:44 AM IST

Guru Peyarchi 2024: குரு பகவான் மே ஒன்றாம் தேதி அன்று ராசி மற்றும் செய்த அடுத்த இரண்டு நாட்களில் மே மூன்றாம் தேதி ரிஷப ராசியில் அஸ்தமனம் ஆகின்றார். இது மிகப்பெரிய நிகழ்வாகும். இந்த நிகழ்வு அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு சில ராசிகள் மிகப்பெரிய நன்மைகளை பெறப்போகின்றனர்.

குரு
குரு

குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. நவகிரகங்களில் இவர் மிகவும் முக்கியமான இடத்தில் வகித்து வருகிறார். குரு பகவான் இந்த ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வரும்.

குரு பகவான் வருகின்ற மே மாதம் முதல் தேதி என்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார் அது சுக்கிர பகவானின் ராசியாகும். இந்த ஆண்டு மிகப்பெரிய இடமாற்றமாக குரு பகவானின் இடமாற்றம் பார்க்கப்படுகிறது. குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

குரு பகவான் மே ஒன்றாம் தேதி அன்று ராசி மற்றும் செய்த அடுத்த இரண்டு நாட்களில் மே மூன்றாம் தேதி ரிஷப ராசியில் அஸ்தமனம் ஆகின்றார். இது மிகப்பெரிய நிகழ்வாகும். இந்த நிகழ்வு அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் மிகப்பெரிய நன்மைகளை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

உங்கள் ராசியில் குரு அஸ்தமனம் சாதகமான பலன்களை கொடுக்கப் போகின்றது. தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தின் மகிழ்ச்சி அதிகரிக்கும் உறவினர்களால் நல்ல செய்தி தேடி வரும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

கடக ராசி

 

குருபகவானின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. அவருடைய அஸ்தமனத்தால் உங்களுக்கு யோகம் கிடைத்துள்ளது. காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். மாணவர்களுக்கு இது சாதகமான காலமாக அமையும். போட்டி தேர்வுகளில் மாணவர்கள் வெற்றி பெறுவார்கள்.

துலாம் ராசி

 

குருபகவானின் அஸ்தமனம் உங்களுக்கு யோக பலன்களை கொடுக்கப் போகின்றது. வாழ்க்கையில் பல்வேறு விதமான மாற்றங்களை குரு பகவான் உங்களுக்கு கொடுக்க போகின்றார். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் குருவின் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel