தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ketu Transit: அக்டோபர் ரெடி..கேது பகவானிடம் சிக்கிக்கொண்ட ராசிக்காரர்கள்

Ketu Transit: அக்டோபர் ரெடி..கேது பகவானிடம் சிக்கிக்கொண்ட ராசிக்காரர்கள்

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 22, 2023 11:00 AM IST

கேது பகவானால் சிக்கல்களை அனுபவிக்க போகும் சில ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

கேது பகவான்
கேது பகவான்

கேது பகவான் ஒரு ராசியை மாற்றுவதற்கு 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். வரும் அக்டோபர் மாதம் கேது பகவான் கன்னி ராசிக்குள் செல்ல இருக்கிறார். அதே சமயம் பின்னோக்கி வக்ர நிலையில் பயணம் செய்கிறார்.

கேது பகவான் கன்னி ராசிக்குள் செல்ல இருக்கும் காரணத்தினால் இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். குறிப்பாக 12 ராசிகளில் மூன்று ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காண்போம்.

ரிஷப ராசி

 

கேது பகவான் உங்கள் ராசியில் ஐந்தாம் வீட்டிற்கு செல்ல உள்ளார். மாணவர்கள் படிக்க விரும்ப மாட்டார்கள். வேலை செய்யும் இடத்தில் சிக்கல்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே சிக்கல்கள் உண்டாக அதிக வாய்ப்பு உள்ளது. புதிதாக தொழில் தொடங்குவது தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

சிம்ம ராசி

 

கேது பகவான் உங்கள் ராசியில் இரண்டாம் வீட்டிற்கு செல்ல உள்ளார். மற்றவர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. வீட்டில் இருப்பவர்களோடு கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. சில முக்கியமான விஷயங்களை தோல்வி ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தனுசு ராசி

 

உங்கள் ராசியில் பத்தாம் வீட்டில் கேது பகவான் பயணம் செய்ய உள்ளார். இது உங்களுக்கு மோசமான காலமாக இருக்கும் என கூறப்படுகிறது. பல்வேறு விதமான சிக்கல்கள் உங்களைத் தேடி வரும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் மன உளைச்சல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் கடன் கொடுத்தால் திருப்பி வராது என கூறப்படுகிறது. பண விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அனைத்தும் பொதுவான கணிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்