தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Money Luck: சுக்கிர வக்ர கஜலட்சுமி யோகத்தால் இந்த ராசிகளுக்கு பணமழை

Money Luck: சுக்கிர வக்ர கஜலட்சுமி யோகத்தால் இந்த ராசிகளுக்கு பணமழை

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 09, 2023 12:32 PM IST

சுக்கிர வக்கிர நிலையில் கஜலட்சுமி யோகம் பெற்ற ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

சுக்கிர யோகம்
சுக்கிர யோகம்

கடக ராசியில் சுக்கிர பகவான் வக்கிர நிலையில் பயணம் செய்து வருவதால் கஜலட்சுமி யோகம் உருவாக்கியுள்ளது. இதன் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட ஐந்து ராசிகளுக்கு மட்டும் ராஜயோகம் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.

கடக ராசி

சுக்கிர பகவானின் வக்கிர நிலையில் கஜலட்சுமி யோகத்தை நீங்கள் பெற போகிறீர்கள். இந்த ராசிகளுக்கு நிதி நிலைமையில் எந்த சிக்கல்களும் ஏற்படாது. செலவுகள் இருந்தாலும் பொருளாதார நிலை உச்சத்தில் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

மிதுன ராசி

சுக்கிர பகவானால் பணவரவு உங்களுக்கு அதிகரிக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும். கல்வி மற்றும் தகவல் தொடர்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது.

கன்னி ராசி

கஜலட்சுமி யோகத்தால் சிறப்பான பலன்களை நீங்கள் பெறப் போகிறீர்கள். முன்பு நீங்கள் முதலீடு செய்தது இப்போது இரட்டுப்பான பலன்களோடு வரும். நல்ல வருமானம் கிடைக்கும். புதிய முதலீடுகள் வெற்றி அடையும். நீங்கள் போட்ட திட்டங்கள் நிறைவேறும். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

துலாம் ராசி

இந்த நேரத்தில் நீங்கள் திட்டும் திட்டங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. சொத்துக்கள் சேரும்.

மகர ராசி

கஜலட்சுமி யோகத்தால் அதிக பயன்களை பெறப்போகின்ற ராசிக்காரர்களில் நீங்களும் ஒருவர். அதீத சுப பலன்களை நீங்கள் பெற போகிறீர்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல சூழ்நிலை உண்டாகும். கூட்டாக சேர்ந்து செய்யும் வேலை வெற்றியடையும். குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

(பொறுப்புத்துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொதுவான அடிப்படையில் உள்ளன. தேவையென்றால் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம். )

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

 

WhatsApp channel

டாபிக்ஸ்