கேது பகவானின் அட்டகாசம்.. பண ஆற்றில் உருண்டோடும் ராசிகள்.. இந்த ராசிகளுக்கு நிச்சயம்
Lord Ketu: கேது பகவானின் சிம்மராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் மிகப்பெரிய பலன்களை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Lord Ketu: நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்க கூடியவர் கேது பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கேது பகவான் மற்றும் ராகு பகவான் இவர்கள் இருவரும் இணைபிரியாத கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். வெவ்வேறு ராசிகளில் பயணம் செய்தாலும் இவர்களுடைய செயல்பாடுகள் ஒரே மாதிரி இருக்கும்.
சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக கேது பகவான் விளங்கி வருகின்றார். அந்த வகையில் கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் கேது பகவான் கன்னி ராசியில் தனது பயணத்தை தொடங்கினார். இந்த ஆண்டு முழுவதும் மிக ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.
அந்த வகையில் வருகின்ற 2025 ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி அன்று கேது பகவான் சிம்ம ராசிக்கு செல்கிறார். 18 மாதங்கள் இதே ராசியில் கேது பகவான் பயணம் செய்வார். கேது பகவானின் சிம்மராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் மிகப்பெரிய பலன்களை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மிதுன ராசி
உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் கேது பகவான் பயணம் செய்யப் போகின்றார். அதனால் உங்களுக்கு 2025 ஆம் ஆண்டு மிகவும் செழிப்பான ஆண்டாக இருக்கும். பல்வேறு விதமான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிய முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். தொழிலில் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
உயர் அலுவலர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். சக ஊழியர்களால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். இலக்கை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். திட்டமிட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கையில் பல்வேறு விதமான சந்தோஷங்கள் உங்களுக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.
துலாம் ராசி
வரும் 2025 ஆம் ஆண்டு கேது பகவான் சிம்ம ராசியில் நுழைவதால் உங்களுக்கு பல்வேறு விதமான யோகங்கள் கிடைக்கப் போகின்றது. உங்கள் ராசியில் 11-ஆவது வீட்டில் கேது சஞ்சாரம் செய்யப்போகின்றார். இதனால் உங்களுக்கு வாழ்க்கையில் அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவடையும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். அதிர்ஷ்டம் உங்களை தேடிவரும் பணவரவில் எந்த குறையும் இருக்காது. கேது பகவானின் சஞ்சார காலத்தில் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். சரியான இலக்குகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும்.
முழு கவனத்தோடு செயல்படக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். அனைத்து சிக்கல்களில் இருந்தும் உங்களுக்கு விடுதலை கிடைக்கும். காதல் விவகாரங்களில் உங்களுக்கு சில நேரங்களில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு நல்ல மகிழ்ச்சி உண்டாகும்.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். திட்டமிட்ட காரியங்கள் வெற்றி கரமாக முடிவடையும். இலக்குகள் உங்களுக்கு ஏற்றவாறு எளிதாக முடிவடையும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.