கேது தொட்டால் சுடுவார்.. 2025 முதல் பண மழையாய் கொட்டும்.. இந்த ராசிகள் ஜாலியாக வாழ்வார்கள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  கேது தொட்டால் சுடுவார்.. 2025 முதல் பண மழையாய் கொட்டும்.. இந்த ராசிகள் ஜாலியாக வாழ்வார்கள்!

கேது தொட்டால் சுடுவார்.. 2025 முதல் பண மழையாய் கொட்டும்.. இந்த ராசிகள் ஜாலியாக வாழ்வார்கள்!

Suriyakumar Jayabalan HT Tamil
Published Oct 25, 2024 09:39 AM IST

Lord Ketu: கேது பகவானின் சிம்ம ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் முன்னேற்றத்தை காணப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கேது தொட்டால் சுடுவார்.. 2025 முதல் பண மழையாய் கொட்டும்.. இந்த ராசிகள் ஜாலியாக வாழ்வார்கள்!
கேது தொட்டால் சுடுவார்.. 2025 முதல் பண மழையாய் கொட்டும்.. இந்த ராசிகள் ஜாலியாக வாழ்வார்கள்!

இது போன்ற போட்டோக்கள்

வெவ்வேறு ராசிகளில் பயணம் செய்தாலும் இவர்களுடைய செயல்பாடு ஒரே மாதிரி இருக்கும் அந்த வகையில் சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக கேது பகவான் விளங்கி வருகின்றார். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு சொல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார்.

இந்நிலையில் கேது பகவான் கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் கன்னி ராசியில் தனது பயணத்தை தொடங்கினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை கேது பகவான் மாற்றுகிறார். இந்நிலையில் கேது பகவான் வரும் 2025 ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி சிம்ம ராசிக்கு செல்கிறார். அதற்கு பிறகு 18 மாதங்கள் கேது பகவான் இதே ராசியில் பயணம் செய்வார்.

கேது பகவானின் சிம்ம ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் முன்னேற்றத்தை காணப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மிதுன ராசி

உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் கேது பகவான் இடமாற்றம் செய்கிறார். 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். கடின முயற்சி உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். வாழ்க்கையில் பல்வேறு விதமான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். மனதில் தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழிலில் உங்களுக்கு நிலையான வருமானம் கிடைக்கும். வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள்.

திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வியாபாரத்தில் லாபத்தை ஈட்டக்கூடிய சாதகமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். 

திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வாழ்க்கையில் பல்வேறு விதமான மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உங்களுக்கு உண்டாகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் உங்களுக்கு நிவர்த்தி அடையும். உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

துலாம் ராசி

கேது பகவானின் பயணம் உங்களுக்கு சிறப்பாக அமைந்துள்ளது. 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு முன்னேற்ற பாதையை அமைத்துக் கொடுத்த போகின்றது. உங்கள் ராசியில் 11 வது வீட்டில் கேது பகவான் நுழைகின்றார். எதனால் உங்களுக்கு வாழ்க்கையில் அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக அமையும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

எடுத்துக்கொண்ட இலக்குகளில் முழு கவனத்தோடு செயல்பட்டால் நீங்கள் விரும்பிய காரியங்கள் அனைத்தும் நடக்கும். காதல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். மேலும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner