பிறப்பிலேயே ஆபத்தான ராசிகள்.. சகுனி சூழ்ச்சி செய்து மற்றவர்களை ஆளக்கூடியவர்கள்.. இந்த ராசி கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்
Zodiac Signs: சில சூழ்ச்சிகளை செய்து மற்றவர்களை பயன்படுத்திக் கொண்டு தங்களின் தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் சில ராசிகள் குறித்து இங்கு காண்போம்.
Rasipalan: நவகிரகங்களின் செயல்பாடுகளைப் பொறுத்து ஒருவரின் வாழ்க்கை அமையும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஒருவர் பிறக்கும் பொழுது நவகிரகங்கள் எந்த இடத்தில் இருக்கின்றதோ அதை பொறுத்து அந்த மனிதப்பிறப்பின் குணாதிசயங்கள் இருக்கும் என ஜோதிட சாஸ்திரத்தால் கணிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு தனித்துவமான குணாதிசயங்களை பெற்றிருப்பார்கள். அதில் உணர்வுகளின் அடிப்படையில் சில ராசிக்காரர்கள் ஒரு குணாதிசயத்தை பெற்று அதனை மற்றவர்களிடம் வெளிப்படுத்துவார்கள். அந்த குண நலன்கள் மற்றவர்களுக்கு தீங்காகவும் அல்லது நன்மைகளாகவும் அமையக்கூடும்.
அந்த வகையில் சில ராசிக்காரர்கள் அவர்களை தவிர வேறு யாரு முக்கியம் கிடையாது என்ற சிந்தனையோடு இருப்பார்கள். அது அனைத்து விஷயங்களையும் மிகவும் மோசமான சூழ்நிலைக்கு கொண்டு செல்லும். சில சூழ்ச்சிகளை செய்து மற்றவர்களை பயன்படுத்திக் கொண்டு தங்களின் தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் சில ராசிகள் குறித்து இங்கு காண்போம்.
மேஷ ராசி
இவர்கள் இயற்கையாகவே மன உறுதி மற்றும் பிடிவாத குணம் கொண்டவர்கள். அனைத்து விஷயங்களிலும் மோசமான நிலைமைக்கு போட்டியோடு செயல்படக் கூடியவர்கள். சில சமயங்களில் இவர்களுடைய இயல்பு தன்மை மிகவும் அதிகாரத்துவமாக இருக்கக்கூடும். இவர்களின் காரியம் நடப்பதற்காகவே இவர்கள் இரக்கமற்ற செயல்களில் ஈடுபடுவது அவர்களின் இயல்பான குணமாக இருக்கக்கூடியவர்கள்.
மற்றவர்களின் எல்லைகளை எளிதாக கடந்து செல்லக் கூடியவர்கள். மேலும் அவர்களின் உணர்வுகளை புறக்கணித்து செல்வார்கள். தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காகவே மற்றவர்களின் உணர்வுக்கு அக்கறை காட்டாமல் செல்கின்ற காரணத்தினால் இவர்களின் நிலை மற்றவர்கள் மத்தியில் சூழ்ச்சிக்காரராக வெளிப்படுத்தும்.
மிதுன ராசி
இரட்டை முகம் கொண்ட ராசிக்காரர்கள் ஆக இவர்கள் திகழ்ந்து வருகின்றனர். பல நேரங்களில் இவர்கள் மிகவும் நல்லவர்களாக தோன்றினாலும் சில சமயங்களில் சீரற்ற நடத்தையில் இவர்கள் வெளிப்படுத்துவார்கள். ஒருவர் மீது இவர்களுக்கு வெறுப்பு வந்துவிட்டால் அவர்கள் மீது வதந்திகளை பரப்புவதில் எப்போதும் தயங்க மாட்டார்கள். மன உறுதி அதிகம் கொண்டவர்கள். எளிமையாக மற்றவர்களை உடைத்து விடுவார்கள். ஒரு உறவு வேண்டுமென்றால் அதற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்கள். அவர்களிடம் உண்மையாகவும் மற்றும் நேர்மையாகவும் இருக்க தயங்க மாட்டார்கள். ஆனால் தேவையில்லை என்று முடிவு செய்துவிட்டால் உணர்ச்சிரீதியாக அவர்களை காயப்படுத்துவார்கள். ஒருபோதும் அதைப்பற்றி கவலைப்பட மாட்டார்கள்.
சிம்ம ராசி
இயற்கையாகவே இவர்கள் தலைமை பண்புக்குரிய குணாதிசயம் கொண்டவர்கள். தன்னை தானே சுயமாக சரியான முறையில் வழிநடத்த தெரிந்தவர்கள். மிகப் பெரிய பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதனை எளிதாக கையாள கூடியவர்கள் மிகவும் தற்பெருமை எண்ணம் கொண்டவர்கள். இயல்பிலேயே இவர்களுக்கு அகங்கார எண்ணம் இருக்கின்ற காரணத்தினால் இவர்களுடைய செயல்பாடு ஆணவமாக மற்றவர்களிடத்தில் காணப்படும்.
தங்களின் வார்த்தையை மற்றவர்கள் மத்தியில் இறுதியாக இருக்க வேண்டும் என்ற பிடிவாத குணம் கொண்டவர்கள். மற்றவர்கள் மத்தியில் இவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றால் அனைவருடைய கவனத்தையும் தங்கள் பக்கம் ஈர்க்கும் வரை விட மாட்டார்கள். தங்களை அவமதிப்பவர்களை மற்றவர்கள் மத்தியில் காயப்படுத்தி மட்டம் தட்டி பேசி அவர்களை உணர்ச்சிவசப்பட செய்து ஒதுக்கிவிடுவார்கள். தங்கள் நலனை மட்டும் எப்போதும் மனதில் கொண்டிருக்கக் கூடியவர்கள் இவர்கள்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.