குரு சாமி ஆடப்போகும் ராசிகள்.. கதறிக்கொண்டு வருவது உறுதி.. தாறுமாறாக பணம் கொட்டும்.. உங்க ராசி இருக்கா?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குரு சாமி ஆடப்போகும் ராசிகள்.. கதறிக்கொண்டு வருவது உறுதி.. தாறுமாறாக பணம் கொட்டும்.. உங்க ராசி இருக்கா?

குரு சாமி ஆடப்போகும் ராசிகள்.. கதறிக்கொண்டு வருவது உறுதி.. தாறுமாறாக பணம் கொட்டும்.. உங்க ராசி இருக்கா?

Suriyakumar Jayabalan HT Tamil
Oct 28, 2024 09:42 AM IST

Guru Bhagavan: குரு பகவானின் வக்கிர பயணத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

குரு சாமி ஆடப்போகும் ராசிகள்.. கதறிக்கொண்டு வருவது உறுதி.. தாறுமாறாக பணம் கொட்டும்.. உங்க ராசி இருக்கா?
குரு சாமி ஆடப்போகும் ராசிகள்.. கதறிக்கொண்டு வருவது உறுதி.. தாறுமாறாக பணம் கொட்டும்.. உங்க ராசி இருக்கா?

குரு பகவான் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என கோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் குரு பகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.

குரு பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் குரு பகவான் அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று ரிஷப ராசியில் வக்கிர நிலையில் தனது பயணத்தை தொடங்கினார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி அன்று வக்கிர நிவர்த்தி அடைகின்றார்.

குரு பகவானின் வக்கிர பயணத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

குருபகவான் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் வக்கிர நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு அவ்வப்போது எதிர்பாராத நேரத்தில் நிதி நன்மைகள் கிடைக்கக்கூடும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய சூழ்நிலைகள் உங்களுக்கு உண்டாகும். பெரிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். 

அனைத்து வேலைகளிலும் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.

கன்னி ராசி

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் குருபகவான் வக்ர நிலையில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சக ஊழியர்களால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் முன்னேற்றம் இருக்கும். வீட்டில் மங்கள வாரியர்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கும்ப ராசி

உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் குருபகவான் வக்கிர நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு தொழிலில் மகத்தான வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். 

நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு லாபம் உங்களை தேடி வரும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நிதி நன்மைகளை பெறுவதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner