தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rahu Ketu Transit 2023: ராகு கேது வந்துட்டாங்க ஓடுங்க..இனி யாராலும் தடுக்க முடியாது..என்ன ராசிக்கு என்ன நடக்கும்?

Rahu Ketu Transit 2023: ராகு கேது வந்துட்டாங்க ஓடுங்க..இனி யாராலும் தடுக்க முடியாது..என்ன ராசிக்கு என்ன நடக்கும்?

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 08, 2023 12:46 PM IST

ராகு கேது பகவான் இடப்பெயர்ச்சியால் பலன்கள் பெறப் போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

ராகு கேது பகவான் இடப்பெயர்ச்சி
ராகு கேது பகவான் இடப்பெயர்ச்சி

சில ராசிகளுக்குச் சங்கடங்கள் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டங்களைச் செய்யப்போகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காணலாம்.

மேஷ ராசி

ராகு பகவான் அக்டோபர் மாதத்திற்குப் பிறகு உங்கள் ராசியில் விரைய ஸ்தானத்திற்கும், கேது பகவான் சத்ரு ஸ்தானத்திற்கும் மாறுகின்றனர். அவர்களுக்கு ஏற்ற இடத்தில் இருவரும் அமைகின்ற அவர்களுக்கு ஏற்ற இடத்தில் இருவரும் அமர்கின்ற காரணத்தினால் உங்களுக்கு ராஜ யோகம் தான். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. புது வீடு மற்றும் வாகனங்கள் வாங்க அதிக வாய்ப்புள்ளது. கேது பகவானால் வேலை வாய்ப்பு உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்திலிருந்து சிக்கல்கள் நீங்கும்.

ரிஷப ராசி

ராகு பகவான் உங்கள் ராசியில் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். எதிர்பாராத நேரத்தில் திடீர் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். எடுத்த காரியம் நிறைவேறும். மற்றவர்களின் சூழ்ச்சி உங்களை ஒன்றும் செய்யாது. பூர்விக சொத்து சிக்கல்கள் விலகும். சுப காரியங்கள் நடக்கும். உங்களை மரியாதைக் குறைவோடு நடத்தியவர்கள் மதிப்பு மிக்கவர்களாகப் பார்ப்பார்கள்.

மிதுன ராசி

தொழிற் ஸ்தானத்திற்கு ராகு பகவான் மாறுகிறார். நீங்கள் எடுக்கும் முயற்சி அத்தனையும் வெற்றி அடையும். முதலாளியாக மாற அதிக வாய்ப்பு உள்ளது. நல்ல வேலை வாய்ப்பு உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு பதிவு உயர்வு கிடைத்து அதிக வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். காலப்போக்கில் கடன் சுமைகள் குறையும். ராகு கேது இடப் பெயர்ச்சி மிகப்பெரிய மாற்றத்தைத் தரும்.

கடக ராசி

திருமண பாக்கியம் உண்டாக அதிக வாய்ப்புள்ளது. குழந்தை பாக்கியம் உண்டாகும். நினைத்த காரியம் நிறைவேறும். கடந்த காலங்களில் இருந்த சிக்கல்கள் விலகும். பல்வேறு பிரச்சனைகளில் இருந்து வெளியே வருவீர்கள். வருமானம் திருப்தியாக இருக்கும். மறைமுகமாக இருந்த எதிர்ப்புகள் குறையும்.

சிம்ம ராசி

இந்த இடப்பெயர்ச்சி உங்களுக்கு நல்ல யோகத்தைத் தரும். எதிர்பாராத நேரத்தில் பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். ஒளிமயமான எதிர்காலம் உங்களைத் தேடி வரும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. வேலை செய்யும் இடத்தில் இன்பச் செய்தி உங்களைத் தேடி வரும். இடமாற்றம் செய்ய அதிக வாய்ப்பு உள்ளது. கேது பகவானால் எடுத்த செயல் எல்லாம் வெற்றியாக அமையும். முயற்சியும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

கன்னி ராசி

களத்திர ஸ்தானத்தில் ராகு பகவான் மாறுகிறார். அதனால் உங்களுக்கு மிகப்பெரிய மாற்றம் ஏற்படப் போகிறது. புகழின் உச்சி வரை செல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது. வேலை செய்யும் இடத்தில் நல்ல மாற்றம் உண்டாகும். படிப்புக்காகச் செலவு செய்ய ஆரம்பிப்பீர்கள். நண்பர்களால் தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த சிக்கல்கள் விலகும். சிக்கல்களோடு வாழ்ந்தவர்களுக்கு இன்ப மயமான வாழ்க்கை உண்டாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

Google News: https://bit.ly/3onGqm9

WhatsApp channel

டாபிக்ஸ்