தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See About The Zodiac Signs That Are Going To Be Troubled By Lord Surya

புரட்டி அடிக்க வருகிறார் சூரியன்.. கஷ்டப்படுவது உறுதி..தப்பிக்க முடியாது.. சிக்கிக்கொண்ட ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 18, 2024 10:43 AM IST

Lord Surya: ராகு பகவானோடு சூரிய பகவான் இணைந்துள்ளார். சூரிய பகவானின் இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கங்கள் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அசுப பலன்களை முழுமையாக அனுபவிக்க போகின்றன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சூரிய பகவான்
சூரிய பகவான்

ட்ரெண்டிங் செய்திகள்

குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றினாலும் சூரிய பகவானின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் மிகவும் அதிகமாக இருக்கும். கிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

இருப்பினும் தற்போது சூரிய பகவான் கடந்த மார்ச் 14ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார். இது அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். மீன ராசியில் ஏற்கனவே ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார்.

தற்போது ராகு பகவானோடு சூரிய பகவான் இணைந்துள்ளார். சூரிய பகவானின் இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கங்கள் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அசுப பலன்களை முழுமையாக அனுபவிக்க போகின்றன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

கடக ராசி

 

சூரிய பகவான் உங்களுக்கு சில சிரமங்களை கொடுக்கப் போகின்றார். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வணிகம் மற்றும் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. புதிய திட்டங்களை தவிர்ப்பது தற்போது நல்லது. வியாபாரத்தில் பங்கு காரர்களால் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்க்கையில் அவ்வப்போது சண்டைகள் ஏற்படும். வாழ்க்கை துணையோடு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தனி அக்கறை காட்டி உடலை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

துலாம் ராசி

 

சூரிய பகவான் உங்களுக்கு சிக்கல்களை கொடுப்பதற்கு தயாராகி விட்டார். பல்வேறு விதமான ஆசைகள் நிறைவேறாமல் போக அதிக வாய்ப்பு உள்ளது. புதிய முதலீடுகளில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். அதிக வருமானத்தை எதிர்பார்த்து களத்தில் இறங்கினால் சிக்கல்களை சந்திக்க நேரிடும். புதிய முதலீடுகள் உங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தலாம். ஏதேனும் புதிய திட்டங்கள் வைத்திருந்தால் தற்போது அதனை தள்ளி வைப்பது நல்லது.

மீன ராசி

 

சூரிய பகவான் உங்கள் ராசியில் சஞ்சாரம் செய்து வருகின்றார். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படும். திருமண வாழ்க்கையில் கலவையான பலன்கள் கிடைக்கும். கடுமையாக உழைத்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உயர் அலுவலர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

WhatsApp channel