தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Vastu Lakshmi Yoga: குபேர யோகத்தை கொடுக்கும் சங்கு பூ.. இது இருந்தால் பணமழை பொழியும்!

Vastu Lakshmi Yoga: குபேர யோகத்தை கொடுக்கும் சங்கு பூ.. இது இருந்தால் பணமழை பொழியும்!

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 06, 2023 12:25 PM IST

மகாவிஷ்ணுவிற்கு மிகவும் பிடித்த சங்கு பூவின் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்

சங்கு பூ
சங்கு பூ

மக்களை காக்கும் கடவுளாக விளங்கக்கூடிய விஷ்ணு பகவானுக்கு பிடித்தமான பூ ஒன்று உள்ளது. அந்தப் பூ நமது வீட்டில் வளர்ந்தால் லட்சுமி தேவியின் முழு அனுகிரகம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

அந்த வகையில் மகாவிஷ்ணுவுக்கு மிகவும் பிடித்த பூவாக விளங்குவது சங்குப்பூ. இந்தச் செடியை வீட்டில் வளர்த்தால் அதீத பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த பூ இளஞ்சிவப்பு, நீளம், வெள்ளை என பல வண்ணங்களில் இருக்கும்.

சங்குப்பூவின் நன்மைகள்

  • நேர்மறை ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த குடும்பத்தில் மகிழ்ச்சியை உண்டாக்கும். இந்த கொடி வளர வளர வீட்டில் மகிழ்ச்சி அதிகமாகும் என நம்பப்படுகிறது. 
  • வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் சங்கு பூச்செடி வளர்த்தால் எதிர்மறை ஆற்றல்கள் அதிகமாகும் எனக் கூறப்படுகிறது.
  • இந்த செடியை வளர்த்தால் நம் வீட்டில் தன வரவு அதிகரிக்கும் எனவும், மகாலட்சுமியின் வாசம் எப்போதும் நமது வீட்டில் இருக்கும் என நம்பப்படுகிறது.
  • இந்த பூவை மகாவிஷ்ணுவிற்கு சமர்ப்பித்து வழிபாடு செய்தால் குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும், அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
  • வீட்டில் சங்கு பூச்செடியை வளர்த்து அந்த பூக்களை கொண்டு சனி பகவானை வழிபாடு செய்தால், அவரால் ஏற்படக்கூடிய துன்பங்கள் குறையும் மற்றும் சனி தோஷம் நிவாரணம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
  • நீல நிற சங்குப்பூ கொடியை வீட்டில் வடக்கு திசையில் நட்டு வளர்க்க வேண்டும். அப்படி வளர்த்தால் வீட்டில் மகிழ்ச்சி நிலையாக இருக்கும் என கூறப்படுகிறது. 
  • தெற்கு மற்றும் மேற்கு திசையில் இந்த செடியை நடக்கூடாது என கூறப்படுகிறது.

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்