தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sani Luck: சனியின் பண மழையில் நனைய போகும் ராசிகள்

Sani Luck: சனியின் பண மழையில் நனைய போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Sep 11, 2023 11:49 AM IST

சனிபகவானால் உச்சம் செல்லப் போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

சனிபகவான்
சனிபகவான்

ஒரு ராசியில் சனி பகவான் சஞ்சாரம் செய்தால் இரண்டரை ஆண்டு காலம் அதிலே பயணம் செய்வார். தீமைகளை திருப்பிக் கொடுக்க ஆரம்பித்தால் மிகவும் கொடூரமாக தருவார் சனி பகவான். அதேபோல நன்மைகளையும் இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். எனவே அவரைக் கண்டு அச்சப்பட தேவையில்லை.

சனிபகவான் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். வக்ர நிலையில் பயணம் செய்யும் சனி பகவான் நவம்பர் நான்காம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடைகிறார். சனிபகவானால் பலன்களைப் பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

ரிஷப ராசி

 

சனிபகவான் உங்களுக்கு அதிக பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றார். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் இருக்கும். புதிய வேலை வாய்ப்புகள் அமையும். பண வரவில் எந்த குறையும் இருக்காது.

மிதுன ராசி

 

சனிபகவான் உங்களுக்கு தேவையான அனைத்து வேலைகளையும் செய்து தருவார். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல உயர்வு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்காத வாய்ப்புள்ளது. பண வரவில் இந்த குறையும் இருக்காது.

துலாம் ராசி

 

சனிபகவான் நல்ல முன்னேற்றத்தை அள்ளிக் கொடுப்பார். திடீரென பண வரவு உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு கிடைக்காத வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

கும்ப ராசி

 

சனிபகவானால் உங்களுக்கு தனி தைரியம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வியாபாரத்தில் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அனைத்தும் பொதுவான கணிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்