Zodiac Signs: சனி சூரியன் இணைந்து விட்டனர்.. 3 ராசிகள் அமரும் சிம்மாசனம் ரெடி.. வந்துவிட்டது யோகம்-here we will see about the lucky zodiac signs of saturn and sun - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Zodiac Signs: சனி சூரியன் இணைந்து விட்டனர்.. 3 ராசிகள் அமரும் சிம்மாசனம் ரெடி.. வந்துவிட்டது யோகம்

Zodiac Signs: சனி சூரியன் இணைந்து விட்டனர்.. 3 ராசிகள் அமரும் சிம்மாசனம் ரெடி.. வந்துவிட்டது யோகம்

Suriyakumar Jayabalan HT Tamil
Sep 01, 2024 05:37 PM IST

Zodiac Signs: சூரிய பகவானின் சிம்ம ராசி பயணம் சனி பகவானின் கும்ப ராசி பயணம் இவர்கள் இருவரும் 180 டிகிரியில் அமர்ந்துள்ளனர் இதனால் சம சப்த யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டம் பெறுகின்றனர்.

Zodiac Signs: சனி சூரியன் இணைந்து விட்டனர்.. 3 ராசிகள் அமரும் சிம்மாசனம் ரெடி.. வந்துவிட்டது யோகம்
Zodiac Signs: சனி சூரியன் இணைந்து விட்டனர்.. 3 ராசிகள் அமரும் சிம்மாசனம் ரெடி.. வந்துவிட்டது யோகம்

நவகிரகங்களில் நீதிமனாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். நவகிரகங்களின் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனிபகவான் விலகி வருகின்றார். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.

30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசிகள் தற்போது பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி அன்று சூரிய பகவான் சிம்ம ராசியில் நுழைந்தார்.

சூரிய பகவானின் சிம்ம ராசி பயணம் சனி பகவானின் கும்ப ராசி பயணம் இவர்கள் இருவரும் 180 டிகிரியில் அமர்ந்துள்ளனர் இதனால் சம சப்த யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டம் பெறுகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கும்ப ராசி

சூரியன் மற்றும் சனி சேர்ந்து உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க போகின்றனர் உங்கள் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். புத்திசாலித்தனம் அதிகரிக்கும். சொந்தக்காரர்களால் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். 

பணத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். திருமணம் ஆனவர்களின் வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும்.

மேஷ ராசி

சனி மற்றும் சூரியன் சேர்ந்து உங்களுக்கு நல்ல காலத்தை தொடங்கிவிட்டனர். இனிமேல் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வழிகளில் இருந்து உங்களுக்கு வருமானம் கிடைக்கும். 

புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தரும். எதிர்காலத்தில் கிடைக்க வேண்டிய அனைத்தும் இப்பொழுதே அமைந்து விடும். எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். முழு திருப்தியும் உங்களுக்கு அனைத்து வேலைகளிலும் கிடைக்கும். முதலீடுகளால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

மிதுன ராசி

சனி மற்றும் சூரியன் சேர்ந்து உங்களுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்க போகின்றனர். புதிய வாய்ப்புகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அனைத்தும் கிடைக்கும். 

பணம் உங்களை தேடி வரும் பண வரவுள்ள இந்த குறையும் இருக்காது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அனைத்தும் கிடைக்கும். நிறுத்தப்பட்டு கிடந்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.