Sani: வக்ர நிவர்த்தி பெறப்போகும் சனி.. நேரடியாக டாப் கியரில் செல்லப்போகும் ராசிகள்!
Sani: வக்ர நிவர்த்தி பெறப்போகும் சனி பகவானால் நேரடியாக டாப் கியரில் செல்லப்போகும் ராசிகள் குறித்துக் காண்போம்.
Sani: ஜோதிட சாஸ்திரத்தின்படி, கிரகங்கள், வக்ரம் அடைவது மட்டுமில்லாமல், வக்ர நிவர்த்தியும் அடையும்.
ஜோதிடத்தில் சனி பகவானுக்கு தனி இடம் உண்டு. சனி பகவான் அமங்கலமான பலன்களை மட்டும் தருவதில்லை. சனி பகவானும் சுப பலன்களைத் தருகிறார். சனி பகவான் மங்களகரமானவராக இருக்கும்போது, ஒரு நபரின் வாழ்க்கை ஒரு ராஜாவைப் போல மாறும்.
கடந்த ஜூன் 29ல், சனி பகவான், கும்ப ராசியில் வக்ரப்பெயர்ச்சி ஆனார். இந்நிலையில், கும்பத்தில் சனி வரும் நவம்பர் 15ஆம் தேதி வக்ர நிவர்த்தி ஆவார். நவம்பர் 4 முதல் கும்ப ராசியில் நேரடியாகப் பரிமாறுகிறார்.
இந்த காலகட்டத்தில் சில ராசியினருக்கு போதுமான சம்பளம், வசதி வாய்ப்புகள் கிடைக்கும். சனி பகவான் இப்படி வந்தவுடன் சில ராசிக்காரர்களுக்குக் கிடைக்காமல் இருந்த அதிர்ஷ்டமும் கிடைக்கும்.
மேஷம்:
சனி கும்பத்தில் நேரடியாக சஞ்சரிப்பதால் மேஷராசியினருக்கு நற்பலன்கள் கிடைக்கும். சனி பகவான், கும்பத்தில் நேரடியாக சஞ்சரிப்பதால் வெகுநாட்களாக வேலையை முடிக்கமுடியாமல், தவித்தவர்கள் இந்தக்காலத்தில் வேலையை முடிக்க வாய்ப்புள்ளது. வாழ்க்கைத்துணையால் ஆதாயமடைவீர்கள். அன்றாடப் பணிகளால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகளைத் தீர்க்க வாய்ப்பு கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அதிகாரிகள் மகிழ்ச்சி அடைவார்கள். நீங்கள் நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்கள் சில நல்ல செய்திகளைப் பெறலாம்.
மிதுனம்:
சனி கும்பத்தில் நேரடியாக சஞ்சரிப்பதால் மிதுன ராசியினருக்கு நன்மைகள் அதிகம் கிடைக்கும். இதனால், மிதுன ராசியினருக்கு அதிர்ஷ்டம் உங்களுடன் இருக்கும். தேக்கமடைந்த பணம் திரும்ப வந்து சேரும். இந்த காலத்தில் நோய் போன்றவை கண்டறியப்பட்டாலும் விரைவில் குணமாகும். எதிர்காலத்தில் பயனளிக்கும் வகையில் புதிய திட்டம் வகுப்பீர்கள். ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்தால் லாபத்தை அள்ளலாம். பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் நீங்கள் பயனடையலாம்.
சிம்மம்:
சனி கும்பத்தில் நேரடியாக சஞ்சரிப்பதால் சிம்ம ராசியினருக்கு நற்பலன்கள் அதிகம் கிடைக்கும். மேலும், நீங்கள் எடுக்கும் முடிவுகள் பெரிய பலன்களைத் தரும். நிலுவையில் இருந்த பழைய வேலைகள் நிறைவேறும். வீட்டில் இருக்கும் கடன்களையும் அடைப்பீர்கள். மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். குடும்பத்துடன் சுற்றுலா செல்வீர்கள். அலுவலகத்தில் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வெகுநாட்களாக எதிர்பார்த்த நல்ல செய்திகள் கிடைக்கும்.
தனுசு:
சனி கும்பத்தில் நேரடியாக சஞ்சரிப்பதால் தனுசு ராசியினருக்கு நன்மைகள் அதிகம் கிடைக்கும். இந்த காலத்தில் நிலம் மற்றும் ஆயுத்த காரியங்களால் பணவரவு அதிகரிக்கும். புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். பணியிடத்தில் மேல் அலுவலர்களுடன் இருக்கும் உறவு நல்ல முறையில் இருக்கும். வியாபார ரீதியாக, நல்ல லாபம் கிடைக்கும். பழைய நண்பர்களின் நட்பு கிடைக்கும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்