HT Yatra: சிவனுக்காக தீயில் இறங்கிய பக்தன்.. பரம்பொருளாக மாறிய அக்னீஸ்வரர்..வைணவ குடும்பத்தில் ஒரு சிவ யோகி
கஞ்சனூர் அக்னீஸ்வரர் திருக்கோயில் வரலாறு குறித்து இங்கே காண்போம்.
நவகிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்து ஒருவரின் தலையெழுத்து எழுதப்படுவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் நவகிரகங்களின் செயல்பாடுகளில் பொறுத்து ஒருவரின் வாழ்வில் என்ன மாற்றங்கள வேண்டுமானாலும் நடக்கலாம்.
நவகிரகங்களின் இடமாற்றத்தை பொறுத்து ஏற்படும் சிக்கல்களை நிவர்த்தி செய்வதற்காகவே காவிரி கரைப் பகுதிகளில் நவக்கிரகங்களும் கோயில் கொண்டு மக்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டத்தில் அமைந்துள்ளது கஞ்சனூர் அக்னீஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயில் கும்பகோணத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இந்த கோயிலில் மூலவராக அக்னீஸ்வரரும், தயாராக கற்பகாம்பிகையும் அருள் பாலித்து வருகின்றனர். தலவிருட்சமாக புரச மரமும், தீர்த்தமாக அக்னி தீர்த்தமும் உள்ளது. இந்த கோயில் பல்வேறு சிறப்புகளை பெற்ற தலமாக விளங்கி வருகிறது.
இந்த திருத்தலம் நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக்கூடிய சுக்கிர பகவானின் தலமாக திகழ்ந்து வருகிறது. சுக்கிரனின் பரிகாரத்தலமாக இந்த திருத்தலம் விளங்கி வருகிறது. மூலவராக வீற்றிருக்கக்கூடிய அக்னீஸ்வரர் சுவாமி சன்னதிக்கு அருகே சுயம்புலிங்கமாக மிகப்பெரிய பானத்தை ஏந்தியபடி சுக்கிர பகவான் லிங்க வடிவில் காட்சி கொடுக்கிறார்.
தல வரலாறு
இந்த கோயில் வீற்றிருக்கக்கூடிய கஞ்சனூரில் முன்னொரு காலத்தில் வைணவராக திகழ்ந்த வாசுதேவர் என்பவருக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. பெருமாளை வணங்கக்கூடிய குடும்பத்தில் பிறந்த இந்த குழந்தை சிவனின் பக்தனாக திகழ்ந்து வந்தது.
வைணவ குடும்பத்தில் பிறந்த இந்த குழந்தை சிவன் மீது அதீத பக்தி கொண்டிருந்தது அனைவருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவயதிலிருந்தே சிவனுடைய நாமத்தை கூறிக்கொண்டு சைவ சமயத்தை சேர்ந்தவர் போல் விபூதி மற்றும் ருத்ராட்சம் அணிந்து கொண்டு சிவ நாமத்தை கூறிக்கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். இந்த குழந்தைக்கு சுதர்சனன் என பெயர் வைத்துள்ளனர்.
வெளியே விளையாட சென்றாலும் சிவன் கோயிலில் சென்று விளையாடுவது, சிவ நாமத்தை கூறுவது இவருடைய தந்தைக்கு மிகவும் கோபம் ஏற்பட்டு வந்துள்ளது. பலமுறை அவருடைய தந்தை நமது கடவுள் பெருமாள் எனக் கூறியும், சிவன் மீது அதீத பக்தி கொண்டிருந்தார் சுதர்சனர்.
சிவன் கோயிலில் விளையாடிவிட்டு ஒருமுறை வீடு திரும்பிய போது வீட்டில் கட்டி வைத்து அவருடைய தந்தை சுதர்சனரை அடித்தார். எனது பேச்சை கேட்காத காரணத்தினால் இனி நீ வீட்டிற்கு வரக்கூடாது என அவருடைய தந்தை சுதர்சனரை அனுப்பிவிட்டார். சிவன் கோயிலுக்கு சென்று அங்கு வீற்றிருக்கக்கூடிய அக்னீஸ்வரர், கற்பகாம்பிகை இருவரையும் வணங்கி விட்டு அங்கே இருந்த தியான மண்டபத்தில் சுதர்சனர் அமர்ந்து விட்டார்.
அப்படியே சுதர்சனர் மயங்கி விழுந்து விட்டார் உடனே சிவபெருமான் மற்றும் பார்வதி இருவரும் அவருக்கு காட்சி கொடுத்துள்ளனர். உனக்கு என்ன வர வேண்டும் கேள் என கேட்டுள்ளனர். சுதர்சனர் உங்கள் திருவடிகளை பிரியாத வரம் எனக்கு வேண்டும் எனக் கூறியுள்ளார். சிவபெருமான் அவருக்கு அனைத்து விதமான அறிவையும் மற்றும் கலைத்திறமையும் வரமாக வழங்கியுள்ளார்.
சிவபெருமானின் தட்சிணாமூர்த்தியாக அமர்ந்து அவருக்கு அனைத்து கலைகளையும் கற்றுக் கொடுத்தார். திரும்ப வீட்டிற்கு வந்த சுதர்சனாரை அவரது தந்தை உள்ளே அழைக்க மறுத்தார். அந்த ஊரில் இருந்த வைணவர்கள் ஒன்று கூடி வரதராஜ பெருமாள் கோயில் முன்பு சிவனே பரம்பொருள் எனக் கூறி பழுத்த காய்ச்சிய கம்பியில் நின்று சுதர்சனர் அவன் பக்தியை நிரூபிக்க வேண்டும். இல்லையெனில் தீக்கு இரையாக வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
அதேபோல சுதர்சனரும் தீயில் இருந்த முக்காளியில் அமர்ந்து சிவனே பரம்பொருள் என கூறியுள்ளார். உடனே அந்த இடம் குளிர்ந்து தேவர்கள் அவருக்கு மலர்களை மாரியாக பொழிந்துள்ளனர். சுதர்சனராக பிறந்த இவருக்கு சிவபெருமான் ஹரதத்தர் என்ற பெயரை கொடுத்தார். அனைவரும் தவறை உணர்ந்து அவரை வணங்கினர். நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக்கூடிய சுக்கிர பகவான் இந்த திருத்தலத்தில் பார்க்கவன் என அழைக்கப்படுகிறார்.
இருக்கும் இடம்
கும்பகோணத்தில் இருந்து கதிராமங்கலம் செல்லும் வழியில் இந்த திருக்கோயில் அமைந்துள்ளது. அருகில் ஆடுதுறை மற்றும் கும்பகோணம் ஆகிய இடங்களில் தங்குமிடம் வசதி உள்ளது. இந்த கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகளும் உள்ளன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்