குரு கதற கதற.. பணத்தில் மூச்சு முட்டும்.. இந்த 3 ராசிகள் வாழ்க்கை சிறக்கும்.. கதவை திறந்து வையுங்க!
Guru Bhagavan: குரு பகவானின் பின்னோக்கிய பயணத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Guru Bhagavan: நவகிரகங்களிலும் மங்கள நாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தேவர்களின் குருவாக குருபகவான் திகழ்ந்து வருகின்றார். இவர் ஒருவருடைய ஜாதகத்தில் நல்ல நிலைமையில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
இது போன்ற போட்டோக்கள்
Apr 24, 2025 08:41 AMதிடீர் லாபம் கொட்டோ கொட்டுனு கொட்டும்.. இந்த கிரக சேர்க்கை உங்களுக்கு அதிர்ஷ்டமா.. வெற்றி உங்கள் பக்கமா பாருங்க!
Apr 24, 2025 07:44 AMதொட்டதெல்லாம் வெற்றி.. எந்த 3 ராசியினருக்கு ஜாக்பாட்.. மே மாதம் 6 கிரகங்கள் மாற்றத்தால் பண மழை யாருக்கு பாருங்க!
Apr 24, 2025 07:00 AMதுவாதஷ் யோகம்: உருவானது அபூர்வ யோகம்.. சனி செவ்வாய் கொட்டும் பணமழை.. அதிர்ஷ்ட ராசிகள் யார்?
Apr 24, 2025 05:00 AM‘வெற்றி தேடி வரும்.. சிறப்பான நாள் யாருக்கு.. கவனமாக இருக்க வேண்டியது யார்’இன்று ஏப்.24 உங்க நாள் எப்படி இருக்கும்!
Apr 23, 2025 11:17 AMகுரு குறி வச்சுட்டார்.. அசைக்க முடியாத பண மழை ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க?
Apr 23, 2025 07:30 AMராகு பெயர்ச்சி பலன்கள்: பண காற்று வீசப் போகும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தை கொட்ட வரும் ராகு.. உங்க ராசி இதுல இருக்கா?
அந்த வகையில் குரு பகவான் கடந்த செப்டம்பர் மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.
குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று குரு பகவான் ரிஷப ராசியில் வக்கிர நிலையில் தனது பயணத்தை தொடங்கினார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தனது வக்கிர நிவர்த்தி பயணத்தை தொடங்குகிறார்.
குரு பகவானின் பின்னோக்கிய பயணத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
ரிஷப ராசி
உங்கள் ராசியில் முதல் வீட்டில் குரு பகவான் வக்கிர நிலை பயணத்தை தொடங்கியுள்ளார். இதனால் உங்களுக்கு அற்புதமான காலமாக இது அமைந்திருக்கும். தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைந்திருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். திருமணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
சிம்ம ராசி
உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் குருபகவான் வக்கிரன் நிலையை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை யோகம் கிடைக்கப் போகின்றது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கக்கூடும்.
வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். உடன் பிறந்தவர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும் நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வெளிநாட்டில் சென்று படிக்கக்கூடிய வாய்ப்புகள் அவர்களுக்கு கிடைக்கும்.
கடக ராசி
உங்கள் ராசியில் 11-ஆவது வீட்டில் குருபகவான் வக்கிர நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நிதி நன்மைகள் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நிறைய பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும்.
புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வசதி மற்றும் வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமண வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
