தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Surya: உச்சத்தில் வருகிறார் சூரியன்.. அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் இவர்கள்தான்

Lord Surya: உச்சத்தில் வருகிறார் சூரியன்.. அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 16, 2024 12:18 PM IST

Lord Surya: சூரிய பகவானால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

சூரிய பெயர்ச்சி
சூரிய பெயர்ச்சி

சூரிய பகவான் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. தற்போது சூரிய பகவான் 13ஆம் தேதி அன்று கும்ப ராசியில் நுழைந்தார். இது சனி பகவானின் சொந்த ராசியாகும். ஏற்கனவே சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

தற்போது கும்ப ராசியில் சூரிய பகவான் நுழைந்து சனி பகவானோடு கைகோர்த்துள்ளார். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் மூன்று ராசிகள் அதிர்ஷ்டத்தின் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சிம்ம ராசி

 

சூரிய பகவான் உங்கள் ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் சஞ்சாரம் செய்கின்றார். உங்களுக்கு பல்வேறு விதமான நல்ல பலன்களை கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டு வேலை முயற்சிகள் வெற்றியில் முடிவடையும்.

தனுசு ராசி

 

சூரிய பகவான் உங்களுக்கு சாதகமாக செயல்படுகின்றார். பணவரவில் எந்த குறையும் இருக்காது. உங்களது மூன்றாவது வீட்டை அவர் பார்க்கின்றார். அதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. 

பூர்வீக சொத்துக்களால் உங்களுக்கு ஆதாயம் உண்டாகும். உறவினர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். உடன் பிறந்தவர்களால் ஆதரவு கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்.

கும்ப ராசி

 

சூரிய பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. ஆளுமை திறன் அதிகரிக்கும். தன்னம்பிக்கையால் பல முயற்சிகள் வெற்றி அடையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். ஆன்மீக பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். 

சூரிய பகவான் உங்களுக்கு முன்னேற்றத்தை கொடுப்பார். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும் வருமானம் அதிகரிக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel

டாபிக்ஸ்