தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Peyarchi: குரு வருமானம் தரப் போகின்றார்.. ராஜயோக பெறும் ராசிகள்

Guru Peyarchi: குரு வருமானம் தரப் போகின்றார்.. ராஜயோக பெறும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 27, 2023 12:31 PM IST

குரு பகவான் நல்ல பலன்களை கொடுக்கப் போகும் ராசிகளை இங்கே காண்போம்.

குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி

குருபகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகிறார் வரும் டிசம்பர் 31ம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடைகிறார். வரும் 2024 ஆம் ஆண்டு மே மாதம் குருபகவான் இடமாற்றம் செய்கிறார்.

இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் குரு பகவான் வரும் 2025 ஆம் ஆண்டு வரை ரிஷப ராசியில் பயணம் செய்ய உள்ளார். இதன் காரணமாக அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகளை இங்கே காண்போம்.

மேஷ ராசி

 

குரு பகவான் உங்கள் ராசியில் இரண்டாம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். அதன் காரணமாக உங்களுக்கு மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். கஷ்டங்கள் அனைத்தும் விலகும். கடன் பிரச்சனைகள் தீரும். குரு பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். பணவரவில் எந்த குறையும் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மரியாதை அதிகரிக்கும்.

ரிஷப ராசி

 

குரு பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். உங்கள் ராசியில் குரு பகவான் அதிர்ஷ்டத்தை கொடுக்க போகின்றார். வீட்டில் மங்கள காரியங்கள் நிகழ உள்ளது. தடைபட்ட காரியங்கள் அனைத்தும் நடக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். புதிய வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குரு பகவானின் முழு பலன்களும் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. பணவரவில் எந்த குறையும் இருக்காது.

மிதுன ராசி

 

குரு உங்களுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றார். பணத்திற்கு எந்த குறையும். இருக்காது. வருமானம் அதிகரிக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணவரவில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel