தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Find The Rasis That Will Give Raja Yoga Along With Venus Of Mars

Money Luck: சுக்கிரனோடு உச்சம் சென்ற செவ்வாய்.. அதிர்ஷ்ட மழை ஆரம்பம்.. பணத்தில் குளிக்கும் 3 ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 15, 2024 04:03 PM IST

Money Luck: சனி சுக்கிரன், செவ்வாய் இவர்கள் மூவரும் ஒரே ராசியில் பயணம் செய்து வருகின்றனர். இவர்களுடைய சேர்க்கையானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக பெற போகின்றனர்.

சுக்கிரன், செவ்வாய்
சுக்கிரன், செவ்வாய்

ட்ரெண்டிங் செய்திகள்

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிர பகவான். இவர் ஆடம்பரம், சொகுசு, காதல், பேச்சு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் சுக்கிரன். இவர் தற்போது கும்ப ராசியில் குடியேறியுள்ளார்.

சனிபகவானின் சொந்த ராசியான கும்ப ராசியில் சனிபகவானின் பயணம் செய்து வருகின்றார். மார்ச் 15ஆம் தேதியான இன்று செவ்வாய் பகவான் கும்ப ராசியில் நுழைந்துள்ளார். மார்ச் 7ஆம் தேதி அன்று சுக்கிரன் நுழைந்தார்

தற்போது சனி சுக்கிரன், செவ்வாய் இவர்கள் மூவரும் ஒரே ராசியில் பயணம் செய்து வருகின்றனர். இவர்களுடைய சேர்க்கையானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக பெற போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் செவ்வாய் மற்றும் சுக்கிரன் சேர்க்க நிகழ்ந்துள்ளது. இதனால் உங்களுக்கு வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு ஏற்றவாறு முடிவு அடையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாள் நிறைவேறாத ஆசைகள் எப்போதும் நிறைவேறும். புதிய வேலையை தொடங்குவதற்கான காலமாக இது அமையும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.

விருச்சிக ராசி

 

உங்களுடைய நான்காவது வீட்டில் செவ்வாய் மற்றும் சுக்கிரன் சேர்க்கை யோகம் உருவாகி உள்ளது. இதனால் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணையோடு அமைதி அதிகரிக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் விலகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.

மேஷ ராசி

 

உங்கள் ராசியில் 11 வது வீட்டில் மகாலட்சுமி யோகம் உருவாகியுள்ளது. இதனால் உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். செவ்வாய் மற்றும் சுக்கிரன் உங்களுக்கு சிக்கிக் கிடந்த பணத்தை எடுத்துக் கொடுக்கப் போகின்றனர். வியாபாரத்தில் பணம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். சிக்கிக் கிடந்த பணங்கள் உங்களை தேடி வரும். புதிய வாகனம் மற்றும் வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பேச்சுத் திறமையால் பல காரியங்கள் வெற்றி அடையும். மற்றவர்களிடத்தில் உங்களுக்கு மரியாதை அதிகரிக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel