Murugan Vazhipadu: முருகப் பெருமான் உங்களுடன் இருப்பதற்கான அறிகுறிகள் இதோ.. இதில் ஒன்றையாவது நீங்க உணர்ந்திருப்பீங்க!-here are the signs that lord muruga is with you hope you realised any one of these - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Murugan Vazhipadu: முருகப் பெருமான் உங்களுடன் இருப்பதற்கான அறிகுறிகள் இதோ.. இதில் ஒன்றையாவது நீங்க உணர்ந்திருப்பீங்க!

Murugan Vazhipadu: முருகப் பெருமான் உங்களுடன் இருப்பதற்கான அறிகுறிகள் இதோ.. இதில் ஒன்றையாவது நீங்க உணர்ந்திருப்பீங்க!

Manigandan K T HT Tamil
Sep 23, 2024 12:47 PM IST

Lord Murugan: குழந்தை இல்லாதவங்களுக்கு குழந்தை பிறக்கணும், சொந்த வீடு, மனை அமையல அதெல்லாம் அமையனும்னு சொல்லி நிறைய நீங்க வழிபாடு இதெல்லாம் செய்வீங்க. ஒரு சிலருக்கு உங்களுடைய கர்ம வினைகளின் அடிப்படைபடி சீக்கிரமாவே பலன் கிடைச்சிரும்.

Murugan Vazhipadu: முருகப் பெருமான் உங்களுடன் இருப்பதற்கான அறிகுறிகள் இதோ.. இதில் ஒன்றையாவது நீங்க உணர்ந்திருப்பீங்க!
Murugan Vazhipadu: முருகப் பெருமான் உங்களுடன் இருப்பதற்கான அறிகுறிகள் இதோ.. இதில் ஒன்றையாவது நீங்க உணர்ந்திருப்பீங்க! (pixabay)

தங்களையும் தங்களுடைய வீட்டையும் நல்லாவே முருகப்பெருமான் பாதுகாப்பு வளையத்துக்குள்ள கொண்டு வந்திருக்காங்க.

குழந்தை பாக்கியம்

குழந்தை இல்லாதவங்களுக்கு குழந்தை பிறக்கணும், சொந்த வீடு, மனை அமையல அதெல்லாம் அமையனும்னு சொல்லி நிறைய வந்து நீங்க வழிபாடு இதெல்லாம் செய்வீங்க. ஒரு சிலருக்கு உங்களுடைய கர்ம வினைகளின் அடிப்படைபடி சீக்கிரமாவே வந்து பலன் கிடைச்சிரும்.

ஆனா ஒரு சிலருக்கு தள்ளி தள்ளி போயிட்டு இருக்கும் அதாவது வீடு வாங்குற மாதிரி யோகம் வரும் ஆனா அமையாது வேற யாராவது வாங்கிடுவாங்க மனை வாங்குற மாதிரி யோகம் வரும் ஆனா பார்த்தீங்கன்னா அது தட்டி போயிடும் குழந்தை வந்து கருவுல நிக்கும் ஆனா பார்த்தீங்கன்னா கலைஞ்சு போயிடும் இந்த மாதிரி இருக்கும்போது நீங்க யாருமே முருகப்பெருமானை தப்பா நினைக்க வேண்டாம்.

முருகன் உங்களுடன் இருப்பதற்கான அறிகுறிகள்

இப்ப தீராத ஏதாவது ஒரு கஷ்டம் இருக்கும். அப்போ அந்த கஷ்டத்தை போக்கக்கூடிய இடத்துல யாராவது நமக்கு ஒருத்தங்க உதவி செய்வாங்க பாத்தீங்களா அவர்களுடைய பெயர் அப்படின்னு பார்த்தீங்கன்னா முருகப் பெருமானுடைய பெயரா வந்து இருக்கும். நீங்க என்ன ஒரு கஷ்டப்பட்டீங்கனாலும் உங்களுக்கு ஓடி வந்து உதவி செய்றவங்க அப்படிங்கறத பார்த்து பார்த்தீங்கன்னா கண்டிப்பா முருகப்பெருமானுடைய பெயர்ல உள்ள ஒருத்தங்களாதான் இருப்பாங்க.

அடுத்து மனசுக்குள்ள ஏதாவது ஒன்னு போட்டு குழப்பிட்டு இப்ப நம்ம எடுத்திருக்கக்கூடிய இந்த முடிவானது சரியா தப்பான்னு குழம்பி தவிக்கும் போது உங்களுக்கு கந்த சஷ்டி கவசமோ கந்தகுரு கவசமோ இல்ல யாம் இருக்க பயமே அப்படிங்கிற முருகப்பெருமானுடைய வாசகமோ இல்ல முருகப்பெருமானுடைய படமோ எங்கேயாவது வந்து கண்டிப்பா வந்து உங்க கண்ணுல தென்படும்.

அதாவது நீ சரியான பாதையில தான் போயிட்டு இருக்கிற. மேலும் இதுல ஏதாவது பிரச்சனை வரமாதிரி இருந்தா நான் உனக்கு துணையா இருக்கேன். நீ தைரியமா செயல்படு நான் உன் கூடவே தான் இருக்கேன். நீ எவ்வளவு தூரம் போனாலும் உன்னை தொடர்ந்து நான் வந்துட்டே இருக்கிறேன். அப்படிங்கறத உணர்த்துற மாதிரி இருக்கும் நம்ம போகும் இடத்துல கூட முருகப்பெருமானுடைய கோயிலை வந்து பார்க்கலாம். அதே மாதிரி நீங்க எப்ப முருகப்பெருமானை கோவில்ல போய் தரிசனம் பண்ணனும்னு நினைச்சீங்கன்னாலும் உடனடியா உங்களுக்கு அந்த பாக்கியம் வந்து கிடைக்கும். அப்படின்னே சொல்லலாம் அதேபோல அடிக்கடி கனவுல முருகப்பெருமான் வருவாங்க.

மேலும் அந்த வேல் வரலாம், அடுத்து முருகப்பெருமானின் வாகனமான மயில் வரலாம். இல்லைன்னா முருகப்பெருமான் இருக்கக்கூடிய அந்த அறுபடை வீடுகள்ல ஏதாவது ஒன்னு கோவிலோ மலையோ உங்க கனவுல வந்து கட்டாயம் வந்து வரும், இன்னும் ஒரு சிலருக்கு பார்த்தீங்கன்னா திருச்செந்தூர் அந்த கடல்ல இருக்கிற அந்த கோவில் இது எல்லாமே கனவுல தோன்றும். இந்த மாதிரி எல்லாம் இருந்துச்சு அப்படின்னா முருகப்பெருமானுடைய அருள் பரிபூரணமா உங்களுக்கு உண்டுன்னு நீங்க தெரிஞ்சுக்கோங்க. அடுத்து உங்க வீட்ல இருக்கக்கூடிய சின்ன குழந்தைகள் இருக்காங்கன்னா, அவங்க ஆண் குழந்தைகளா இருந்தாலும் சரி பெண் குழந்தைகளாக இருந்தாலும் சரி பார்ப்பதற்கு அப்படியே முருகப்பெருமானுடைய முக லட்சணம் அப்படியே வந்து அவங்களுக்கு தெரியும்.

இப்ப நம்ம வந்து படத்துல தான் வந்து முருகப்பெருமானை வந்து நம்ம பார்க்கிறோம் இருந்தாலும் அதேபோல முகம் வந்து நம்ம வீட்டு குழந்தைகளுக்கும் வந்து இருக்கும் மேலும் உங்க வீட்டு குழந்தைங்க முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரத்திலயோ திதியிலயோ அதாவது ஒரு கிருத்திகை நட்சத்திரம் பூச நட்சத்திரம் விசாக நட்சத்திரம் இது போன்ற நட்சத்திரங்கள்ல பிறந்திருந்தாலோ இல்ல செவ்வாய்க்கிழமை பிறந்திருந்தாலோ இல்ல சஷ்டி திதியில பிறந்திருந்தாலோ இருந்தாலும் கட்டாயம் வந்து அந்த முருகப்பெருமானே தான் உங்களுக்கு வந்து குழந்தையா பிறந்திருக்காங்கன்னு நீங்க நம்பலாம்.

முருக பக்தர்கள் ஏதாவது ஒரு சிக்கல்ல மாட்டிக்கிட்டாங்க ஏதாவது ஒரு கஷ்டத்துல இருக்க அப்படிங்கும் போது கண்டிப்பா ஏதாவது ஒரு உருவத்துல முருகப்பெருமானே நேர்ல வந்து அவங்களுக்கு நிச்சயம் வந்து உதவி செய்வாங்க.

ஆண் உருவில பெண் உருவிலன்னு எந்த உருவில வேணாலும் அவர் வரலாம்.கண்டிப்பா வந்து உதவி செய்வாங்க அவங்க யார் என்ன ஊர் என்ன பேர் என்ன எதுவுமே வந்து தெரியாது சில சமயங்கள் பார்த்தீங்கன்னா நமக்கு தெரிந்தவர்கள் மூலமா வந்துட்டு வருவாங்க சில சமயம் நமக்கு வந்து அவங்க யாருன்னே தெரியாது அந்த மாதிரி வெளியாட்கள் மூலமாவும் வந்துட்டு உதவி செய்வாங்க.

Whats_app_banner

டாபிக்ஸ்