DMK Alliance: கல்வியை காவிமயமாக்கும் முயற்சி..முருகப் பெருமானுக்கு நடத்தப்பட்ட மாநாடு - திமுக கூட்டணி கட்சிகள் கண்டனம்
DMK Alliance: முருகப் பெருமானுக்கு நடத்தப்பட்ட மாநாட்டில் கல்வியை காவிமயமாக்கியதாக திமுக மீது கூட்டணி கட்சிகளான விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. அதிமுக - பாஜக இடையே எந்த உறவும் இல்லை என்பதை தெளிவாகியிருப்பதால் கூட்டணி கட்சிகளுக்கு புதிய கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

2019 ஆம் ஆண்டு முதல் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் வலுவாகச் செயல்பட்டு வரும் கூட்டணி கட்சிகள், சமீபகாலமாக மு.க.ஸ்டாலின் தலைமையிலான அக்கட்சியின் ஆட்சிக்கும், நிர்வாகத்துக்கும் எதிராகப் பேசத் தொடங்கியுள்ளனர்.
சமீபத்தில், பழனியில் முருகப்பெருமானுக்கு நடத்தப்பட்ட மாநாட்டில் கல்விக்கு காவி நிறம் பூசப்பட்டதாக திமுகவினர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக), இந்திய கம்யூனிஸ்ட் (சிபிஐ), மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்) கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
எதிர்கட்சிகள் கண்டனம்
சமய நிகழ்வுகளின் போது பள்ளி மாணவர்கள் இந்து சமயப் பாடலான “கந்த ஷஷ்டி கவசம்” பாடுவது, இந்து சமய அறநிலையத்துறை துறையால் நிர்வகிக்கப்படும் கோயில்கள் மற்றும் கல்லூரிகளில் முருகன் சம்பந்தப்பட்ட பக்தி இலக்கியப் போட்டிகள் நடத்துவது, முருகனின் கற்றல் உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. கல்லூரி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக முருகன் குறித்த கற்றல் பாடமும் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
