Kids Tour Plan: லாங் வீக்கெண்ட் வரப்போகுது! குழந்தைகள கூட்டிப் போக சரியான இடம் இத் தான்!-tamilnadutourist places for school kids - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Kids Tour Plan: லாங் வீக்கெண்ட் வரப்போகுது! குழந்தைகள கூட்டிப் போக சரியான இடம் இத் தான்!

Kids Tour Plan: லாங் வீக்கெண்ட் வரப்போகுது! குழந்தைகள கூட்டிப் போக சரியான இடம் இத் தான்!

Suguna Devi P HT Tamil
Sep 23, 2024 12:24 PM IST

Kids Tour Plan: பள்ளிகளில் காலாண்டு பரீட்சை முடிந்து விடுமுறைக்கு தயாரா இருக்க வேண்டிய நேரம் வந்தாச்சு. குழந்தைகள் மகிழ்ச்சியுடனும், ஆச்சர்யத்துடனும் இருக்குமாறு இடங்களுக்கு அழைத்தச செல்ல வேண்டும்

Kids Tour Plan: லாங் வீக்கெண்ட் வரப்போகுது! குழந்தைகள கூட்டிப் போக சரியான இடம் இத் தான்!
Kids Tour Plan: லாங் வீக்கெண்ட் வரப்போகுது! குழந்தைகள கூட்டிப் போக சரியான இடம் இத் தான்!

பள்ளிகளில் காலாண்டு பரீட்சை முடிந்து விடுமுறைக்கு தயாரா இருக்க வேண்டிய நேரம் வந்தாச்சு. குழந்தைகள் மகிழ்ச்சியுடனும், ஆச்சர்யத்துடனும் இருக்குமாறு இடங்களுக்கு அழைத்தச்செல்ல வேண்டும். இதற்கான சில இடங்களை பரிந்துரைகளை அறிந்து கொள்ளை இதை முழுவதுமாக படியுங்கள். 

மாவட்டம் வாரியாக 

தமிழ்நாட்டை பொறுத்த வரை ஒவ்வொரு மாவட்டத்திலும் அதன் தனி சிறப்பான இடங்கள் இருக்கின்றன. இவையே இங்கு சென்று அதிக தனித்துவமான சிறப்பம்சங்களை காணவும் தூண்டுகோளாக அமைகிறது. அந்த வரிசையில் சென்னையை ஒட்டியுள்ள சில தேசிய பூங்காக்கள் குழந்தைகளின் மனம் விரும்புமாறு அமைந்துள்ளன. விலங்குகள் அதிகம் உள்ள இடங்களுக்கு செல்லும் போது தானாகவே குழந்தைகள் உற்சாகம் அடைந்து விடுகின்றனர். சென்னைக்கு அருகில் உள்ள வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் பல விதமான விலங்குகள், பறவைகள் என இருப்பதால் குழந்தைகள் ஆச்சரியத்துடன் பார்ப்பார்கள். 

மேலும் கிண்டி தேசிய பூங்கா, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணலாயம் ஆகியவையும் சிறந்த இடங்களாகும். இந்தியாவின் பல்லுயிர் பெருக்க மண்டலமாக திகழும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள முதுமலை யானைகள் சரணலாயம், மேகமலை, சிங்கவால் குரங்கு உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் மலை என பல்வேறு விதமான உயிரியல் இடங்கள் உள்ளன. 

குழந்தைகளின் மகிழ்ச்சி 

பள்ளிக் குழந்தைகளுக்கு காலாண்டு விடுமுறை சமயத்திலும் அறிவியல் பாடம் தொடர்பாக இந்த உயிரினங்களை அறிமுகப்படுத்துவதால் குழந்தைகள் ஆர்வத்துடன் வருவார். மேலும்  பொதுவாக செல்லும் சுற்றுலா தலங்களான ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு செல்வதால் அதிக நெரிசல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.  

அம்பாசமுத்திரம் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் தாமிரபரணி ஆறு பாயும் இடத்தில் அமைந்துள்ளது அகத்தியர் அருவி. இங்கு அனைத்து நாட்களிலும் தண்ணீர் விழுவதால் சுற்றுலா பயணிகள் எளிமையாக செல்லலாம். இந்த அருவிக்கு அருகில் தான் பாபநாசம் சிவன் கோவில் மற்றும் சொரிமுத்து அய்யனார் திருக்கோவில் அமையப்பெற்றுள்ளது. மேலும் திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு முக்கிய அணையான பாபநாசம் அணை குழந்தைகளை அழைத்துசெல்ல சிறந்த இடமாகும். இது திருநெல்வேலியிலிருந்து சுமார் 50 கிமீ தொலைவில் உள்ளது. 

இது போல நீங்கள் இருக்கும் மாவட்டங்களுக்கு அருகாமையில் பல சுற்றுலா தலங்கள் இருக்கலாம். அதனை குறித்து தெரிந்து கொண்டு அந்த இடங்களுக்கு செல்லுங்கள். குறைந்த செலவில் குழந்தைகளை குதூகலப்படுத்துங்கள். மிகவும் தொலைவான இடங்களுக்கு செல்வதை விட இது நல்ல முடிவாக அமையும். மேலும் அதிகமானோர் வரும் வழக்கமான இடங்களை தவிர்ப்பது நல்லது. இத்தகைய முடிவுகளை எடுத்து மகிழ்ச்சியுடன் பயணம் செய்து வாருங்கள்.   

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.