தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Nerthikadan: நேர்த்தி கடன் மறந்து விட்டதா என்ன செய்வது என குழப்பமா.. இத மட்டும் தெரிஞ்சுக்கோங்க!

Nerthikadan: நேர்த்தி கடன் மறந்து விட்டதா என்ன செய்வது என குழப்பமா.. இத மட்டும் தெரிஞ்சுக்கோங்க!

Pandeeswari Gurusamy HT Tamil
Aug 24, 2023 11:24 AM IST

பொதுவாக குழந்தை இல்லாத போது ஏராளமான கோயில்களில் நேர்த்தி கடன் வைக்கிறோம். அதில் நம் உறவினர்கள் என ஏராளமானோர் நேர்த்தி கடன் வைக்கின்றனர். ஆனால் அதில் சிலர் அதை சொல்ல மறந்து விடுகின்றனர்.

விநாயகர்
விநாயகர்

நேர்த்தி கடன்

நேர்த்திக்கடன் என்பது ஒரு பக்தர் தன் வாழ்வில் இந்த நல்ல விஷயங்கள் நடந்தால் நான் கடவுளுக்கு இதை செய்கிறேன் என்று வேண்டிக்கொள்வதற்கு நேர்த்திக்கடன் என்று பெயர்.

ஒரு கடவுளுக்கு நாம் வைக்கும் நேர்த்திக்கடனை நாம் நினைத்த காரியம் வெற்றி அடைந்த உடனே செய்து விட வேண்டும்.

சமயத்தில் நாம் அவசரத்தில், ஆதங்கத்தில் நாம் படும் போது நாம் ஏதாவது நேர்த்தி கடனை வைக்கிறோம். ஆனால் சமயத்தில் நாம் நேர்த்திக்கடன் வைக்கும்போது இங்கு இருக்கிறோம். அந்த காரியம் நிறைவேறும் போது நாம் வெளி மாநிலத்திற்கு அல்லது வெளி நாட்டிற்கு சென்றிருந்தால் என் செய்ய வேண்டும் தெரியுமா.

முடி காணிக்கை

குறிப்பாக நாமக்கு குழந்தை பெறந்தால் பிறக்கும் குழந்தைக்கு திருப்பதியில் மொட்டை எடுத்து கொள்கிறோம் என்று வேண்டி கொள்கிறோம். நாம் வெளிநாட்டில் இருக்கும் போது குழந்தை பிறந்தால் நாம் அந்த நாட்டில் உள்ள ஆலையங்களுக்கு சென்று முடிக்காணிக்கை செய்து அதில் ஒரு பகுதி முடியை ஒரு மஞ்சள் துணியில் கட்டி வைத்து விட வேண்டும். அதோடு சேர்த்து அவர் அவர் குல தெய்வத்திற்கும் காசு முடிந்து வீட்டின் பூஜை அறையில் வைத்து விட வேண்டும். பின்னர் எத்தனை ஆண்டு கழிந்து சொந்த நாட்டிற்கு வந்தாலும் வரும்போது திருப்பதிக்கு போய் அப்போது செலுத்தி விட வேண்டும்.

இதேபோல் பால் குடம், காவடி போன்ற வேண்டுதல்களையும் இப்படி செய்யலாம்.

மறந்து போன நேர்த்திக்கடன்

பொதுவாக குழந்தை இல்லாத போது ஏராளமான கோயில்களில் நேர்த்தி கடன் வைக்கிறோம். அதில் நம் உறவினர்கள் என ஏராளமானோர் நேர்த்தி கடன் வைக்கின்றனர். ஆனால் அதில் சிலர் அதை சொல்ல மறந்து விடுகின்றனர்.

குல தெய்வ வழிபாடு

அப்படி இருக்கும் நேர்த்தி கடனை எப்படி செய்வது என்றால் குல தெய்வம் இருப்பவர்கள் பிரார்த்தனை செய்து பவுர்ணமி அன்று வழிபட வேண்டும். மேலும் அந்த குல தெய்வத்திற்கு பிடித்த உணவுகளை முறைப்படி படையலிட்டு மனம் உருகி வேண்டி கொள்ள வேண்டும். அங்கு கடவுளே நான் மறந்த நேர்த்திக்கடனுக்கு பதிலாக இதை ஏற்று என் குலத்தை காக்க வேண்டும் என்ற வேண்டி கொள்ள வேண்டும். இப்படி குறைந்தது 6 மாதமாவது பவுர்ணமி அன்று வழிபட வேண்டும்.

ஆனால் எங்கள் குல தெய்வம் வெகு தொலைவில் உள்ளது மாத மாதம் போய் வர முடியாது என்றால் வீட்டிலேயே குல தெய்வத்தை மனமுறுகி வேண்டி கொள்ள வேண்டும். உணவு படையல் வைக்க வேண்டும். உணவை அன்னதானம் செய்ய வேண்டும்.

நேர்த்திக்கடனை மறக்காமல் இருக்க

பொதுவாக நேர்த்திக்கடன் வைத்ததை மறக்காமல் இருக்க நம்மைச் சுற்றி உள்ளவர்களிடம் செல்லி விட வேண்டும். அதேபோல் ஒரு நோட்டில் எழுதி அதை பூஜை அறையில் வைத்து விட வேண்டும். இப்படி செய்தால் மறப்பதற்கான வாய்ப்புகள் குறைவு

கடன் என்பது எப்படி ஒரு சுமையோ அதேபோல் நேர்த்திக்கடன் என்பதும் பெரிய சுமைதான். அதனால் நேர்த்திக்கடனை அந்தந்த தெய்வங்களை செய்து விடுவது நல்லது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்