தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Peyarchi Palangal 2024: ’ராஜா ஆக போகும் ராசி யார்?’ துலாம் முதல் மீனம் வரை குரு பெயர்ச்சி பலன்கள்!

Guru Peyarchi Palangal 2024: ’ராஜா ஆக போகும் ராசி யார்?’ துலாம் முதல் மீனம் வரை குரு பெயர்ச்சி பலன்கள்!

Kathiravan V HT Tamil
May 01, 2024 06:15 AM IST

“Guru Peyarchi Palangal 2024: துலாம் முதல் மீனம் வரை உள்ள ராசிகளின் குரு பெயர்ச்சி பலன்கள் இதோ!”

துலாம் முதல் மீனம் வரையிலான குரு பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்
துலாம் முதல் மீனம் வரையிலான குரு பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்
  • துலாம்

8ஆம் இடத்தில் வரும் குரு பகவானால், ராஜயோகம் உண்டாகும்.  தேக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். உடல் நல பாதிப்புக்கு  சுய மருத்துவம் எடுத்துக் கொள்ள கூடாது. பிள்ளைகள் விஷயத்தில் கோபம் கூடாது. 

தனம், வாக்கு, குடும்பம் விஷயங்களில் அனுகூலம் கூடும். வாழ்கை துணைக்கு புகழ் உண்டாகும். திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும். வீடு கட்டுவது, நிலம் வாங்குது, வாகனம் வாங்குவது போன்ற சுப விரயங்கள் ஏற்படும். குடும்பத்தினர் உடன் அன்னோனியம் அதிகரிக்கும். கடன் வாங்கி முதலீடு போட்டாலும் லாபம் கிடைக்கும்.  

  • விருச்சிகம்

மன அழுத்தம் நீங்கும், லாபம் ஏற்படும். பண சேமிப்பு உண்டாகும். புதிய முதலீட்டு வாய்ப்புகளை ஏற்படுத்தி கொள்வீர்கள். உடற்பயிற்சி செய்வது முக்கியம், வயிறு, கால், முட்டி பாதங்களில் கவனம் தேவை. பிள்ளைகள் விஷயத்தில் கோபம் கூடாது. தாய் மற்றும் தந்தை வழி உறவுகள் உடன் வாக்குவாதம் கூடாது. 

திருமணம், குழந்தை பாக்கியம், வீடு வாங்குவது உள்ளிட்ட சுபகாரியங்கள் நடைபெறும். 3ஆம் இடத்தை குரு பார்ப்பதால் தைரியம் உண்டாகும். இரவு நேர பயணத்தில் கவனம் அவசியம். திருக்கொள்ளிக்காட்டில் வழிபாடு நடத்துவது நன்மை தரும். 

  • தனுசு

6ஆம் இடத்திற்கு குரு பகவான் வருவதால் தனுசு ராசு மிக கவனமாக இருக்க வேண்டும். கோபம், சண்டை சச்சரவு வேண்டாம். தேக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது முக்கியம். 

குருவின் 10ஆம் இட பார்வையால், உத்யோகம், தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பணத்தட்டுப்பாடு தீரும். புதிய பயணங்கள் உண்டாகும். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். பெற்றோர் பெரியோர் உடன் தகராறு வேண்டாம். ஆலங்குடி அல்லது தென்குடி திட்டை கோயில்களில் வழிபாடு செய்வது நன்மை தரும்.  

  • மகரம்

குருவின் 9ஆம் பார்வை கிடைப்பதால் வாழ்கையில் வளர்ச்சி உண்டாகும். தாய் வழி மற்றும் தந்தை வழி உறவுகளில் ஏற்றம் உண்டாகும். லாபம் ஏற்பட்டு பணம் சேரும், முதலீடு செய்யும் அளவுக்கு வசதிகள் பெருகும். 

கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்னைகள் நீங்கும். தனியாக சென்று தொழில் செய்ய வாய்ப்பு உண்டாகும். அரசியல், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட சமூகத்தில் மதிப்பு மிக்கவர்களின் தொடர்பு உண்டாகும். 

கலை, ஊடகத்துறையில் உள்ள மகர ராசிக்கார்கள் விருதுகளை பெருவார்கள். வார்த்தைகளிலும் வயிறு தொடர்பான பிரச்னைகளிலும் கவனம் தேவை. நரசிம்மர் மற்றும் துர்கை அம்மன் வழிபாடு நன்மைகளை ஏற்படுத்தி தரும். 

  • கும்பம்

4ஆம் இடத்திற்கு வரும் குரு பகவான் 8, 10, 12 ஆகிய இடங்களை பார்க்கிறார். தாய் வழி உறவு, பூர்வீக சொத்துக்களில் கவனமாக இருக்க வேண்டும். கோபம் அடையாமல் இருக்கும் கும்ப ராசிக்காரர்கள் நன்மைகளை பெறுவார்கள். 

யாரையும் சபிக்காமல் இருக்க வேண்டும். மன அழுத்தம் நீங்கும். பிரச்னை உள்ளவர்களிடம் நீங்களே பேசி சமாதானம் செய்து கொள்ளுங்கள். 60 வயதிற்கு மேற்பட்ட கும்ப ராசிக்கார்கள் உடல்நலனின் கவனமாக இருக்க வேண்டும். ஆஞ்சநேயர் வழிபாடு சிக்கல்களை தீர்த்து நன்மைகளை பெருக்கும். 

  • மீனம்

மூன்றாம் இடத்திற்கு வரும் குரு பகவான் உங்கள் ராசிக்கு 7, 9, 11 ஆகிய இடங்களை பார்க்கிறார். திருமணத் தடைகள் நீங்கும், குடும்பத்தில் இருந்த் பிரச்னைகள் தீரும். மன அழுத்தம் இல்லாமல் இருக்க உடற்பயிற்சி செய்வது முக்கியம். 

நீண்ட காலமாக இருந்த கஷ்டங்கள் நீங்கி ஏற்றம் உண்டாகும். படிப்பு, உத்யோகம், தொழில், வியாபாரங்களில் இருந்த தடைகள் நீங்கி பண வரவு உண்டாகும்.  புதிய முதலீடுகளை செய்யும் நீங்கள் தியான பயிற்சிகளை மேற்கொள்வது முக்கியம். கோளறு பதிக்கத்தை படிக்கவும், கேட்கவும் செய்தால் சிக்கல்கள் நீங்கி நன்மைகள் உண்டாகும். 

 

 

 

 

 

 

WhatsApp channel