தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Peyarchi 2024 Vishakham: தனவரவை தரும் குரு! விசாகம் நட்சத்தினர் குரு பெயர்ச்சி பலன்கள்

Guru Peyarchi 2024 Vishakham: தனவரவை தரும் குரு! விசாகம் நட்சத்தினர் குரு பெயர்ச்சி பலன்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 25, 2024 11:00 PM IST

துலாம், விருச்சிக ராசியில் இருக்கும் விசாகம் நட்சத்தினருக்கு எதிர்வரும் குருபெயர்ச்சியால் கிடைக்க போகும் நற்பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

விசாகம் நட்சத்தினர் குரு பெயர்ச்சி பலன்கள்
விசாகம் நட்சத்தினர் குரு பெயர்ச்சி பலன்கள்

மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு பகவான் ஐந்தாம் பார்வையாக கன்னி, ஏழாம் பார்வையாக விருச்சிக ராசியையும், ஒன்பதாம் பார்வையாக மகரத்தையும் பார்வையிடுகிறார். அக்டோபர் முதல் பிப்ரவரி வரை நான்கு மாத காலங்களில் குரு வக்கிர நிவர்த்தி அடைகிறார்.

குரு பெயர்ச்சியால் விசாகம் நட்சத்தினர் பெறும் பலன்கள்

விசாகம் நட்சத்தினர் குரு பகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாக உள்ளார்கள். உங்கள் நட்சத்திரத்தின் அதிபதியாகவே குரு பகவான் இருப்பதால் இந்த பெயர்ச்சி முழுவதும் தனவரவை கொடுப்பார்.

சனி திசையில் இருக்கும் நபர்களுக்கு (30 வயது வரை) படிப்பில் எந்த பாதிப்பும் இருக்காது. வெற்றி வாய்ப்புகளை கொடுக்கும். வேலை தேடுவோருக்கு சிறிய தடைகள் ஏற்பட்டு பலன் பெறலாம். சக பணியாளர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். மனஅழுத்தம் வந்து போகும். திருமண வயதில் இருப்பவர்கள் வரன் அமையும். சுய தொழில் செய்பவர்களுக்கு பொருளாதார தட்டுப்பாடு ஏற்படலாம். கடன் வாங்க நேரிடலாம்

புதன் திசையில் இருப்பவர்களுக்கு (45 வயது வரை) வெற்றி வாய்ப்புகள் உண்டு. திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும். நகை, வீட்டுக்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். தேவைப்படும் அளவில் பணவரவு இருக்கும். வெளிநாடு வேலை வாய்ப்புகள் அமையும்

கேது திசையில் இருப்பவர்களுக்கு (54 வயது வரை) கடன் தொல்லைகள் அகலும். பிள்ளைகளில் வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பீர்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகளை கொடுக்கும்

சுக்கிர திசையில் இருப்பவர்கள் (74 வயது வரை) நல்ல மாற்றத்தை பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்னைகள் நீங்கும். வீடு கட்டும் யோகம் உண்டும். கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். புதிய தொழில் தொடங்குவதற்கான காலமாக உள்ளது

சூரிய திசையில் இருப்பவர்களுக்கு (80 வயது வரை) உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடல் ரீகதியா பிரச்னைகளால் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். இந்த குரு பெயர்ச்சியில் பொருளாதார மாற்றத்தினால் நல்ல வளர்ச்சியை பெறுவீர்கள்

பொதுப்பலன்கள்

பொருளாதார நிலையை பொறுத்தவரை எந்த பிரச்னையும் இருக்காது. வருமானத்துக்கு தகுந்த செலவினங்கள் ஏற்படலாம். தொடக்கத்தில் சிறு சிறு தடைகள் வந்தாலும் பின்னர் வெற்றியை பெறும் விதமாக இந்த காலம் அமைந்துள்ளது.

நம்பிக்கைக்கு உரியவர்களிடம் நெருக்கமாக இருந்தாலும், கவனத்தை கையாளுங்கள். மேற்கொள்ளும் முயற்சிகளில் நன்மையை பெறுவீர்கள். வெளிப்படை தன்மையுடன் இருங்கள். மற்றவர்களை நம்பி எந்த காரியத்திலும் இறங்க வேண்டாம்.

தேவை இருந்தால் மட்டுமே வேண்டிய பொருள்கள் வாங்குவதற்கு முன்னுரிமை அளியுங்கள். பொறுமையை கடைபிடியுங்கள். தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மற்றவர்களிடம் விவாதிக்க வேண்டாம்

இந்த பெயர்ச்சியில் தாய்வழி ஆதரவு உண்டு. முதலீடு செய்வதில் கவனம் தேவை. கலைதுறையில் இருப்பவர்களுக்கு வருமானம் போதிய அளவில் இருக்காது.

மாணவர்கள் படிப்பில் உரிய கவனம் செலுத்தாவிட்டால் போராட வேண்டிய நிலை ஏற்படும். வேலையில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் கவனமாக செயல்படுங்கள். மேலதிகாரியின் அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம். வேலைப்பளு அதிகரிக்கும். அதை பற்றி கவலை இல்லாமல் தைரியமாகவும், தன்னம்பிக்கையுடனும் செயல்படுங்கள்.

கடன் பிரச்னை இருப்பவர்களுக்கு குறைவதற்கான வாய்ப்பு உள்ளது. உடல் நல பாதிப்பில் இருந்தவர்களுக்கு சீராகும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.

பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்