Guru Vakra Peyarchi : எட்டில் குரு.. எந்த ராசிக்கு குரு வக்கிர பெயர்ச்சி பொன்னான காலம்.. பண மழை கொட்டும் பாருங்க!
Guru Vakra Peyarchi : குரு வக்கிர நிலை அடையக்கூடிய நேரத்துல வேலை வாய்ப்புகள் அதிகமாக வரப்போகிறது. ப்ரொமோஷன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு ஒரு நல்ல ஒரு இன்கிரிமெண்ட் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நீண்ட காலமாக எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும் ஒரு சாதகமான ஒரு காலகட்டம்
Guru Vakra Peyarchi : துலாம் ராசி அன்பர்களுக்கு கடந்த மே மாதம் அந்த குருபகவான் எட்டாம் இடமான ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகி வந்து விட்டார். இப்போது அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதி வக்கிர நிலை அடைய போகிறார். அந்த எட்டாம் இடத்திலேயே மறைவு ஸ்தானத்திலேயே குருபகவான் வக்கிர நிலை அடைய உள்ளார். அப்படி அடையக்கூடிய அந்த குருபகவான் ஒன்பதாம் தேதி அக்டோபர் மாதம் காலை சுமார் 11 மணி 46 நிமிடத்திற்கு குரு தன்னுடைய இயல்பு நிலையை மாற்றிக் கொண்டு வக்கிர நிலைக்கு திரும்புகிறார். இப்படி மாறக்கூடிய அந்த குருபகவான் அதாவது 2025 ஆம் வருடம் அடுத்த வருடம் இரண்டாவது மாதம் பிப்ரவரி மாதம் நான்காம் தேதி வரை அந்த வக்கிர நிலையிலேயே இருக்கிறார். ஐந்தாம் தேதிதான் உங்களுக்கு அந்த வக்கிர நிலையிலிருந்து இயல்பு நிலைக்கு திரும்புகிறார்.
குரு பகவானின் சிறப்புகள்.
குரு பகவான் எல்லா கிரகத்துக்குமே ஒரு ராஜாவாக திகழக்கூடியவர். அந்த குரு இல்லை என்றால் வாழ்க்கையே கிடையாது. புகழை தரக்கூடியவர். அந்தஸ்தை கொடுக்கக்கூடியவர் ஒரு பதவியை கொடுக்கக்கூடியவர். ஒரு நல்ல செல்வாக்கை கொடுக்கக்கூடியவர். தொழிலில் நல்ல முறையில் சிறந்து விளங்க வேண்டும் என்றால் அந்த குரு நல்ல ஸ்தானத்துல ஒரு நல்ல இடத்தில் இருக்க வேண்டும். தொழிலில் எல்லாம் சிறந்து விளங்க முடியும். இரண்டாம் இடத்துல குரு இருந்தால்தான் அந்த பணமாகப்பட்டது நம்மகிட்ட தக்க வைத்துக் கொள்ளக்கூடிய ஒரு நிலைமையில இருக்கும்.
அப்படிப்பட்ட குருபகவான் இப்போது வக்கிர நிலை அடைகிறார். வக்கிர நிலை அடையும்போது பாவத்தன்மையை பெறுகிறார். பாவத்தன்மை பெற்று பின்னோக்கி நகர்கிறார். பின்னோக்கி நகரும் போது இந்த துலாம் ராசி அன்பர்களுக்கு மறைவு ஸ்தானத்திலிருந்து தன்னுடைய ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தை அல்லது தகவல் தொடர்பு ஸ்தானத்தை இயக்க கூடிய ஒரு நேரத்திற்கு தான் வருகிறார். துலாம் ராசியினருக்கு உபஜய ஸ்தானதி அதிபதி எட்டாம் இடத்தில் இருக்கும்போது இந்த மே மாதத்திலிருந்து துலாம் ராசி அன்பர்களுக்கு நிறைய அவமானங்கள் குடும்பத்தின் மூலமாக இருக்கும். குரு என்று சொன்னாலே அதுல ஒரு நிறைய குடும்ப உறுப்பினர்கள் நிறைய பேர் இருப்பாங்க.
அதனால குடும்பத்தின் மூலமாக நிறைய அவமானங்கள் அசிங்கங்கள் சில பேர் சில உறவுகள் எல்லாம் இழந்து இழக்கக்கூடிய ஒரு நேரம். சில பேர் வியாதிகளினால ஒரு சில தொந்தரவுகளை அனுபவிக்கக்கூடிய ஒரு நேரமாக இருந்திருக்கும். எப்போ இந்த வியாதி வந்ததோ அதிலிருந்து உங்களுக்கு தூக்கமே இல்லை என்ற நிலை ஏற்பட்டிருக்கும்.
வக்கிர நிலை அடையும் குரு...
குரு எட்டாம் இடத்திலிருந்து வக்கிர நிலை அடையும் போது ஒரு மகிழ்ச்சியான ஒரு தருணமாக தான் இருக்கப்போகிறது. இந்த தருணத்தில் நீங்க சாதிக்க வேண்டிய விஷயங்கள் மிக அதிகமான ஒரு விஷயங்களாக இருக்கப்போகுது. துலாம் ராசி அன்பர்கள் ஆடை, ஆபரணங்கள் தொழில் செஞ்சுட்டு இருப்பீங்க. நகைக்கடை தொழில் துலாம் ராசி அன்பர்களுக்கு தான் பொருத்தமான ஒரு தொழிலாக இருக்கும். அதேபோல் கட்டிட வேலையிலேயே இன்டீரியர் டெக்கரேஷன், ஆர்க்கிடெக்ட், இந்த மாதிரியான ஒரு தொழில் எல்லாம் துலாம் ராசி அன்பர்களுக்கு ஒரு சிறந்த தொழில். இந்த தொழிலை செய்யக்கூடிய தகுதியானவர்கள்னா இந்த துலாம் ராசி அன்பர்கள் தான்.
துலாம் என்பது தராசு. எப்படி ஒருத்தரை அளவு செய்ய அளவுகோலாக அது இருக்குதோ அதே அளவுக்கு தான் இந்த துலாம் ராசி அன்பர்களும் தொழில் செய்யக்கூடிய இடத்திலே தன்னை சார்ந்து வருபவர்களை அதிகமாக அளவு அதாவது ஒரு கணக்கிட கூடியவர்கள்.
இந்த துலாம் ராசி அன்பர்களுக்கு கடந்த மார்ச் மாதத்திலிருந்து நிறைய இழப்புகள் இருந்திருக்கும். அந்த தொழில் மூலமாக சில பேருக்கு ப்ராஜெக்ட் எல்லாம் பெரிய அளவுல உங்களுக்கு வந்திருக்கும் கடைசி மார்ச் மாத்தில் இருந்து அப்படியே நின்றிருக்கும். அதுல இருந்து எந்தவிதமான ஒரு ஒரு நல்ல ஒரு வளர்ச்சியும் இருந்திருக்காது. கஸ்டமர் வந்திருக்க மாட்டாங்க. சில பேருக்கு நிறைய அந்த பண இழப்புகள் வந்திருக்கும். இந்த மாதிரியான ஒரு விஷயத்தை அனுபவித்த இந்த துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் குரு வக்கிர நிவர்த்தி ஒரு பொன்னான ஒரு காலகட்டம்.
ஒரு நான்கு மாத காலம் உங்களுக்கு ஒரு பெரிய நிவர்த்தியை கொடுக்கக்கூடிய ஒரு நேரமாக இருக்கப்போகிறது. இந்த காலகட்டத்தில் உங்களுக்கு நிறைய பண வரவுகள் எல்லாமே திரும்பி வருவதற்கு உண்டான ஒரு சாதகமான ஒரு காலகட்டம். இழந்த பணத்தை திரும்ப எடுக்கக்கூடிய ஒரு நேரம். அதற்கு உண்டான வாய்ப்புகள் உங்களுக்கு வரக்கூடிய ஒரு நேரமாக இருக்கப்போகிறது. இந்த துலாம் ராசி அன்பர்களுக்கு அதுவும் நகைக்கடை வச்சிருக்கிறவங்களுக்கு கடந்த ஒரு நான்கு மாதமாக ஒரு மூலதன இழப்புகள் அதிகமாக இருந்திருக்கும். இனி அடுத்து வரும நான்கு மாதத்துல நீங்க அதிகமான முதலீடு செய்தால் எவ்வளவுக்கு எவ்வளவு இழப்புகள் ஏற்பட்டதோ அதிலிருந்து மீண்டு வரக்கூடிய ஒரு நேரமாகத்தான் இருக்கப்போகிறது.
துலாம் ராசி அன்பர்கள் பெண்களாக இருந்தால் குடும்பம் சம்பந்தமான நிறைய விரைய செலவுகள் கடந்த காலத்துல இருந்திருக்கும். கணவனுக்கு ஏதோ ஒரு தேவையில்லாத நோய் நொடிகள் அடுத்து கடன்கள், அந்த கடன்கள் மூலமாக அவமானங்கள், அசிங்கங்கள் இந்த மாதிரியாக குடும்பம் மூலமாக உங்களுக்கு நிறைய பிரச்சனைகளை சந்திச்சிருப்பீர்கள். தேவையில்லாத எங்கேயோ இருந்து உங்களை இழுத்து பிடிச்சு கொண்டு வந்து இங்க உங்களை அவமானப்படுத்திட்டு இருப்பாங்க. இந்த மாதிரியான ஒரு அசம்பாவிதங்கள் எல்லாம் கடந்த ஒரு நான்கு மாதத்துல இந்த துலாம் ராசி அன்பர்களுக்கு நடைபெற்றிருக்கும்.
அதிலிருந்து எல்லாம் நிவர்த்தியாகக்கூடிய ஒரு நேரம். நீங்க உங்க குடும்பத்துல ஒரு அந்தஸ்தோடு ஒரு பதவியோடு ஒரு புகழோடு நீங்க என்னென்னலாம் எதிர்பார்த்தீங்களோ அது எல்லாமே நடக்கக்கூடிய ஒரு நேரமாக தான் இது இருக்கும். இந்த துலாம் ராசி அன்பர்களுக்கு அப்படியே எல்லாமே நேர்மறையாக நடக்கக்கூடிய ஒரு நேரமாக தான் இருக்கப்போகுது. குரு வக்கிர நிலை அடையக்கூடிய இந்த நான்கு மாதத்தில் திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்க கூடிய நேரம். சிலருக்கு குழந்தை பாக்கியம்ன்றது வெளிநாட்டுல இருக்கிறவங்களுக்கு ஒரு கிடைக்காத ஒரு பாக்கியமாக தான் உள்ளது. அது எல்லாமே நிவர்த்தி ஆகக்கூடிய ஒரு நேரம். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு குழந்தை பாக்கியமே இல்லை அப்படின்னு நினைக்கிறவங்களுக்கு எந்தவிதமான ஒரு வாய்ப்புமே இல்லை அப்படின்னு நினைக்கிறவங்களுக்கு தத்து எடுத்துக்க கூடிய ஒரு நேரம்.
குரு வக்கிர நிலை அடையக்கூடிய நேரத்துல வேலை வாய்ப்புகள் அதிகமாக வரப்போகிறது. நீங்க இருக்கக்கூடிய இடத்திலேயே உங்களுக்கு ஒரு ப்ரொமோஷன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு ஒரு நல்ல ஒரு இன்கிரிமெண்ட் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நீங்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும் ஒரு சாதகமான ஒரு காலகட்டமாக தான் இந்த நான்கு மாதங்கள் இருக்கப்போகுது. இறைவனை உள்ளன்போடு வழிபாடு செய்வது உங்களை பிரச்சனைகளில் இருந்து காக்கும் துலாம் ராசியினரே குழப்பத்தில் இருந்து மீண்டும் நிம்மதி பெருமூச்சு விடுங்கள்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
ஆன்மீகம் தொடர்பான பல தகவல்களை தெரிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்து இருங்கள்!
தொடர்புடையை செய்திகள்