Sukran: மேஷ ராசியில் சஞ்சரிக்கும் சுக்கிரன்.. கடன் தொல்லைத் தீரப்போகும் நான்கு ராசிகள்
Sukran: சுக்கிரன் மேஷ ராசியில் சஞ்சரிப்பதால், இந்த 4 ராசிக்காரர்களுக்கு பொருளாதார பிரச்னைகள் தீரும்.
Sukran: நவ கிரகங்களின் இயக்கம் ஒரு மனிதனின் வாழ்க்கையைப் பாதிக்கிறது என்று ஜோதிடம் கூறுகிறது. இப்போது, சுக்கிர பகவானின் நகர்வு காரணமாக, சில ராசிக்காரர்களுக்கு நிதி நன்மைகள் கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ஒன்பது கிரகங்களில் மிகவும் ஆடம்பரமான கிரகமாக, சுக்கிர பகவான் பார்க்கப்படுகிறது. சுக்கிர பகவான் மகிழ்ச்சி, ஆடம்பரம், அழகு மற்றும் மகிழ்ச்சியின் சின்னமாக இருக்கிறார். சுக்கிர பகவான் மாதம் ஒரு முறை தனது நிலையை மாற்றிக் கொள்கிறார். சுக்கிர பகவானின் பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஏப்ரல் 24அன்று, சுக்கிர பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு மாறினார். அவர் மே 19ஆம் தேதி வரை, சுக்கிர பகவானின் ராசியில் பயணம் செய்கிறார்.
பின்னர் ரிஷப ராசியில் நுழைய இருக்கிறார். சுக்கிர பகவானின் பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் அதே வேளையில், சில ராசிகளுக்கு பெரும் நன்மைகளைத் தருகின்றன. அத்தகைய ராசிகள் குறித்து அறிந்துகொள்வோம்.
மீனம்:
சுக்கிர பகவான் மீன ராசியின் இரண்டாவது வீட்டில் சஞ்சரிக்கிறார். இதனால் மீன ராசிக்கான பண யோகம் அதிகரித்துள்ளது. வியாபாரத்தில் உங்களது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் வருவாய் பெருகும். குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் அமையும். குடும்பத்தில் இருந்த அனைத்துப் பிரச்னைகளும் தீரும்.
கும்பம்:
சுக்கிர பகவான், கும்ப ராசியின் மூன்றாவது வீட்டில் நகர்கிறார். இது கும்ப ராசியின் மன உறுதியை அதிகரிக்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். மற்றவர்களுக்கு உதவுவதில் உங்களுக்கு ஆர்வம் ஏற்படும். ஆன்மிகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். இறைசேவைப் பணிகளை செய்வீர்கள். சனியின் தாக்கத்தால் பட்ட அவமானங்கள் நீங்கி, நற்பெயர் உண்டாகும்.
மகரம்:
இந்த ராசியின் நான்காம் வீட்டில் சுக்கிர பகவான் சஞ்சரிக்கிறார். இதன் விளைவாக, இந்த ராசிக்காரர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்துவார்கள். நண்பர்களால் உதவி, உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். இந்த நேரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த நேரத்தைப் பயன்படுத்தி புதிதாக தொழில் செய்ய நினைப்பவர்கள் அதைத் தொடங்குங்கள்.
தனுசு:
தனுசு ராசியின் ஐந்தாவது வீட்டில் சுக்கிர பகவான் சஞ்சரிக்கிறார். இது இந்த ராசிக்கு செல்வ யோகத்தை வழங்கும். மாணவர்கள் படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவர். காதலில் வெல்லப்போகிறீர்கள். காதல் திருமணம் கைகூடும். உங்கள் பணியிடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு ஆகியவை கிடைக்கும். மேலதிகாரிகளுடன் இணக்கமாக நடந்துகொள்வீர்கள். தொழில்முனைவோருக்கு எந்த ஒரு லாபமும் இதற்கு முன் கிடைப்பதில் பிரச்னை இருந்தால், அது இந்த காலகட்டத்தில் சரியாகும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்