Horse Gram Gravy : பெண்களின் மாதவிடாயை முறைப்படுத்தும்! கொள்ளு பருப்பில் குழம்பு செய்யலாம்! இதோ ரெசிபி!-horse gram gravy regulates menstruation in women you can make gravy in kalu dal heres the recipe - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Horse Gram Gravy : பெண்களின் மாதவிடாயை முறைப்படுத்தும்! கொள்ளு பருப்பில் குழம்பு செய்யலாம்! இதோ ரெசிபி!

Horse Gram Gravy : பெண்களின் மாதவிடாயை முறைப்படுத்தும்! கொள்ளு பருப்பில் குழம்பு செய்யலாம்! இதோ ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Feb 05, 2024 04:19 PM IST

Horse Gram Gravy : பெண்களின் மாதவிடாயை முறைப்படுத்தும்! கொள்ளு பருப்பில் குழம்பு செய்யலாம்! இதோ ரெசிபி!

Horse Gram Gravy : பெண்களின் மாதவிடாயை முறைப்படுத்தும்! கொள்ளு பருப்பில் குழம்பு செய்யலாம்! இதோ ரெசிபி!
Horse Gram Gravy : பெண்களின் மாதவிடாயை முறைப்படுத்தும்! கொள்ளு பருப்பில் குழம்பு செய்யலாம்! இதோ ரெசிபி! (kaushi's kitchen)

சோடா உப்பு – ஒரு சிட்டிகை

கொத்தமல்லி விதை – ஒரு ஸ்பூன்

வர மிளகாய் – 1

எண்ணெய் – ஒரு ஸ்பூன்

தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – ஒரு ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

கடுகு – கால் ஸ்பூன்

சீரகம் – கால் ஸ்பூன்

பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை

செய்முறை

கொள்ளு பருப்பை ஓரிரவு ஊறவைக்க வேண்டும். அதில் கற்கள் இல்லாமல் சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.

குக்கரில் வைத்து உப்பு சேர்த்து வேகவைக்க வேண்டும். பேக்கிங் சோடா சேர்த்து வேகவைத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, வரமிளகாய் மற்றும் மல்லி விதைகளை சேர்த்து வறுக்க வேண்டும். அடுத்து தேங்காய் துருவலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.

அது ஆறியவுடன் அரைக்க வேண்டும்.

கடாயை சூடாக்கி, கடுகு, சீரகம் சேர்த்து தாளித்து, அது வெடித்தவுடன் பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொரிந்தவுடன், கொள்ளு சேர்த்து வதக்க வேண்டும்.

அது வெந்தவுடன் மசாலாவை சேர்த்து கொதிக்கவிடவேண்டும். கொதித்தபின்னர் இதை மல்லித்தழை தூவி பரிமாறலாம்.

சூடான சாதம் மற்றும் டிஃபன் என அனைத்துக்கும் ஏற்றது.

கொள்ளு நன்மைகள்

கொள்ளுப் பருப்பை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறி விடும். அதே போல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு.

இதில் அதிகளவு மாவுச் சத்து உள்ளது. கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம்.

கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும்.

வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பொருமல், கண்ணோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும்.

வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும். பிரசவ அழுக்கை வெளியேற்றும்.

கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும்.

எலும்புக்கும், நரம்புக்கும் உரம் தரக் கூடியது கொள்ளுப் பருப்பு என்பதால் அதனைக் கடினமான பணிகளைச் செய்யும் குதிரைக்கும் முன்னோர்கள் அளித்தனர்.

குதிரைகள் பல மைல் தூரம் ஓடும் சக்தியை பெற்றுள்ளது அனைவரும் அறிந்ததே.

ஆனால் அந்த சக்தியின் ஒரு பகுதி அவை உண்ணும் கொள்ளுப் பருப்பில் இருந்தும் கிடைக்கிறது என்பதைப் பலர் உணர்ந்திருக்க மாட்டார்கள்.

கொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு - ஊளைச் சதையைக் குறைப்பதோடு உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது.

குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளு சூப் வைத்து குடுத்துப் பாருங்கள். சளி காணாமல் போய் விடும் என்கிறார்கள்.

அப்படி ஒரு அருமையான மருத்துவ குணம் இந்த கொள்ளுக்கு உண்டு. உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் அருந்தலாமாம்.

சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும்.

அதை விட ராத்திரி ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள். இது நிச்சயம் எடையை குறைக்கும் என்கிறார்கள்.

கொள்ளை அரைத்து பொடி செய்து வைத்துக் கொண்டால், ரசம் வைக்கும் போது சிறிது பயன்படுத்தலாம். சிலருக்கு வாயுக்களின் சீற்றத்தால் எப்போதும் வயிறு மந்தமாகவே இருக்கும்.

அவர்கள் கொள்ளு பருப்பை அரிசியுடன் சேர்த்து கஞ்சியாகவோ, வறுத்து துவையலாகவோ அல்லது ரசம் செய்தோ சாப்பிட்டு வந்தால் நன்கு பசி உண்டாகும்.

கொள்ளு ரசம் உடலை வலுவாக்கும். மாதவிலக்கை சீர்படுத்தும். கை கால் மூட்டு வலி, இடுப்பு வலியைப் போக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். ஆண்மை சக்தியைப் பெருக்கும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.