தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Double Spouses: ’இரண்டு மனைவிகள் எந்த ராசிக்கு அமையும்?’ ஜோதிடம் சொல்லும் ரகசியம்! இதோ முழு விவரம்!

Double spouses: ’இரண்டு மனைவிகள் எந்த ராசிக்கு அமையும்?’ ஜோதிடம் சொல்லும் ரகசியம்! இதோ முழு விவரம்!

Kathiravan V HT Tamil
Apr 05, 2024 09:16 PM IST

”மிதுனம், மீனம் ஆகிய இரண்டு ராசிகளும் அதி பயங்கர இரட்டை தன்மை உள்ள ராசிகளாக உள்ளன. உங்கள் லக்னத்திற்கு 7ஆவது வீடாக மிதுன வீடோ அல்லது மீன வீடோ அமைந்துவிட்டால் உங்களுக்கு இரண்டு மனைவிகள் அமைவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளன”

”மிதுனம், மீனம் ஆகிய இரண்டு ராசிகளும் அதி பயங்கர இரட்டை தன்மை உள்ள ராசிகளாக உள்ளன. உங்கள் லக்னத்திற்கு 7ஆவது வீடாக மிதுன வீடோ அல்லது மீன வீடோ அமைந்துவிட்டால் உங்களுக்கு இரண்டு மனைவிகள் அமைவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளன”
”மிதுனம், மீனம் ஆகிய இரண்டு ராசிகளும் அதி பயங்கர இரட்டை தன்மை உள்ள ராசிகளாக உள்ளன. உங்கள் லக்னத்திற்கு 7ஆவது வீடாக மிதுன வீடோ அல்லது மீன வீடோ அமைந்துவிட்டால் உங்களுக்கு இரண்டு மனைவிகள் அமைவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளன”

மிதுனம், மீனம் ஆகிய இரண்டு ராசிகளும் அதி பயங்கர இரட்டை தன்மை உள்ள ராசிகளாக உள்ளன என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உங்கள் லக்னத்திற்கு 7ஆவது வீடாக மிதுன வீடோ அல்லது மீன வீடோ அமைந்துவிட்டால் உங்களுக்கு இரண்டு மனைவிகள் அமைவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளன. 

மிதுனம் மற்றும் மீன வீடுகள் உங்கள் லக்னத்திற்கு இரண்டாவது வீடாக வந்தால் உங்களுக்கு இரண்டு விதமான பேச்சுக்களும், இரண்டு விதமான வருமானங்களும் இருக்கும். 

மூன்றாம் வீடாக இருந்தால் உங்களுக்கு இரண்டு சகோதரர்கள் இருக்க வாய்ப்பு உண்டு. 

நான்காம் இடமாக மிதுனம், மீனம் ராசிகள் இருந்தால் கண்டிப்பாக இரண்டு வீடுகள் அமைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். அம்மா ஸ்தானத்தில் மேலும் ஒருவர் இருப்பார்கள். 

ஐந்தாம் வீடாக மிதுனம், மீனம் ராசிகள் இருந்தால் இரண்டு பிள்ளைகள் இருக்கும். 

ஆறாம் வீடாக மிதுனம், மீனம் ராசிகள் இருந்தால் இரண்டு வித நோய்கள் உண்டாகும். 

ஏழாம் வீடாக மிதுனம், மீனம் ராசிகள் இருந்தால் இரண்டு மனைவிகள் இருக்கும் நிலை ஏற்படும். அல்லது மனதில் இரண்டு மனைவிகள் குறித்த சிந்தனைகள் வரும், மனது அலைப்பாயும், அதனை நிலைப்படுத்துவது உங்கள் லக்னாதிபதியின் நிலையை சார்ந்ததாக இருக்கும். உங்கள் லக்னாதிபதியை குரு பார்த்தாலோ அல்லது லக்னத்தை குரு பார்த்தாலோ,  அல்லது 7ஆம் வீட்டை குரு பார்த்தாலோ கண்டிப்பாக இது போன்ற சிந்தனைகள் உங்களுக்கு வராது. 

எட்டாம் வீட்டில் மிதுனம், மீன ராசிகள் இருந்தால் இரண்டு விதமான கண்டங்களை நீங்கள் சந்திக்க நேரிடும்.  

9ஆம் வீடாக மீனம் அல்லது மிதுன ராசிகள் வந்தால் இரண்டு வித பாக்கியங்கள் கிடைக்கும். இரண்டு விதமான குருமார்கள் அமைவார்கள், தந்தை ஸ்தானத்தில் மேலும் ஒருவர் இருப்பார். 

பத்தாம் இடத்தில் மீனம், மிதுன ராசிகள் இருந்தால் இரட்டை வருவாய் வருவாய் ஏற்படும். 

பதினோரம் இடத்தில் மிதுனம் அல்லது மீன ராசிகள் இருந்தால் இரட்டை லாபமும், இரட்டை நஷ்டமும் ஏற்படும். 

பன்னிரெண்டாம் இடத்தில் மிதுனம் அல்லது மீன ராசிகள் இருந்தால் இரட்டை செலவுகள் உண்டாகும்.  

துலாம், தனுசு ஆகிய ராசிகளும் இரட்டை தன்மை கொண்ட ராசிகளாக உள்ளது. இவர்களுக்கும் இரட்டை தன்மை இருக்கும். ஆனால் இலை மறை காயாக இருக்கும். வெளிப்படையாக தெரியாது. 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

WhatsApp channel