தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Marriage Lucky: ‘இந்த 7 ராசிகளுக்கு திருமணம் நடந்தே தீரும்’ 2023க்கு நல்ல சேதி!

Marriage Lucky: ‘இந்த 7 ராசிகளுக்கு திருமணம் நடந்தே தீரும்’ 2023க்கு நல்ல சேதி!

Stalin Navaneethakrishnan HT Tamil
Jul 26, 2023 12:32 PM IST

திருமணம் ஆகவில்லை என்கிற வருத்தமா? 2023க்குள் உங்கள் ஆசை நிறைவேறப் போகிறது! எந்ததெந்த ராசிகளுக்கு திருமண வாழ்க்கை கை கூடி வரப்போகிறது தெரியுமா?

திருமண யோகம் கைகூடும் ராசிகள்
திருமண யோகம் கைகூடும் ராசிகள்

மேஷம்:

திருமணம் 2023ல் நடக்க அதிக வாய்ப்பு. சனி பகவான் லாப ஸ்தானத்தில் உள்ளார். ஏப்ரல் மாதத்திற்கு பின் ராகுவோடு, குரு இணைந்துவிட்டார். இதனால் சட்டென்று திருமணம் நடக்கும்

துலாம்:

இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே நடந்த சனிப்பெயர்ச்சியால் அர்தாஷ்டசனியால் இல்லற வாழ்க்கை, தொழில், வியாபம் அனைத்திலும் இருந்த தடை நீங்கி, அதிர்ஷ்டம் நடந்து வரும். அந்த வகையில் புதிய விசயங்களை எதிர்பார்க்கலாம். திருமண யோகம் அமையும்.

சிம்மம்:

ராசிக்கு அதிபதி சூரியன். 2023ல் நிதி விசயத்தில் மட்டும் எச்சரிக்கை தேவை. இந்த ஆண்டு பெரிய விசயங்களை சாதிப்பீர்கள். ஓடி ஆடி உழைக்கும் ஆண்டாக இருக்கும். அனைத்து நம்பிக்கை தரும் விசயமும் நடக்கும். சனிப்பெயர்ச்சியால் திருமண தடை நீங்கும். 7 ம் அதிபதி சனிபகவான், மூலத்திரிகோணத்தில் அமர்வதால், திருமணம் கைகூடி வரும்.வேலை விசயத்தில் கவனமாக இருங்கள்

மிதுனம்:

இயற்கையாகவே கல்வி, கேள்வி ஞானம் அதிகப்படியாக இருக்கும். கடந்த 3 ஆண்டுகளாக பல பிரச்னைகளை சந்தித்தனர். அதிர்ஷ்டம் தடைபட்டது. காதல் கை மீறிப் போனது. இப்போது காதல் கை கூடும். 2023ல் வருத்தங்கள் நீங்கி, திருமண யோகம் அமையும். குழந்தை வரம் கிடைக்கும். வீட்டுக்கு புதிய நபர் கட்டாயம் வருவார். 

ரிஷபம்: 

2023ல் தொடக்கத்திலிருந்தே அதிர்ஷ்டத்தை காண்பீர்கள். பேராசையை ஒழித்துவிட்டு, நேர்மையாக செயல்பட வேண்டும். தொழிலில் நிச்சய வெற்றி அமையும். திருமண முயற்சி பலன் தரும். நல்ல திருமண பந்தம் அமையும் ஆண்டு 2023. கூடுதல் உழைப்பு பணம் தரும். எது எப்படி இருந்தாலும் திருமணம் அமைந்தே தீரும். 

மகரம்:

2ம் இடத்தில் சனி, 4ம் இடத்தில் குரு இருக்கிறார். இதனால் குடும்பம், வீடு அமைய வாய்ப்பு. கணவன், மனைவியோடு மகிழ்ச்சியான வாழ்க்கை அமைய மகர ராசிக்கு வாய்ப்பு. நீண்ட நாள் வரம் தேடியவர்களுக்கு கட்டாயம் அமையும். கடந்த பிப்ரவரி முதல் மாற்றத்தை கண்டு வருவீர்கள். விடியல் பிறந்து கொண்டிருக்கிறது மகர ராசிக்காரர்களே.

கும்பம்:

7 ம் பார்வையாக சனி பகவான் இருப்பதால், திருமண வைபோவத்தை சனிபகவான் நடத்தி வைப்பார். இதற்கு முன் விரயங்களை கொடுத்த அவர், எல்லாவற்றையும் நிவர்த்தி செய்து, உங்கள் மண வாழ்க்கையை தொடங்கி வைப்பார். 2023க்குள் உங்கள் கிரக நிலை, அவை உறுதி செய்யும். 

WhatsApp channel

டாபிக்ஸ்