Money Luck: ’மேஷம் முதல் மீனம் வரை!’ உங்கள் ஜாதகத்தில் வருமானம் வரும் ரகசியங்கள் பற்றி தெரியுமா?-discover your income potential horoscope insights for mesham to meenam signs - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Money Luck: ’மேஷம் முதல் மீனம் வரை!’ உங்கள் ஜாதகத்தில் வருமானம் வரும் ரகசியங்கள் பற்றி தெரியுமா?

Money Luck: ’மேஷம் முதல் மீனம் வரை!’ உங்கள் ஜாதகத்தில் வருமானம் வரும் ரகசியங்கள் பற்றி தெரியுமா?

Kathiravan V HT Tamil
Sep 01, 2024 08:02 PM IST

Money Luck: ஒரு ஜாதகத்தில் குரு பகவானோ அல்லது சுக்கிர பகவானோ பலம் இழந்து காணப்பட்டால் இவர்கள் பொருளாதார நிலை மிக கடினம் ஆக இருக்கும். மிக நன்றாக இருந்தால் இவர்களுக்கு ஏதோ ஒரு ரூபத்தில் பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்கும்.

Money Luck: ’மேஷம் முதல் மீனம் வரை!’ உங்கள் ஜாதகத்தில் வருமானம் வரும் ரகசியங்கள் பற்றி தெரியுமா?
Money Luck: ’மேஷம் முதல் மீனம் வரை!’ உங்கள் ஜாதகத்தில் வருமானம் வரும் ரகசியங்கள் பற்றி தெரியுமா?

நிதிநிலை சிக்கல் யாருக்கு?

முதலில் உங்கள் ஜாதகத்தில் வருமானத்திற்கான வழி குறித்து அறிந்து கொள்ள தன ஸ்தானம் எனப்படக்கூடிய இராண்டாம் இடம் பற்றி அறிந்து இருக்க வேண்டும். இரண்டாம் இடத்தில் பாவிகள், திதி சூனியாதிபதி,  ஆறாம் மற்றும் எட்டாம், பன்னிரெண்டாம் அதிபதிபதிகள் இருப்பது நிதி நிலையை சற்றுக் கடினம் ஆக்கிவிடும். அதே போல் ஒரு ஜாதகத்தில் குரு பகவானோ அல்லது சுக்கிர பகவானோ பலம் இழந்து காணப்பட்டால் இவர்கள் பொருளாதார நிலை மிக கடினம் ஆக இருக்கும். மிக நன்றாக இருந்தால் இவர்களுக்கு ஏதோ ஒரு ரூபத்தில் பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்கும். 

யாருக்கு வருமானம் சிறக்கும்?

உங்க ஜாதகத்தில் இரண்டாம் இடத்தில் ஐந்து அல்லது ஒன்பதாம் அதிபதிகளோ, சூரியன், குரு ஆகியோர் இருந்தால் நிரந்தர வருமானம் உறுதியாக இருக்கும். இவர்கள் பலம் குறைந்தால் நிரந்தரமாக வருமானம் வருவதில் சிக்கல்கள் இருக்கும். சூரியன் மற்றும் சந்திரன் வலிமை பெற்று விளங்கினால் அந்த ஜாதகருக்கு நிரந்தர வருமானம் நன்றாக இருக்கும். 

மிகப்பெரும் தாக்கம் செலுத்தும் அதிபதிகள்

இரண்டாம் அதிபதி உடன் ஐந்து, ஒன்பது, பதினொறாம் அதிபதிகளோ அல்லது சூரியனோ நல்ல நிலையில் தொடர்பு இருந்தால் கிடைக்கும் வருமானத்தை திறமையாக சேமிக்கும் திறன் இவர்களுக்கு இருக்கும். ஒருவர் பெரும் பணம் ஈட்ட தசாபுத்தி ஆதரவாக இருப்பது மிக முக்கியம் ஆக கருதப்படுகின்றது. கீழ்நிலையில் இருந்த ஒருவர் உச்சம் தொடவும், உச்சம் தொட்ட ஒருவர் கீழ் நிலையை அடையவும் தசாபுத்தி மிகப்பெரிய தாக்கம் செலுத்துகின்றது. 

கடனை தரும் ஜாதக அமைப்பு 

ஒரு ஜாதகத்தில் எட்டாம் அதிபதி ஆனவர் இரண்டாம் இடத்துடனோ, சுக்கிரன் மற்றும் குரு பகவான் உடனோ தொடர்பு பெற்று இருந்தால் பணம் ஈட்டுவதில் சிரமம் இருக்கும். அதே போல் இரண்டு, ஐந்து, ஆறாம் அதிபதிகள் மற்றும் சுக்கிரன், குரு ஆகியோர் உடன் சென்றால் சக்திக்கு மீறி கடன் வாங்கும் நிலை உண்டாகும். ஆனால் ஐந்தாம் இடம் பலம் பெற்று இருந்தால் கிரகம் கடனை அடைக்க உறுதுணையாக இருக்கும். இரண்டாம் இடத்துடன் மூன்றாம் அதிபதி தொடர்பு இருந்தால் நிலையான வருமானம் கிடைக்காது. நெருக்கடிகளுக்கே தனம் கிடைக்கும் நிலை உண்டாகும். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.