Guru Luck Palangal: குரு மீது படுத்துக்கொண்ட செவ்வாய்.. பண குவியலில் அமரும் ராசிகள்.. எல்லாம் உங்களுக்குத்தான் வாங்க!
- zodiac signs: குரு பகவானோடு செவ்வாய் பகவான் இணைந்துள்ளார். குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை பெற்று தரப்பட்டுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
- zodiac signs: குரு பகவானோடு செவ்வாய் பகவான் இணைந்துள்ளார். குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை பெற்று தரப்பட்டுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 6)
நவ கிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குரு பகவான் கடந்த மே மாதம் மூன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் மாறினார்.
(2 / 6)
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். அதிபர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை, தைரியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் செவ்வாய் பகவான். இவருடைய இடமாற்றமும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(3 / 6)
இந்த ஜூலை மாத முதல் வாரத்தில் செவ்வாய் பகவான் ரிஷப ராசியில் நுழைந்தார். இந்நிலையில் ஏற்கனவே ரிஷப ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவானோடு செவ்வாய் பகவான் இணைந்துள்ளார். குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை பெற்று தரப்பட்டுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
கும்ப ராசி: உங்கள் ராசியில் குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை அபூர்வ சேர்க்கையாக அமைந்துள்ளது. இதனால் உங்களுக்கு வரப் போகின்ற காலங்களில் நல்ல வசதி கிடைக்கக்கூடும். ஏனென்றால் இருவரும் உங்கள் நான்காவது வீட்டில் பயணம் செய்து வருகின்றனர். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
(5 / 6)
மகர ராசி: உங்கள் ராசியில் குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை ஐந்தாவது வீட்டில் நிகழ்ந்து உள்ளது. இதனால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளால் உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். வருமானம் அதிகரிக்கக்கூடும்.
(6 / 6)
மேஷ ராசி: குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை உங்கள் ராசிக்கு பண பலன்களை அதிகப்படுத்தி கொடுக்கப் போகின்றது. எதிர்பாராத நேரத்தில் உங்களுக்கு நிதி வரவு அதிகரிக்கும். பேச்சுத்திறன் மூலம் அனைத்து காரியங்களையும் வெற்றி காண்பீர்கள். மற்றவர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். எடுத்துக் கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
மற்ற கேலரிக்கள்