மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று நவ.15 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க..!
மேஷம் ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினருக்கு இன்று (நவம்பர் 15) வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி விரிவாக இங்கு தெரிந்து கொள்ளலாம்.
வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் ஒரு கிரகம் ஆட்சி செய்கிறது. கிரக விண்மீன்களின் இயக்கத்தால் ஜாதகம் கணக்கிடப்படுகிறது. ஜோதிட கணக்குப்படி, நவம்பர் 15 ஆம் தேதியான இன்று சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும், சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சிறிய பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசி ஆகிய 6 ராசியினருக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.
மேஷம்
குடும்ப உறுப்பினர்களுடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கடன் தொடர்பான நெருக்கடிகள் குறையும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். உறவுகளின் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பொன், பொருட்கள் பற்றிய எண்ணம் மனதில் மேம்படும். உத்தியோகப் பணிகளில் திறமைகள் வெளிப்படும். ஆதரவு நிறைந்த நாள்.
ரிஷபம்
வரவுக்கு மீறிய செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். விலகிச் சென்றவர்கள் பற்றிய எண்ணம் தோன்றி மறையும். திடீர் செலவுகள் மூலம் கையிருப்புகள் குறையும். சிறு சிறு விஷயங்களுக்கு பொறுமையுடன் முடிவெடுக்கவும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். சமூக நிகழ்வுகளால் புதிய கண்ணோட்டங்கள் ஏற்படும். சிக்கல் மறையும் நாள்.
மிதுனம்
கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த வேறுபாடுகள் நீங்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார பணிகளில் மேன்மை உண்டாகும். உடன் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகப் பணிகளில் எண்ணங்கள் ஈடேறும். விரும்பியதை வாங்கி மகிழ்வீர்கள். தன வரவுகளால் சேமிப்புகள் மேம்படும். தடைகள் குறையும் நாள்.
கடகம்
நெருக்கமானவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். புதிய முயற்சியால் மாறுபட்ட சூழல் உண்டாகும். விவசாயப் பணிகளில் மேன்மை ஏற்படும். விலகியிருந்தவர்கள் விரும்பி வருவார்கள். மற்றவர்களின் வளர்ச்சிக்கு ஆதாரமாக செயல்படுவீர்கள். உத்தியோகம் நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். அசதி விலகும் நாள்.
சிம்மம்
எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வெளியூர் பயணத்தில் இருந்துவந்த தடைகள் மறையும். பூர்வீக சொத்துக்களில் சில மாற்றங்களை செய்வீர்கள். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். கடினமான சில விசயங்களை புரிந்து கொள்வீர்கள். நண்பர்களின் சந்திப்பு மூலம் மாற்றம் உண்டாகும். குழந்தைகள் பற்றிய புரிதல் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.
கன்னி
நெருக்கமானவர்கள் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் தோன்றி மறையும். நிதானமான பேச்சுக்களால் நம்பிக்கை மேம்படும். செயல்பாடுகளில் ஆர்வமின்மையான சூழல் உண்டாகும். பயணம் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். வரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்