துலாம் ராசிக்கு மறையும் சனியால் மாற்றம் பிறக்குது! திடீர் அதிஷ்டம் அடிக்குது! சனி பெயர்ச்சி பலன்கள் 2025!
ஐந்தாம் வீட்டான கும்பம் ராசியில் உள்ள சனி பகவான் ஆறாம் வீடான மீனம் ராசிக்கு வருகிறார். ராசிக்கு 3, 6, 11, 12ஆம் இடங்களில் சனி இருந்தால் யோகம் என்பதால் தற்போது நடக்க உள்ள சனி பெயர்ச்சி மிகுந்த நன்மைகளை தருவதாக அமையும்.
காலபுருஷனின் 7ஆம் வீடான துலாம் ராசியில் சனி பகவான் உச்சம் பெறக்கூடிய ராசியாகும். தர்மத்தின் வழி செல்வதில் ஆர்வம் கொண்ட துலாம் ராசிக்காரர்கள் சமூகத்தில் மதிப்புடன் வாழ்வார்கள். அனைவரையும் சமமாக பார்த்து இதமாக பேசும் தன்மை துலாம் ராசிக்கு உண்டு. இவர்களுக்கு ஏமாறத் தெரியுமே தவிர யாரையும் ஏமாற்றத் தெரியாது.
சனி பகவானால் கிடைக்கும் யோகம்!
ஐந்தாம் வீட்டான கும்பம் ராசியில் உள்ள சனி பகவான் ஆறாம் வீடான மீனம் ராசிக்கு வருகிறார். ராசிக்கு 3, 6, 11, 12ஆம் இடங்களில் சனி இருந்தால் யோகம் என்பதால் தற்போது நடக்க உள்ள சனி பெயர்ச்சி மிகுந்த நன்மைகளை தருவதாக அமையும்.
ரியல் எஸ்டேட், ஹோட்டல் தொழில், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், காவலர்கள், அரசியல்வாதிகளுக்கு ஏற்றங்கள், மாற்றங்கள் உண்டாகும். மீனத்தில் உள்ள ராகு உடன் சனி சேர்வதால் நண்பர்கள் மூலமாகவோ அல்லது பெண் மூலமாகவோ பாதிப்புகள் ஏற்படலாம்.
ரிஷபம் ராசியில் உள்ள குரு பகவானால் இடமாற்றம் உண்டாகும். சிலர் தொழில், வியாபாரம், வேலை, கல்விக்காக வெளிநாடு செல்ல வேண்டி இருக்கும். 12ஆம் வீட்டில் உள்ள கேது பகவான் ஆனவர் ஞானம், தெளிவை போதிப்பார்.
வீடு, நிலம், வாகனம், மனைகளை புதிதாக வாங்குவீர்கள். உணவுகளை ரசித்து ருசித்து உண்பீர்கள், சுற்றுலா செல்வீர்கள். அதே வேளையில் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மூச்சு, அடி வயிறு, நுரையீரல் தொடர்பான வியாதிகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உங்கள் எதிர்கள் யார் என்பதை அறிந்து அவர்கள் முன்னர் முன்னேற்றுவீர்கள். திடீர் அதிர்ஷ்டம், திடீர் பணவரவு, திடீர் பதவி உயர்வுகள் உண்டாகும்.
சனி பகவானின் பார்வையும் பலன்களும்!
சனி பகவான் 3ஆம் பார்வையாக ஆயுள் ஸ்தானத்தை பார்ப்பதால் உடல் நலனில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
7ஆம் பார்வையாக 12ஆம் வீட்டை பார்ப்பதால் தாம்பத்ய உறவுகளில் தற்காப்புடன் செயல்படுவது நல்லது.
3ஆம் வீட்டை 10ஆம் பார்வையாக பார்ப்பதால் சகோதர உறவுகளுடன் பிரச்னைகள் உண்டாகும்.
வழிபாடும் பரிகாரமும்!
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறுவில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள சனி பகவானை வழிபாடு செய்து, நள தீர்த்தத்தில் குளித்து, நல்லெண்ணை தீபம் ஏற்றினால் நன்மைகள் உண்டாகும். சனி பகவானின் காயத்ரி மந்திரத்தை தினமும் 21 முறை உச்சரிப்பதன் மூலமும், உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள சிவ ஆலயத்திற்கு சென்று எள் தானம் செய்வதன் மூலமும் வாழ்கையில் உண்டாகும் பிரச்னைகள் நீங்கும்.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.