திருமண தடைகள் நீங்க எளிய பரிகாரம்.. ஆண்களும் பெண்களும் ஏற்ற வேண்டிய தீபம் எது தெரியுமா!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  திருமண தடைகள் நீங்க எளிய பரிகாரம்.. ஆண்களும் பெண்களும் ஏற்ற வேண்டிய தீபம் எது தெரியுமா!

திருமண தடைகள் நீங்க எளிய பரிகாரம்.. ஆண்களும் பெண்களும் ஏற்ற வேண்டிய தீபம் எது தெரியுமா!

Pandeeswari Gurusamy HT Tamil
Oct 16, 2024 11:26 AM IST

நல்ல வரன் அமைவது போல் எல்லாம் கூடி வரும். கடைசிநேரத்தில் அந்த வரன் ஏதோ ஒரு காரணத்தால் தட்டி கழிந்து விடும். இதனால் பெற்றோர்களும் பிள்ளைகளும் மிகவும் வருத்தம் அடைவர். இது போன்ற நேரங்களில் நாம் மனம் தளராமல் இறைவன் மீது முழுமையான நம்பிக்கையோடு வழிபாடு செய்ய வேண்டும்.

திருமண தடைகள் நீங்க எளிய பரிகாரம்.. ஆண்களும் பெண்களும் ஏற்ற வேண்டிய தீபம் எது தெரியுமா!
திருமண தடைகள் நீங்க எளிய பரிகாரம்.. ஆண்களும் பெண்களும் ஏற்ற வேண்டிய தீபம் எது தெரியுமா!

திருமண தடை உள்ள பெண்களுக்கான பரிகாரம்

நாம் அனைவர்க்கும் தெரிந்த ஒரு விஷயம் மருதாணி செடியில் அம்பிகை வாசம் செய்கின்றாள் என்பது. பொதுவாக திருமணம் தள்ளி போகும் பெண்கள் வெள்ளிக்கிழமை அம்பாளை மனமுருகி வழிபாடு செய்ய வேண்டும். மேலும் இரண்டு அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி ஒவ்வொரு அகல் விளக்கிலும் தலா இரண்டு மருதாணி இலைகளை இட்டு தீபம் ஏற்ற வேண்டும். இப்படி தீபம் ஏற்றி மனதார வழிபாடு செய்ய வேண்டும்.

இதை ஐந்து வெள்ளிகிழமைகள் செய்ய வேண்டும். இந்த பரிகாரங்களை திருமணம் ஆகாத பெண்கள் தான் செய்யவேண்டும். அவர்களுக்கு பதிலாக அம்மா அப்பா, சகோதர சகோதரிகள் யாரும் செய்யக்கூடாது. இப்படி நம்பிக்கையோடு திருமணம் ஆகாத பெண்கள் விளக்கு ஏற்றி வர திருமணத்தில் குறிப்பிட்ட தோஷம் என்று எதுவும் இருந்தால் கூட அது விலகி விடும். விரைவில் திருமணம் நடைபெறும். இந்த பரிகாரத்தை பெண்கள் மாதவிடாய் வாரத்தில் செய்வதை தவிர்க்க வேண்டும்.

திருமண தடை உள்ள ஆண்களுக்கான பரிகாரம்

திருமண தடை என்பது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களும் சந்திக்கும் ஒரு பிரச்சனைதான். இப்படி திருமண தடையால் பாதிக்கப்படும் ஆண்கள் விநாயகருக்கு இரண்டு மண் அகல் விளக்கில் தேங்காய் எண்ணெய் ஊற்ற வேண்டும். ஒவ்வொரு அகல் விளக்கிலும் தலா இரண்டு மருதாணி இலைகளை போட்டு தீபம் ஏற்றி விநாயகப்பெருமானை மனதார வணங்க வேண்டும். இந்த பரிகாரத்தை ஆண்கள் செய்து வரும் பட்சத்தில் நல்ல மண வாழ்க்கையை விநாயகர் பெருமான் அமைத்து தருவார் என்பது நம்பிக்கை. ஆண்கள் ஐந்து ஞாயிற்றுக்கிழமைகள் செய்யவேண்டும். திருமணமாகாத ஆண்கள் மட்டுமே இந்த மருதாணி இலை விளக்கு ஏற்ற வேண்டும். அவர்களுக்கு பதிலாக அவர்களது பெற்றோரோ, அல்லது சகோதர சகோதரிகளோ இந்த விளக்கு ஏற்றுவதால் பலன் இல்லை.

திருமணம் தள்ளி போகும் ஆண்கள் நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து வர விரைவில் நல்ல மணப்பெண் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும் அவர்கள் வாழ்க்கையில் மென்மேலும் முன்னேற்றம் அடைவார்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

ஆன்மீகம் தொடர்பான பல தகவல்களை தெரிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்து இருங்கள்!

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்