Morning Quotes : அதிகாலையில் எழுந்த முதல் ஒரு மணி நேரத்தில் குழந்தைகள் செய்யவேண்டியது இதைத்தான்!
Morning Quotes : அதிகாலையில் எழுந்த முதல் ஒரு மணி நேரத்தில் உங்கள் குழந்தைகள் என்ன செய்யவேண்டும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
காலை எழுந்தவுடன் முதல் ஒரு மணி நேரம் குழந்தைகள் என்ன செய்யவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
அதிகாலை பொன்னான நேரத்தை பயன்படுத்துங்கள்
அதிகாலையில் குழந்தைகளை துயில் எழச்செய்வது மிகவும் கடினமான ஒன்று. அவர்களை எழவைக்கும் இந்த பொன்னான நேரத்தில் முதல் ஒரு மணி நேரத்தில் நீங்கள் செய்யும் காரியங்கள்தான் உங்களின் மொத்த நாளையும் சுறுசுறுப்பானதாக மாற்றும் நாளாகும். அப்போது நீங்கள் என்னசெய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
ஸ்ட்ரட்சிங்
காலையில் எழுந்தவுடன் குழந்தைகள் சின்ன சின்ன உடற்பயிற்சிகளை செய்யவேண்டும். குறிப்பாக அவர்களை தோப்புக்கரணம் போட வைப்பது நல்லது. அது அவர்களின் மூளைக்கு சுறுசுறுப்பு அளிக்கும். மேலும் உறக்கத்தில் உள்ள தசையை விழிக்கச் செய்யும். உடலின் நெகிழ்தன்மையை அதிகரிக்கும். அந்த நாளுக்காக உடலை தயார்படுத்தும்.
நீர்ச்சத்து
நாம் உறங்கும் நேரத்தில் நமது உடல் நீர்ச்சத்ததை இழந்திருக்கும். எனவே காலை எழுந்தவுடன், உங்கள் குழந்தை ஒரு டம்ளர் தண்ணீர் பருகுவதை உறுதிப்படுத்துங்கள். இதனால் அவர்களுக்கு தேவையான நீர்ச்சத்துக்கள் கிடைக்கும்.
சூரிய ஒளியில் சிறிது நேரம் இருப்பது
இயற்கை ஒளி உங்கள் குழந்தை உடலின் சிர்கார்டியன் ரிதம் அதாவது உறக்கம் மற்றும் விழிப்பு கடிகாரத்தை நன்றாக இயங்க வைக்கும். இது மனதை ஊக்கப்படுத்தி, குழந்தைகளை எச்சரிக்கையுடன் இருக்க வைக்கும்.
காலை வழக்கம்
உங்கள் குழந்தைகளுக்கு சரியான காலை வழக்கத்தை நீங்கள் அறிமுகப்படுத்தவேண்டும். காலையில் எழுந்தவுடன் பற்களை துலக்குவது, முகத்தை கழுவுவது என அவர்கள் செய்யவேண்டும். இது அவர்கள் சுதந்திரமாக செயல்படவும், அவர்களின் ஆரோக்கிய பழக்கத்தையும் அதிகரிக்கச் செய்யும்.
ஆரோக்கியமான காலை உணவு
காலையில் எழுந்தவுடன் காலைக்கடன்களை முடித்துவிட்டு, பள்ளி கிளம்பிச் செல்லும் முன், சரிவிகித உணவு உட்கொள்வது உங்கள் உடலுக்கு நல்லது. உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலைக் கொடுக்கிறது. உங்கள் கவனத்தை அதிகரிக்கச் செய்கிறது. நாள் முழுவதும் கற்க உதவுகிறது.
தியானம்
உங்கள் குழந்தைகளுக்கு தியானம் போன்ற மனநிறைவைத்தரும் பழக்கங்களை கற்றுக்கொடுப்பது நல்லது. எளிமையான தியானம் உங்கள் குழந்தைகளின் கவனம் அதிகரிக்க உதவும். பதற்றத்தை குறைக்கும், அந்த நாளை அமைதியாக துவங்க வழிவகுக்கும்.
நன்றி பழக்கம்
உங்கள் குழந்தைகள் எப்போதும் நன்றியுடையவர்களாய் இருக்கவேண்டும். நன்றியை வெளிப்படுத்துவது, உங்கள் வாழ்வில் நேர்மறை ஆற்றல், மீண்டு எழும் திறன் என அனைத்துக்கும் வழிவகுக்கும். நன்றியுடன் இருப்பது உங்களின் மனநலனுக்கும் நல்லது. எனவே இந்த புதிய நாளுக்காக நன்றியுரைத்து உங்கள் நாளை துவங்குங்கள்.
வீட்டு வேலைகள்
உங்கள் குழந்தைகளை அவர்களின் வயதுக்கு ஏற்ப சிறிய வேலைகளை செய்ய வைக்கவேண்டும். அவர்கள் படுத்த படுக்கையை அவர்கள் சுத்தம் செய்யவேண்டும். அவர்களின் அறையை தூய்மையாக வைத்துக்கொள்வது என அவர்கள் செய்யும்போது, அவர்களின் பொறுப்பு அதிகரிக்கும். மேலும், வீட்டில் உள்ள அனைவருக்கும் வேலை பகிரப்பட்டு, வேலைப்பளு குறையும். வீட்டிற்கு வேலை செய்வது நமது கடமை எனவும் உணரச் செய்யும்.
உடற்பயிற்சி
உங்கள் குழந்தைகளை உடற்பயிற்சி செய்ய வைப்பது, விளையாட வைப்பது, நடனம் என அவர்கள் பழகும் சிறுசிறு பழக்கங்கள்தான் அவர்களின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது அவர்களின் மனநிலையையும், மூளையின் இயக்கத்தையும் அதிகரிக்கிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்