Career Astrology: ’மேஷம் முதல் மீனம் வரை!’ உச்சம் தொடவும், கீழே விழவும் கேது பகவான் தரும் தொழில்கள்!
Career Astrology: கேது பகவான் ஞானகாரகன் என அழைக்கப்படுகின்றார். நவகிரக வரிசையில் அதிக வலு கொண்ட கிரகமாக கேது விளங்குகிறார். கேதுவுக்கு அடுத்தபடியாக ராகு பகவானும், அடுத்த நிலையில் மற்ற கிரங்களும் உள்ளனர்.
நிழல் கிரகங்களான ராகு-கேது ஆகியோருக்கு உருவம் கிடையாது. இவர்களுக்கு மனிதர்களின் மூளையை கட்டுப்படுத்தும் தன்மை உண்டு. ராகு பகவான் ஒருவரது செயலை விரிவுபடுத்திக் கொண்டே செல்வார். ஆனால் கேது பகவான் சுருக்கி கொண்டே செல்வார்.
நவகிரகங்களில் வலு கொண்ட கேது
ஒருவர் ஐம்புலன்களை அடக்கும்போது ஒருவர் ஞானம் அடைவார் என்பதால், கேது பகவான் ஞானகாரகன் என அழைக்கப்படுகின்றார். நவகிரக வரிசையில் அதிக வலு கொண்ட கிரகமாக கேது விளங்குகிறார். கேதுவுக்கு அடுத்தபடியாக ராகு பகவானும், அடுத்த நிலையில் மற்ற கிரங்களும் உள்ளனர். பற்று அற்ற நிலையில் ஜாதகரை கொண்டு வந்து, உறவுகளை அறுத்து, உண்மையை பட்டவர்த்தனமாக காட்டிவிடும் கிரகமாக கேது பகவான் உள்ளார்.
கேதுவுடன் சுப மற்றும் பாவர்களின் தொடர்பு
ஒருவரது ஜாதகத்தில் சுபர்களின் இணைவு அல்லது தொடர்பு பெற்ற கேது ஜாதகரை ஞானவானாகவும், பாவர்களின் தொடர்பு பெற்ற கேது அலைந்து திரிய வைத்து ஜாதகரை துன்பப்படுத்துவார். லௌகீக வாழ்கையில் அதிக கவனம் செலுத்தாமல் இருப்பதன் மூலம் கேதுவின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்.
கேது உடன் தொடர்பு உடைய தொழில்கள்
மந்திரம், தந்திரம், ஔசிதம், செய்வினை, பில்லிசூனியம், செப்படி வித்தைகள், அலைந்து திரிதல், பலதேச வாசம், புதையல் வேட்டை, ஞானமார்க்கம், மட ஆதிபத்தியம், ஆன்மீகம் சார்ந்த தொழில்கள், மருத்துவம், வேதாந்தம், சித்தாந்தம், தர்க்க வாதம், மாற்று மருத்துவம், மாயாஜாலம், புகைப்படத்தொழில், சமூகவிரோத செயல்கள் உள்ளிட்டவை கேது உடன் தொடர்பு உடையது.
கிரங்களோடு சேர்ந்து கேது தரும் தொழில்கள்
ஒருவருடைய ஜாதகத்தில் கேது பகவான் நல்ல நிலையில் இருந்தால், ஞானவானாக மாற்றுவார். ஆனால் ஜாதகத்தில் கெட்டநிலையில் கேது இருந்தால் ஜாதகரை கீழ்த்தரமான செயல்களை செய்ய வைப்பார்.
புதனோடு கேது சேரும்போது இயக்குநர், இயங்குதல், இயக்குதல், புகைப்பட கலைத்துறை சார்ந்த தொழில்களை தருவார்,
சூரியனோடு கேது சேரும்போது அரசுக்கு கீழ் வேலை செய்யும் பணிகள் மற்றும் மருத்துவர்ம் சார்ந்த வேலைகளை தருவார்.
செவ்வாய் உடன் கேது சேரும்போது கட்டடம் சார்ந்த தொழில்களில் வெற்றி தருவார். செவ்வாயை போல் கேது செயல்படுவார் என்பதால் சில சமயம் செவ்வாய் சார்ந்த தொழில்களான ரியல் எஸ்டேட், விளையாடு, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் கேது சிறந்து விளங்க வைப்பார்.
குரு உடன் கேது சேரும்போது ஜாதகருக்கு ஞானத்தெளிவை கொடுப்பார். மடம், முதியோர் இல்லம், ஆஸ்ரமம், குழந்தைகள் இல்லம், நிதி நிறுவனம் சார்த தொழில்களை தருவார்.
சுக்கிரன் உடன் கேது சேரும்போது, பெண்களுக்கு எதிரான பிரச்னைகளை ஏற்படுத்தும்.
சனி உடன் கேது சேரும்போது ஏமாற்று பேர் விழியாக இருந்து மோசடி செய்யும் நிலை உண்டாகும்.
சந்திரன் உடன் கேது சேரும்போது மனோத்தத்துவ நிபுணர், துப்பறிவாளன் உள்ளிட்ட தொழில்கள் ஏற்படும்.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:-
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்