HT Yatra: ராகு கேது வழிபடும் சிவபெருமான்.. நாகங்களாக வருகை.. தோஷங்கள் போக்கும் காளஹஸ்தீஸ்வரர்
Kalahastheeswarar temple: சிவனின் சிறப்பு மிகுந்த கோயில்கள் இன்று வரை காலத்தால் அழிக்க முடியாத அளவிற்கு இருந்து வருகிறது. அப்படிப்பட்ட திருக்கோவில்களில் ஒன்றுதான் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில்.
மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை வைத்திருக்கக்கூடிய சிவபெருமான் இந்தியா முழுவதும் கோயில் கொண்டு வாழ்ந்து வருகிறார். குறிப்பாக தமிழ்நாட்டின் மன்னர்களால் போற்றப்பட்டு மிகப் பழமையான கோயில்களில் சிவபெருமான் வாழ்ந்து வருகிறார்.
பல்வேறு விதமான சிறப்பு மிகுந்த கோயில்கள் இன்று வரை காலத்தால் அழிக்க முடியாத அளவிற்கு இருந்து வருகிறது. அப்படிப்பட்ட திருக்கோவில்களில் ஒன்றுதான் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில்.
தல பெருமை
இந்த கோயிலில் மூலவராக சிவபெருமான் முயற்சி இருக்கிறார். மூலவர் அமர்ந்திருக்கும் பிரகாரத்திற்கு மேற்கு பகுதியிலும் வடக்கு பகுதியிலும் இருக்கக்கூடிய புற்றில் இருந்து நாகங்கள் சிவபெருமானை தரிசித்து விட்டு செல்வதை கண்டுள்ளதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
நாகங்கள் இந்த தளத்தில் வழிபட்டு இருப்பதாகவும் மேலும் இறைவனின் திருநாமம் காளஹஸ்தீஸ்வரர் என்பதன் காரணமாகவும் இது ராகு கேது தோஷ நிவர்த்தி தளமாக விளங்கி வருகின்றது.
மகா சிவராத்திரி திருநாள் அன்று காலை 6 மணியில் இருந்து 6:30 மணி வரை மூலவர் மீது சூரிய ஒளி விழுகின்றது. அப்போது அவருக்கு சிறப்பு அலங்காரங்கள் மற்றும் அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது இது மிகவும் சிறப்பு மிக்கதாக கூறப்படுகிறது.
இந்த கோயிலுக்கு வந்து மழை வேண்டுமென பக்தர்கள் வழிபட்டால் அந்தப் பகுதியில் கண்டிப்பாக மழை பெய்யும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது. இப்போதும் இதுகுறித்து வேண்டுதல் செய்வதாக விவசாயிகள் கூறி வருகின்றனர். வாழ்க்கையில் பயம் மற்றும் மனம் குழப்பம் இருக்கக்கூடியவர்கள் திங்கட்கிழமை அன்று நடைபெறக்கூடிய ருத்ர திரிசசி அர்ச்சனையின் போது கலந்து கொண்டால் அனைத்தும் நிவர்த்தி அடையும் எனக் கூறப்படுகிறது.
இந்த கோயிலில் இருக்கக்கூடிய மூலவர் கிழக்கு நோக்கி காட்சி கொடுத்து வருகிறார். இவரை வணங்கி வழிபட்டால் வாழ்வில் இருக்கக்கூடிய துன்பங்கள் அனைத்தும் விலகும் மேலும் சர்ப்ப தோஷங்கள் விலகும் எனக் கூறப்படுகிறது. கருவறையில் வாசலில் இடதுபுறம் முருகப்பெருமானும், வலது புறம் விநாயகப் பெருமானும் காட்சி கொடுத்து வருகின்றனர்.
இந்த கோயிலில் ஞானப் பூங்கோதையாக அம்பாள் காட்சி கொடுத்து வருகிறார். இவருக்கு தனி சன்னதி உள்ளது இவர் தெற்கு நோக்கி அருள் பாலித்து வருகிறார். தலவிருட்சமாக வில்வமரம் விளங்கி வருகிறது.
தல வரலாறு
1500 வருடங்களுக்கும் முன்பில் இருந்தே காளஹஸ்தீஸ்வரராக சிவபெருமான் இங்கு அருள் அளித்த வருவதாக கூறப்படுகிறது. புஜங்கன் மற்றும் காலம் என்று இரு நாகங்கள் தங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தை போக்கிக் கொள்ள இந்த திருத்தலத்தில் வீற்றிருக்கக்கூடிய காளகஸ்தீஸ்வரரை வந்து வழிபட்டு தங்களது தோஷத்தை நீக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் ராகு கேது அம்சங்களாக கருதப்படுகின்றனர்.
கரிகால சோழன் கொங்கு மண்டலத்தை ஆட்சி செய்து வந்த பொழுது இந்த கோயிலை கட்டியதாக தொல்லியல் ஆராய்ச்சி துறையினர் பதிவின் மூலம் கண்டுபிடித்துள்ளனர். இந்த கோயில் இருக்கக்கூடிய 30 ஏக்கர் நிலத்தை மைசூர் சமஸ்தானம் சிவபெருமானுக்காக நன்கொடையாக கொடுத்ததாக கூறப்படுகிறது.
அமைவிடம்
இந்த திருக்கோயில் கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள காளம்பாளையம் என்ற ஊரில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் மற்றும் வாகன வசதிகள் உள்ளன.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9