தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lagnam: ‘மேஷம் முதல் மீனம் வரை!’ லக்னத்தில் உள்ள சந்திரன் தரும் அபார நன்மைகள்! உங்கள் வாழ்கை இப்படித்தான் இருக்கும்!

Lagnam: ‘மேஷம் முதல் மீனம் வரை!’ லக்னத்தில் உள்ள சந்திரன் தரும் அபார நன்மைகள்! உங்கள் வாழ்கை இப்படித்தான் இருக்கும்!

Kathiravan V HT Tamil
Apr 22, 2024 08:16 PM IST

”தாயின் மீது அதிக அன்பு கொண்டவர்களாக விளங்கும் இவர்கள், குடும்ப உறவுகளை அதிகம் நேசிக்கும் பறந்து விரிந்த மனதிற்கு சொந்தக்காரர்கள் ஆவார்.”

லக்னத்தில் சந்திரன் இருப்பதால் ஏற்படும் நன்மைகள்
லக்னத்தில் சந்திரன் இருப்பதால் ஏற்படும் நன்மைகள்

ஜோதிடத்தை பொறுத்தவரை சந்திரன் உள்ள வீட்டின் அடிப்படையிலேயே ஒருவருக்கு ராசி தீர்மானிக்கப்படுகிறது.   

ஒருவருக்கு லக்னத்தில் சந்திரன் இருந்தால், ராசியும், லக்னமும் ஒன்றாக இருப்பதாக அர்த்தம். எடுத்துக்காட்டாக ஒருவருக்கு மகர லக்னம் எனில் லக்னத்தில் சந்திர பகவான் இருந்தால் அவருக்கு மகர ராசி என்று பொருள் ஆகும். 

லக்னத்தில் சந்திரன் உள்ளவர்கள் பயண பிரியர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு சுற்றுலா மீது அதீத ஆர்வம் இருக்கும். ஹோட்டல்களுக்கு சென்று உணவு சாப்பிடுவதில் அலாதி பிரியம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

தாயின் மீது அதிக அன்பு கொண்டவர்களாக விளங்கும் இவர்கள், குடும்ப உறவுகளை அதிகம் நேசிக்கும் பறந்து விரிந்த மனதிற்கு சொந்தக்காரர்கள் ஆவார். 

இவர்களது வாழ்கை ஏற்றமும், இறக்குமும் நிறைந்து காணப்படும். சந்திரனால் சில நேரங்களில் வாழ்கை மீது உள்ள நம்பிக்கையை குறைத்து மன சஞ்சலங்களை ஏற்படுத்துவார். ஏதோ ஒன்றை இழந்தது போன்ற எண்ணம் உங்களுக்கு ஏற்படும். 

லக்னத்தில் சந்திரன் உள்ளவர்கள் வாழ்கைத் துணையை பெரிதும் நேசிப்பார்கள். இவர்களுக்கு கிடைக்கும் வாழ்கைத்துணை அழகானவர்களாக இருப்பார்கள். உள்ளூரிலோ அல்லது அருகிலேயோ அல்லது உறவுகளிலேயோ இவர்களுக்கு திருமணம் நடக்கும், அப்படி நடக்கவில்லை என்றால் சந்திரனுக்கு பாவிகள் தொடர்பு இருக்கும் என்று பொருள். 

சந்திரன் லக்னத்தில் இருந்து கேதுவோ, ராகுவோ, சனியோ அல்லது லக்ன பாவிகளோ பார்த்தால் முக அழகு கெடும். தோல் பிரச்னைகள், சளித் தொந்தரவு, மன அழுத்தம், தூக்கம் இன்மை உள்ளிட்டவை ஏற்படும். 

பயணம் சார்ந்த தொழில்கள் இவர்களுக்கு பலன் அளிக்கும். உணவு, உடை, திரவம் சார்ந்த தொழில்கள் மீது இவர்களுக்கு ஈடுபாடு அதிகம் இருக்கும். 

திருமணம் ஆன உடனேயே இடமாறி செல்ல வாய்ப்பு உண்டு. இடமாற்றம் இவர்களுக்கு வளர்ச்சியை கொடுக்கும். சொந்த ஊரை விட்டு வெளியே சென்று பணியோ அல்லது தொழிலோ செய்தால் யோகம் ஏற்படும்.

இவர்களுக்கு தந்தை உடன் கருத்து வேறுபாடுகள் அல்லது பிரச்னைகள் இருக்கும். வேகமான கிரமான சந்திரனை போல இவர்களும் வேகமாக இருப்பார்கள், சிக்கனமானவராக இருந்தாலும், பயணத்திற்கு செலவு பார்க்க மாட்டார்கள். லக்னத்தில் சந்திரன் உள்ளவர்களுக்கு உடலில் ஏதோ ஒரு இடத்திலாவது தழும்புகள் இருக்கும். 

அம்மன் வழிபாடு செய்வது, அம்மாவின் மனதை நோகடிக்காமல் இருப்பது இவர்களுக்கு வாழ்கையில் மேன்மையை தரும். ஆண்டுக்கு ஒரு முறையாவது நதிநீர் ஆடுவது நன்மைகளை கொண்டு வந்து சேர்க்கும்.

கோயில்களுக்கும், இல்லாதவர்களுக்கும் அன்னதானம் தருவது வாழ்கையில் மேன்மை தரும். திங்கள் கிழமைகளில் திருப்பதி சென்று வருவது மன நிம்மதியை தரும். 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

WhatsApp channel